scorecardresearch

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவுக்கு இவ்வளவு ரசிகர்களா? ஷூட்டிங் ஸ்பாட் ரணகளம்

Serial Actor Venkat Ranganathan Meet Fans : பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் வெங்கட் ரங்கநாதன் படப்பிடிப்பு தளத்தில் தனது ரசிகர்களை சந்தித்துள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவுக்கு இவ்வளவு ரசிகர்களா? ஷூட்டிங் ஸ்பாட் ரணகளம்

Pandian Stores Serial Actor Tamil News : தற்போதைய காலகட்டத்தில் திரைப்படங்களுக்கு இணையாக தொலைக்காட்சி சீரியல்களுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இதற்கு முக்கிய காரணமாக கொரோனா ஊரடங்கு என்றே கூறலாம். கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவின் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி கிடந்த சமயத்தில் தொலைக்காட்சிதான் இருக்கும் ஒரே பொழுதுபோக்கு என்ற நிலை ஏற்பட்டது.

இதன் காரணமாக அதற்கு முன்பு சீரியலே பார்க்காத பலரும் தங்களது கவனத்தை சீரியல் பக்கம் திருப்பினர். இதனால் தொலைக்கட்சி டிஆர்பிரேட்டிங் மளமளவென எகிறியது. அதற்கு ஏற்றார் போல் தொலைக்கட்சி சேனல்களும், ரசிகர்களின் ரசனைக்கேற்ப சீரியலை ஒளிபரப்பி வந்தனர். இதனால் சினிமா நடிகர்களுக்கு இணையாக சீரியல் நடிகர் நடிகைகளும் அதிக ரசிகர்களை பெற்று வருகின்றனர்.

அந்த வகையில் விஜய் டிவியின் ஹிட் சீரியல் என்று பெயரெடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். சகோதர பாசம், கூட்டு குடும்பத்தின் முக்கியத்துவம் பற்றி எடுத்து கூறும் இந்த சீரியல், கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொரோனா ஊரடங்கு காரணமாக  நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரில் பாக்கியலட்சுமி சீரியலுடன் இணைந் மகாசங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் இந்த தொடரில் நடித்து வரும் நடிகர் நடிகைகள் சமூக வலைதளங்களில் எப்போது ஆக்டீவாக உள்ளனர். இவர்களுக்கென்று தனித்தனியாக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

இந்நிலையில் இந்ததொடரில் சகோதர்ர்கள் நான்கு பேரில் 2-வது சகோதரராக ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர்நடிகர் வெங்கட் ரங்கநாதன். இவர் சன்டிவியில் ரோஜா சீரியலில் நடித்து வந்தாலும், இந்த சீரியலின் மூலம் பிரபலமானார். தற்போது  இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் உருவாகிவிட்டது. இந்நிலையில் தற்போது இவர் நடித்து வரும் ரோஜா  சீரியலின் ஷூட்டிங்கின் போது நடிகர் வெங்கட்-யை காண ரசிகர்கள் பலர் படப்படிப்பு தளத்திற்கு வந்துள்ளனர்.

ரசிகர்களை பார்த்த வெங்கட் மாடியில் இருந்து இறங்கி வந்து ரசிகர்களை சந்தித்துள்ளார். இதனால் சந்தோஷமடைந்த ரசிகர்கள் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial pandian stores serial actor venkat ranganathan meet fans viral video