முல்லை அக்கா மல்லியை பார்த்துவிட்டு வந்ததை பற்றி யோசித்துக் கொண்டிருக்கும் தனத்திடம், நீங்க ஏன் இப்படி இருக்கீங்க என கேட்கிறாள் முல்லை. அதற்கு தனம் நீ சித்தியும், சித்தாப்பவையும் நாளைக்கு வீட்டுக்கு வர சொல்லு என சொல்கிறாள்.
தனம் சொன்னபடியே அடுத்தநாள் காலையிலே முருகனும், பார்வதியும் வீட்டிற்கு வருகின்றனர். வந்தவுடன் பார்வதி எதுக்கு காலையிலேயே வர சொன்ன தனம் என கேட்க ஒரு விஷ்யமாதா வர சொன்னேன், கொஞ்ச நேரம் பொறுமையா இருங்க. உங்களுக்கே தெரியும் என தனம் சொல்கிறாள். அப்போது மூர்த்திக்கு போன் வர நாள் கிளம்புரேன் தனம் என்று சொல்லிட்டு செல்கிறான்.
அதன்பிறகு ஜீவாவும், கதிரும் கடைக்கு கிளம்ப கொஞ்ச நேரம் உட்காருங்கடா என தனம் சொல்கிறாள். அப்போது உங்களுக்கு என்னாச்சு அக்கா என மீனா கேட்கும் போது, தனத்திற்கு போன் வரவும் மல்லி காரில் வந்து இறங்குகிறாள். அவரை தனம் உள்ளே அழைத்து வர வீட்டில் உள்ள அனைவருக்கும் ஷாக் ஆனால் தயங்கியபடி உள்ளே வரும் மல்லியை, இவளை எதுக்காக வர சொன்ன தனம், முதல் வெளிய போடி என மூர்த்தி அம்மா கோபமாக கத்துகிறாள்.
ஆனால் தனம் நான்தான் வர சொன்னேன் அத்தை, கொஞ்சம் பொறுமையா இருங்க என சொல்கிறாள். மல்லியை சத்தம் போட்டு அடித்துவிடுகிறாள். பதிலுக்கு முருகனும் நம்ம ரெண்டு குடும்பத்தை நடு தெருவுல நிப்பாட்டிட்டு போனவம்மா இவ, எதுக்கும்மா கூட்டிட்டு வந்த என சொல்கிறான். அப்போது அவர்களை அமைதியாக இருக்க சொல்லும் தனம், நேற்று கோயில்ல இவுங்கள பார்த்து நான்தான் வர சொன்னேன் என சொல்கிறாள். என சொல்கிறாள். அப்போது மல்லி கணவன் இறந்து அவள் தனியாக இருப்பதை பற்றி சொல்கிறாள். அதன்பிறகு அனைவரும் அமைதியாகி, மல்லிக்கு ஆறுதல் கூற மூன்று வருடத்திற்கு முன்பாகவே கணவன் இறந்து விட்டதாக சொல்லும் மல்லியிடம் நீ தனியாவா இருக்க என கேட்கும் போது, அவரோட பையனும் நானும்தான் இருக்கோம். எங்களுக்குன்னு தனியா பிள்ளை இல்லை என சொல்கிறாள்.
அதன்பிறகு மல்லி முல்லையை கூப்பிட்டு பேசும்போது, அவள் உன்கிட்ட பேச எனக்கு என்னா இருக்கு என சொல்கிறாள். அப்போது கதிர் அண்ணி நான் கிளம்புறேன் என சொல்ல, நீ கதிர் தான, இன்னும் என்னை பார்த்து முறைக்கிறிய மல்லி கேட்கிறாள். அதற்கு கதிர் இல்லை என்பது போல் தலை ஆட்டுகிறான். அதன்பிறகு ஜீவா, கதிர் இருவரும் கடைக்கு புறப்படுகின்றனர். அதன்பிறகு கண்ணன் தூக்கி வரும் ஜீவா மகள் கயலை வாங்கி கொஞ்சுகிறாள் மல்லி. அத்துடன் முடிந்துவிட்டது இன்றைய எபிசோடு
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil