Pandian Stores: முல்லையை படுத்தி எடுக்கும் மல்லிகா; கார் மூலமாக குழப்பம்?

Pandian Stores Serial : விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை பார்போமா?

பரிட்சை முடித்து விட்டு வீட்டிற்கு நடந்து போய் கொண்டிருக்கும் முல்லையை அந்த வழியாக வரும் மல்லி வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிக்கொண்டு வருகிறாள். அப்பேது அவர்கள் இருவரும் ஒன்றாக வருவதை பார்த்து, என்னா அக்கா தங்கச்சி ரெண்டு பேரும் ஜோடியா வந்து இருக்கீங்க என கேட்கும், தனம், முல்லையிடம் டாக்டர் என்ன சொன்னாங்க. இடுப்பு வலி எப்படி இருக்கு என தனம் கேட்கிறாள்.

இதை கேட்ட மல்லி இடுப்பு வலியா? அப்புறம் எதுக்கு அவளை நடக்க விட்டிங்க என கேட்டுவிட்டு, முல்லையிடம், என்கிட்டே சொல்லியிருந்தா அக்கா கார் எடுத்துட்டு வந்து உன்னை கூட்டிட்டு போயிருப்பேன்ல என சொல்கிறாள். அப்போது அங்கிருக்கும் மீனா இவுங்க இன்னொரு கஸ்தூரியா இருப்பாங்க போல என சொல்கிறாள். இதை காதில் வாங்கிக்கொள்ளாத மல்லி, இனிமேல் எங்க போனாலும் அக்காகிட்ட சொல்லு, கார் அனுப்பி விட்றேன் என முல்லையிடம் சொல்கிறாள்.

அவளின் பந்தாவை பொறுத்துக்கொள்ளாத மீனா, நாங்களும் கார் வாங்க போறோம் என சொல்கிறாள். இதனை கேட்டு மல்லியும், பிரஷாந்தும் சிரிக்க, வெளியே நிற்குற கதிர் வண்டியை பார்ப்போம். அதுவே எங்க தாத்தா காலத்து வண்டி என என பிரஷாந்த் கலாய்க்கிறான். இதை பார்த்து கோபப்படும் முல்லை நாங்க உண்மையாவே கார் வாங்க போறோம் என சொல்ல, மொதல்ல வாங்குங்க அப்புறம் பாப்போம் என சொல்லி விட்டு மல்லியும் பிரஷாந்தும் கிளம்புகின்றனர்.

அவர்கள் போன பிறகு குன்னக்குடிலயே இவுங்க தான் கார் வைச்சு இருக்க மாதிரி பண்றாங்க. எங்க அப்பா கூட தான் கார் வைச்சு இருக்காரு. மொதல்ல கார் வாங்கி இவுங்க முன்னாடி வந்து நிற்குறோம் என மீனா சொல்கிறாள். இதற்கிடையே மூர்த்தி, ஜீவா, கதிர் மூவரும் செகண்ட்ஸில் கார் பார்க்க வருகின்றனர். அங்கு, குடும்பத்தோடு எட்டு பேர் போற மாதிரி இருக்கணும், 5 லட்சத்துக்குள்ள இருக்கணும் என சொல்ல, அதே பட்ஜெட்டுக்குள் ஒரு வண்டியை காட்டுகின்றனர்.

அந்த வண்டியை ஜீவா ஓட்டி பார்க்க, வண்டி ரேட் ஆறு லட்சம் சொல்லும் போது, மூவரும் பேசி ஐந்து லட்சத்திற்கு முடிக்கின்றனர். மேலும் இப்போது அட்வான்ஸாக ஒரு லட்சமும், காரை கையில் கொடுக்கும் போது மீதி பணத்தை வாங்கி கொள்ளுமாறும் மூர்த்தி சொல்கிறான். இதற்கிடையில் ஐஸ்வர்யாவை பார்க்க பிரசாந்த் காலேஜிக்கு வர, அவன் வருவதை பார்த்து, அவள் பிரெண்ட் ஸ்டைலா ஒரு பையன் வரவும், கண்ணனை கலட்டி விட்டீல என சொல்கிறாள்.

அப்போது இவர்களை பார்க்கும்ஈ கண்ணன், இவன் ஏன் டெய்லி வர்றான் என யோசிக்கிறான். அப்போது கண்ணனை பார்க்கும் ஐஸ்வர்யா மாமா என கூப்பிட, அங்கு வரும் கண்ணனை கேலி செய்துவிட்டு, பிரஷாந்த் கிளம்பிவிடுகிறான். அதன்பிறகு ஐஸ்வர்யாவிடம், அவன் ஏன் டெய்லி இவன் வர்றான் என கேட்க, அவர் வந்தா உனக்கு என்ன என ஐஸ்வர்யா சொல்கிறாள். இதனால் கோபப்படும் கண்ணன், ஆமா எனக்கு என்ன என சொல்லிட்டு கிளம்புகிறான் அத்துடன் முடிகிறது இன்றைய எசோடு

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial pandian stores serial today episode update in tamil

Next Story
என்ன அஸ்வின் இப்பிடி பண்ணிட்டீங்க… உதயநிதி படத்தில் இருந்து விலகியது பற்றி விளக்கம்Tamil latest serial news: Cook with comali Aswin revealed the reason behind quitting from Udhayanidhi Stalin’s red giant movies production
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com