Pandian Stores Episode Update : கண்ணனிடம் உன்னை கடைசியா அத்தை முகத்தை கூட பார்க்க முடியாதபடி பண்ணிட்டாங்க. உன்னை பற்றி யோசிக்க கூட அங்க யாரும் இல்லை. நீ ஏதோ பெரிய தப்பு பண்ண மாதிரி உன்னை ஒதுக்கி வைச்சுட்டாங்க மாமா என ஐஸ்வர்யா சொல்கிறாள். அவள் சொல்வதை கேட்டு கோபப்படும் கண்ணன் நேராக மூர்த்தி வீட்டிற்கு செல்கிறான்
இதற்கிடையே ஜனார்த்தன் தன் வீட்டிற்கு கிளம்புகிறான். அப்போது அவனது மனைவி மீனாவிடம் கயலை அழைத்து செல்வதாக சொல்கிறாள். கயல் அங்கு இருப்பாளா என்று மீனா கேட்க, ஜனார்த்தன் சமாதானப்படுத்தி கயலை அழைத்துக்கொண்டு செல்கிறான். ஜனார்த்தன் சென்றபிறகு மூர்த்தி வீட்டிற்கு வரும் கண்ணன் வெளியில் நின்று அம்மா என்று கூப்பிடுகிறான்.
அப்போது அவன் குரல் கேட்டு கண்ணன் வந்துருக்கான் என்று தனம் சொல்கிறாள். ஆனால் அனைவரும்அமைதியாக இருக்க கண்ணன் உள்ளே வந்து லட்சுமி போட்டோவை பார்த்து உன்னை கடைசியா பார்க்க கூட முடியாதபடி பண்ணிடாங்க அம்மா என அழுகிறான். அதன்பின்னர் மூர்த்தியிடம் என் அம்மாவை கடைசியா கண்ல காட்டாம கூட கொண்டு போயிட்டீங்கள்ள. நான் தப்பு பண்ணேன். இல்லைன்னு சொல்லல. எல்லாமே என் தப்பாலதான் நடந்தது.
நான் ஒத்துக்கிறேன். ஆனா அன்னைக்கு ஹாஸ்பிட்டல் வந்து உங்க எல்லார்கிட்டயும் எவ்வளவு கெஞ்சுனேன். ஒரு தடவை என்னை அம்மாவை பார்க்க விட்ருந்தா அம்டமா இப்போ உயிரோட இருந்துருப்பாங்கள்ள என கேட்கிறேன். அவன் பேசுவைதை கேட்கு கதிர் சத்தம் போட ஜீவா வேண்டாம் என்று கண்ணசைக்கிறான். அதன்பிறகு என் அம்மாவை பார்க்க விடாம பண்ண நீங்கல்லாம் யாரு. அவுங்க எனக்கும் தான அம்மா. என்கிட்ட காமிக்காம எதுக்கு அம்மாவை கொண்டு போனீங்க. பதில் சொல்லுங்க என கேட்கிறான்.
அவன் பேசுவதை கேட்டு கோபமாகும் தனம் நிறுத்துடா, இந்த நிலைமை எல்லாம் யாரால வந்துச்சுன்னு உனக்கு தெரியுமா. உன்னால அத்தை நீ பண்ணதை நினைச்சு எவ்வளவு நாள் சாப்பிடாமா, எங்ககிட்ட எல்லாம் பேசாம இருந்தாங்க தெரியுமா இனிமேல் உன்னால மட்டும் இல்லை, யாரலையும் அத்தையை பார்க்க முடியாது. கொஞ்சம் யோசிச்சிருக்கலாமேடா கண்ணனா எங்களை பத்தி எல்லாம் கொஞ்சம் யோசிச்சு இருந்தா இப்படியெல்லாம் நடந்திருக்குமா? உன்னை மாதிரி எல்லாம் நாங்க சுயநலமா யோசிச்சு இருந்தா, இந்த குடும்பம் எப்பவோ நாசமா போயிருக்கும். என்று சொல்லும் தனம் என் பிள்ளையை பார்க்காம அத்தை போயிட்டாங்கன்ற வருத்தம், ஆயுசு முழுக்க எனக்கு இருக்குமேடா என சொல்லி அழுகிறாள்.
அதன்பிறகு இவனுக்காக நம்ம எவ்வளவு நேரம்டா காத்திட்டு இருந்தோம். இவன் எப்போ வருவான்னு தெரியாததால தான அத்தையை கொண்டு போனோம். இப்போ எப்படி பேசுறான் பாரு என சொல்லி கதறி அழுகிறாள். அப்போது அவளை அனைவரும் உங்களுக்கு ஏதாவது ஆகிட போகுது என சொல்லி உள்ளே அழைத்து செல்கின்றனர். அதன்பிறகு அம்மா போட்டோவை பார்த்து கதறி அழும் கண்ணனை அழைத்துக்கொண்டு கிளம்புகிறாள் ஐஸ்வர்யா. வீட்டிற்கு வரும் கண்ணன் அம்மாவை நினைத்து கதறி அழுகிறான் அத்துடன் முடிகிறது இன்றைய எபிசோடு.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil