scorecardresearch

கொடி பார்ட் 2 ரெடி… பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலத்தின் மாஸ் வீடியோ…

Tamil Serial Update : சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் முன்னணி சீரியல் நடிகை சுஜிதா தனுஷ். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர்

கொடி பார்ட் 2 ரெடி… பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலத்தின் மாஸ் வீடியோ…

Sujitha Dhanush Viral Video Update : திரைப்பிரபலங்கள் பலரும் நடிப்பு மட்டுமல்லாமல், சமூக வலைதளங்கள் மூலமாகவும், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் சின்னத்திரை நடிகைகயே சமூக வலைதளங்களை பெரிய அளவில் ஆக்கிரமித்துள்ளனர் என்று சொல்லாம்.

சீரியல் படப்பிடிப்பு தளத்தில் சுவாரஸ்யமான நிகழ்வுகள பதிவிடுவது, நன்பர்களுடன் அவுட்டிங் உள்ளிட்ட புகைபபடங்களை பதிவிடுவது என சின்னத்திரை நடிகைகள் நாள் முழுவதும் தங்களது சமூகவலைதள பக்கங்களில் ஆக்டீவாக இருந்து வருகின்றனர். இதில் சிலர் அழகு சாதன பொருட்கள் தொடர்பான விளம்பரங்களை வெளியிடுவதும் தொடர்ந்து வருகிறது.

அந்த வகையில் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் முன்னணி சீரியல் நடிகை சுஜிதா தனுஷ். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற அவர், தற்போது சமூவலைதளங்களிலும் ஆக்டீவாக இருந்து வருகிறார். அதேபோல் நடிப்பு மட்டுமல்லாமல் விளம்பர படங்களை இயக்கும் பணிகளையும் செய்து வருகிறார்.

மேலும் கதைகேளு கதைகேளு என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வரும் சுஜிதா, அதில் அவ்வப்போது சில பயனுள்ள தகவல்களை பகிர்ந்து வருகிறார். மேலும் தனது குடும்பத்துடன் அவுட்டிங் செல்வது, சீரியலில் சக நடிகர்களுடன் ரீல்ஸ் செய்து வெளியிடுவது என தொடர்ந்து வலைதளங்களில் இயங்கி வரும் சுஜிதா தற்போது வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தன்னுடன் நடித்து வரும் கண்ணணுடன் இருக்கும், சுஜிதா, தனுஷ் நடிப்பில் வெளியான கொடி படத்தில், வரும் பாடலுக்கு மூவ்மெண்ட் கொடுத்துள்ளார். கொடி.. கொடி.. என்று தொடங்கும் அந்த பாடருக்கு இருவரும் கச்சதமாக பொருந்தியுள்ளனர். த்ரிஷா கேரக்டரில், சுஜிதாவும், தனுஷ் கேரக்டரில் சரவண விகரமும் வரும் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும்இருவரும் இந்த சீனுக்கு சரியான பொருத்தம் என்று கூறி வரும் நிலையில், வழக்கம்போல சில ரசிகர்கள் இதனை கலாய்த்து வருகின்றனர்.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial pandian stores sujitha and saravana vikram viral video update

Best of Express