Tamil serial Pandian Stores Update : தமிழில் வெளியாகும் சீரியல்களில் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றுவரும் சீரியல்களை பட்டியலிட்டால் அதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு தனி இடம் உண்டு. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியில் தமிழகம் மட்டுமல்லாது இந்தியா அளவில் பெரும் பிரபலம். தமிழில் பெற்ற வரவேற்பை தொடர்ந்து இந்தியாவின் பல மொழிகளில் இந்த சீரியல் ரீமேக் செய்யப்பட்டும், டப்பிங் செய்யப்பட்டும் ஒளிப்பரப்பாகி வருகிறது. தமிழில் இருந்து வேற்று மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட முதல் சீரியல் இதுதான்.
கூட்டு குடும்பத்தின் பயன்களையும், சகோதர பாசத்தையையும் மையமாக கொண்டு வெளியாகி வரும் இந்த தொடரில், ஸ்டாலின், சுஜாதா, வெங்கட், ஹேமா, குமரன், காவியா ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இதில் நடித்து வரும் ஒவ்வொரு நடிகர்களுக்கு தனித்தனி ரசிகர் கூட்டங்கள் உள்ளன. இதில் முல்லை கதாப்பாத்திரத்தில் நடித்த வி.ஜே.சித்ரா திடீரென தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவருக்கு பதிலாக காவியா முல்லை கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வந்த அவர் திடீரென இந்த சீரியலுக்கு மாறியுள்ளார்.
விஜே சித்ராவை போல இவரது நடிப்பும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறார். இந்த தொடரில் நடித்து வரும் நடிகைகள் அனைவரும் எப்போதும் சமூகவலைதளங்களில் ஆக்டிவ்காக இருக்கின்றனர். இதில் ஒரு சில நடிகைகள் தங்களுக்கன தனியாக யூடியூப் சேனல் வைத்துள்ளனர்.இந்த சேனலில், படப்பிடிப்பு தளத்தில் நடைபெறும் சுவாரஸ்யமாக நிகழ்வுகள் வீடியோவாக வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், நடிகை காவ்யா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட வீடியோவை அவர் வெளியிட்டிருக்கிறார்.
View this post on Instagram
இந்த வீடியோவில் படப்பிடிப்புக்கு இடையில், அனைவரும் ஜாலியாக பேசிக்கொண்டிருக்கும் நிலையில், கேமரா தங்களது பக்கம் திரும்பியதும் அவர்கள் அனவரும் ஹாய் செல்கின்றனர். இந்த வீடியோ தற்போது வலைதளங்களில் வைலாகி வருகிறது.