Pandian Stores Serial Today Update : கதிர் பாஸ் பண்ணியதற்கு வாழ்த்து சொல்லவதற்காக ஜெகாவும், கஸ்தூரியும் வீட்டிற்கு வருகின்றனர். அப்போது முல்லை அத்தாச்சி டிவி பார்த்தீங்கள்ள என என கேட்க, கஸ்தூரி, எந்த டிவி என தெரியாததை போல் கேட்கிறாள். அப்போது ஜெகா, டிவில முழு நிகழ்ச்சி பார்த்துட்டு தான்மா கதிரை பார்க்க வந்து இருக்கோம் என சொல்கிறான். அதன்பிறகு கதிரிடம் போன் பண்ணி வீட்டிற்கு வர சொல்கிறாள் முல்லை.
அதன்பிறகு கதிர் வீட்டுக்கு வர ஜெகா கஸ்தூர இருவரும் வாழ்து சொல்கின்றனர். அப்போது கஸ்தூரி டிவில இருந்து வந்தப்ப என்ன கூப்பிட்டு இருக்கலாம்ல. சொல்லிவிட்டு, முல்லையிடம், கதிர் டிவியில் அவளை பற்றி பேசியதை குறித்து கேட்கிறாள். அப்போது தனம், முல்லை தான் ராத்திரி முழுக்க கண் முழிச்சு கதிரை படிக்க வைச்சு இருக்கா என சொல்கிறாள்.
அதன்பிறகு அனைவருக்கும் சாப்பாடு கொடுக்கும் மூர்த்தி, நீ மார்க் எடுத்ததுக்கு உணக்கு ஏதாவது செய்யணும்டா. என்ன வேணும்னு கேளு என்று சொல்ல, அதற்கு கதிர், நான் மார்க் எடுத்ததுக்கு இவ்வளவு சந்தோஷப்படுறீங்கள்ள. அதுவே போதும் என சொல்கிறான். ஆனால் மூத்தி உன்னால இந்த ஊரே நம்மளை பெருமையா பேசுது. தயவுசெஞ்சு ஏதாவது கேளுடா என சொல்ல, அதெல்லாம் எதுவும் வேணாம். நீங்க எல்லாம் என்னைப்பற்றியே பேசுறது எனக்கு ஒரு மாதிரி இருக்கு என சொல்லி எழுந்து செல்கிறான்.
அப்போது மூத்தி, கண்டிப்பா கதிருக்கு ஏதாவது வாங்கி கொடுக்கணும் என சொல்லும்போது, ஜீவா வாட்ச் வாங்கி கொடுக்கலாம் என சொலகிறான். இடையில் முல்லை, அவுங்களுக்கு ஒரு டச் போன் வாங்கி கொடுங்க மாமா. என் போனை கொடுத்தாலும் வாங்கிக்க மாட்றாங்க என சொல்ல, மூர்த்தியும் உடனே போன் வாங்கி கொடுத்துடலாம் என சொல்கிறாள்.
அதன்பிறகு ரூமுக்கு வரும் முல்லையிடம் இது எல்லாமே உன்னாலதான். குடும்பத்துல எல்லாரும் அவ்வளவு சந்தோஷமா இருக்காங்க. நான்ல டிவில வருவேன்னு நினைச்சு பார்த்ததே இல்லை. இது எல்லாமே உன்னால தான் என கதிர் சொல்கிறான். அதற்கு முல்லை இதெல்லாம் ஒண்ணுமே இல்லை. நீங்க இன்னும் என்னலாம் பண்ண போறீங்க பாருங்க என சொல்கிறாள்.
அதற்கு கதிர், நீ எப்பவும் என்கூட இரு முல்லை. எனக்கு அது போதும் என்கிறான். இதனிடையில் ஜீவாவும், மீனாவும் கதிர் குறித்து சந்தோஷமாக பேசிக்கொண்டிருக்கும்போது இன்றைய எபிசொடு முடிகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil