Advertisment
Presenting Partner
Desktop GIF

விரைவில் முடிவுக்கு வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் : காரணம் இதுதானா?

சத்தியமூர்த்தி, ஜீவானந்தம், கதிரவன் மற்றும் ஜெயக்கண்ணன் ஆகிய 4 சகோதரர்களின் பின்னணியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதை நகர்கிறது.

author-image
WebDesk
New Update
Pandian Stores

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்

விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் சிறப்பு க்ளைமேக்ஸுடன் விரைவில் முடிவெடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியலில், ஸ்டாலின் முத்து, சுஜிதா, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ் சதீஷ், குமரன் தங்கராஜன், லாவண்யா உள்ளிட்ட பலர் முக்கிய கேரகடரில் நடித்து வருகின்றனர். இதுவரை 1440-க்கு மேற்பட்ட எபிசோடுகள் ஒளிபரப்பாகியுள்ள நிலையில், இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளது.

ஷீலா, சாந்தி வில்லியம்ஸ், எஸ்.டி.பி. ரோசரி, டேவிட் சாலமன் ராஜா, மீனா செல்லமுத்து, சுமங்கலி, வெங்கட் சுபா, மற்றும் ஸ்ரீ வித்யா சங்கர் ஆகியோர் துணை கேரக்டரில் நடித்து வரும் இந்த சீரியலில்,பாண்டியனின் நான்கு மகன்களைச் சுற்றியே கதை நகர்கிறது. சத்தியமூர்த்தி, ஜீவானந்தம், கதிரவன் மற்றும் ஜெயக்கண்ணன் அவர்களின் சொந்த ஊரான குன்றக்குடியில் உள்ள பிரபல மளிகைக் கடையான பாண்டியன் ஸ்டோர்ஸை நடத்தி வருபவர்கள்.

நன்கு படித்த தைரியமான பெண்ணான தனலட்சுமி, தன் குடும்பத்தின் விருப்பத்திற்கு மாறாக சத்தியமூர்த்தியை திருமணம் செய்துகொண்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டு செல்ல முயற்சிக்கிறார். அவர் தன் மைத்துனர்களை தன் மகன்களாக வளர்க்கிறாள். பல வருடங்கள் கழித்து, ஜீவாவை சிறுவயதிலிருந்தே நேசித்த மல்லியின் தங்கை முல்லையுடன் நிச்சயதார்த்தம் செய்கிறார்.

ஆனால் ஜீவா தனது கல்லூரி தோழி மீனாட்சியை காதலித்து திருமணம் செய்துகொண்டதை தொடர்ந்து, கதிர் முல்லையை திருமணம் செய்துகொள்கிறார். மணக்கிறார். குடும்பத்தின் கடைசி மகனான கண்ணன், தனத்தின் அண்ணியின் வளர்ப்பு மகள் ஐஸ்வர்யாவுடன் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொள்கிறார். கூட்டுக் குடும்பத்தில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து மீதிக்கதை அமைந்துள்ளது.

கடந்த சில மாதங்களாக சீரியலின் டிஆர்பி ரேட்டிங் தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதால் சீரியலை முடிவுக்கு கொண்டு வர சீரியல் குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pandian Stores Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment