Tamil Serial Pandian Stores Episode : ஜனார்த்தன் சட்டை மாற்றிக்கொண்ட வெளியில் வரும்போது மூர்த்தி கதிர் இருவரும் தரையில் அமர்ந்துள்ளனர். அதற்கு ஜனார்த்தன் ஏன் என்று கேட்க நம்ம வீடு தான என்று சொல்கிறான் மூர்த்தி. அப்போது கதிர் உங்க்கூட எப்போதும் ஆளுங்க இருப்பாங்களே ஒருத்தர் கூடவா இல்லை என்று கேட்கிறான். அதற்கு ஜனார்த்தன் இவதா எப்போவும் ரவுடி பசங்கள கூட வச்சிருக்கனு சொன்னதாக அனுப்பிடன் என்று சொல்கிறான். அதன்பிறகு நடந்த்தையே நினைத்து வருத்தப்படவேண்டாம் என்று சொல்லும் மூர்த்தி நேரமாச்சி நாங்க கிளம்புறோம் என்று சொல்கிறான்.
அதற்கு மீனா இருங்க மாமா என்ன அவசரம் என்று சொல்ல, வர அவசரத்துல கடை அப்படியே விட்டு வந்துட்டோம் என்று சொல்லி மூர்த்தி கிளம்புகிறான். அப்போது ஜீவாவும் கிளம் மூர்த்தி இங்யே இருந்துட்டு அப்புறம் வா என்று சொல்லிவிட்டு விளம்புறான். அதன்பிறகு வீட்டிற்கு வரும் கதிரிடம் தனம் விசாரிக்கிறாள். அப்போது அங்கு நடந்ததை பற்றி கதிர் சொல்கிறான். அதன்பிறகு குழந்தை அழும்போது கதிர் குழந்தையை தூக்குகிறான். அப்போது மீனா போன் செய்கிறாள். அதை முல்லை அட்டன் செயது பேசுகிறாள்.
அதன்பிறகு வீட்டு டிரைவரிடம் பேசிக்கொண்டிருக்கும் ஜார்த்தன் தனது மாப்பிள்ளை ஜீவா பற்றி பெருமையாக பேசிக்கொண்டிருக்கிறான். அப்போது அவரது மனைவி டீ கொண்டு வந்து கொடுக்கிறாள். அதன்பிறகு சொந்தம் என்ன்னு இப்போ தெரியுதாங்க என்று அவள் கேட்கும்போது மீனா வருகிறாள். அதன்பிறகு ஜனார்த்தன் மகளிடமும் ஜீவா பற்றி பெருமையாக பேசுகிறான். அதற்கு ஏற்றபடி மீனாவும் பெருமையாக பேசிக்கொள்கிறாள். அப்போது ஜனார்த்தன் கதிர் பற்றியும் பெருமையாக பேசுகிறான்.
அடுத்து இதே வரன்மா என சொல்லிவிட்டு எழுந்து போனதும், மீனா இனிமே அப்பா ஜீவாவ இங்கே வந்துடுங்கனு சொல்லவே மாட்டாரு என்று சொல்கிறாள். ஆனால் உடனே அங்கு வரும் அவர், மாப்ள நம்ப கூடவே இருந்தா யானை பலம் என்று சொல்ல மீனாவும் அம்மாவும் சிரிக்கின்றனர். அப்போது ஜீவா அங்கு வர அவனிடம் அந்த ஆளு கடையை காலி செய்துவிட்டான் என்று கூறுகிறான். அதற்கு மீனா அம்மா அந்த ஆளு அப்புறம் எதும் பிரச்சனை பன்னமாட்டார்ல மாப்ள என கேட்க, என்ன நெருங்குனா எங்க அண்ணனு கதிரும் முன்னாள் நிப்பாங்க என்று சொல்கிறான்.
அதன்பிறகு சூப்பர் மார்கெட் பார்த்துக்கொள்வதற்கு எள் பிரண்ட் அனுப்பி வைக்கிறேன் என்று சொல்ல, நீங்களே நின்னு பாத்துகிட்டா நல்லாருக்கும் என்று சொல்கிறான். ஆனால் ஜீவா அண்ணன் தம்பிகள் ஒன்னா இருக்கறது தான் எங்க ஆசை என்று சொல்லிவிட அவன் நண்பனை கடைக்கு அனுப்ப ஜனார்த்தன் சம்மதிக்கிறான். அதன்பிறகு மீனாவும் ஜீவாவும் வீட்டிற்கு கிளம்புகின்றனர்.
இருவரும் பைக்கில் வரும்போது மீனா அழுதுகொண்டிருக்க, இடையில் நிறுத்தி என்னச்சி என்று கேட்கிறான. அதற்கு மீனா எங்க அப்பாக்காக நீ இப்படி இறங்குவனு நினைக்கவே இல்லை என்று சொல்கிறாள் அது எப்படி நான் பார்த்துக்கிட்டு சும்மா இருக்க முடியும். அவர் கொஞ்ம் கேப் கெடச்சாலும் நம்ப குடும்பத்தை மட்டம் தட்டுவாறு அதன் கோபம் மற்றபடி அவருக்கு ஒன்னுன்னா நாதான் கேட்கனும் என்று சொல்கிறான். அதன்பிறகு இருவரும் வீட்டிற்கு கிளம்புகின்றனர். அத்துடன் முடிகிறது இன்றைய எபிசோடு