Tamil Serial Actress Sujitha Dhanush Viral Video : விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு பெரிய அறிமுகம் தேவையில்லை. இல்லத்தரசிகளின் ஆதரவு பெற்ற இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நலல வரவேற்பை பெற்று வருகிறது. வாழ்க்கைக்கு தேவையான அன்பு பாசம், காதல் கருணை, வீரம் என அனைத்து முக்கிய அம்சங்களையும் உள்ளடங்கியுள்ள இந்த சீரியல் டிஆர்பி ரேட்ங்கில் முன்னணயில் இருந்து வருகிறது.
ஸ்டாலின் முத்து, சுஜிதா தனுஷ், ஹேமா ராஜ்குமார், வெங்கட், குமரன், காவியா அறிவுமணி உள்ளிடட நடிகர்கள் பலர் நடித்து வரும் இந்த சீரியலில், குடும்பத்தின் மூத்த மருமகள் தனம் கேரக்ரில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருபவர் சுஜிதா தனுஷ்.. குழந்தையில் இருந்தே சினிமாத்துறையில் நடித்து வரும் இவரை ரசிகர்கள் மத்தியில் கொண்டு சென்றது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்.
இந்த சீரியலில் நடித்து வரும் அனைத்து நடிகர் நடிகைகளும், சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகினறனர். இவர்கள் பதிவிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நாளுக்கு நாள் இவர்களுக்கு உண்டான ஃபாலோவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.
இதில் சுஜிதா தனுஷ் நடிப்பு மட்டுமல்லாது இயக்கத்திலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகயைில் சமீபத்தில் இவர் நடிகை ஹன்சிகாவை வத்து இயக்கிய விளம்பர படம் தொடர்பான வீடியோ பதிவு இணையத்தி் வைரலாக பரவியது. மேலும் அவ்வப்போது ஜாலியான டான்ஸ் மற்றும் சுற்றுலா தொடர்பான வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். இவரின் கதைகேளு கதைளே என்று யூடியூப் சேனலும் பெரும் பிரபலம்.
இந்நிலையில், தற்போது சுஜிதா தனுஷ் வெளியிட்டுள்ள கோலம்போடும் வீடியோ பதிவு ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் தெலுங்கு பதிப்பான வதிகனமா என்ற சீரியலின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பாணடியன் சூப்பர் ஸ்டோர்ஸ் திறப்பு விழாவில் கோலம் போடும் காட்சி இடம்பெற்றது.
இந்த காட்சிக்காக தற்போது தெலுங்கில் சுஜிதா தனுஷ் கோலம் போடுகிறார். இந்த வீடியோ பதிவு தற்போது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது. தமிழில் தனம் கேரக்டரில் நடித்து வரும் சுஜிதா தெலுங்கிலும் அதே மூத்த மருமகள் கேரக்டரை ஏற்று நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil