Tamil Serial Pandian Stores and Tamizhum Saraswathiyum Mega Sangamam Promo : சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அவர்களின் ரசனைக்கேற்ப பல சீரியல்கள் ஒளிப்பராகி வரும் நிலையில், அனைத்து சீரியல்களும் ஏதாவது ஒரு வகையில் ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. அதிலும் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிணில் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில், நாளுக்கு நாள் பல அதிரடி திருங்களும் அரங்கேறுவது உண்டு.
Advertisment
மேலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்வதற்காக அடுத்து ஒரு வாரம் ஒளிபரப்பாக உள்ள எபிசோடுகள் குறித்து வாரத்தின் தொடகத்திலேயே ப்ரமோவாக வெளியிடுகின்றனர். அதிலும் கடந்த சில வருடங்களாக சீரியல்களை ரசிகர்கள் மத்தியில் கொண்டு சென்வதற்காக 2 ஹிட் சீரியல்களை ஒன்றினைத்து மகா சங்கமம் என்ற பெயரில் ஒளிபரப்பி வருகினறனர். இப்படி இரண்டு சீரியல்கள் ஒன்றினையும் போதுஏதாவது ஒரு சீரியலில் பல நாட்களாக காக்கப்பட்டு வந்த ஒரு ரகசியம் வெளிப்படும் வகையில் கதை அமைப்பது வழக்கம்.
அந்த வகையில் தற்போது விஜய் டிவியின் ஹிட் சீரியலான பாண்டியன ஸ்டோர்ஸ் சீரியலும், தமிழும் சரஸ்வதியும் சீரியல் ஒன்றினைத்து மகாசங்கமம் என்ற பெயரில்வரும் வாரம் ஒளிரபரப்பாக உள்ளது. கோவிலுக்கு செல்வதற்காக வேனில் புறப்படும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர், சென்னயைில், இறங்குகின்றனர். அப்போது தனது வீட்டிற்குள் செல்லும் தமிழை ஒருவர் கத்தியால் குத்த வருகிறார். இதை பார்க்கும் மூர்த்தி உடனடியாக ஒரு கல்லை எடுத்து அவரை அடிக்கிறார்.
அதை பார்த்த தமிழ் தனது உயிரை காப்பாற்றிய மூர்த்தி மற்றும் குடும்பத்தினரை தனது அம்மாவிடம் அறிமுகப்படுத்துகிறார். அதன்பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினது கிளம்பகிறோம் என்று சொல்ல, தமிழின் உயிரை காப்பாற்றியிருக்கிறீங்கள் இங்கு இருந்து திருமணத்தை பார்த்துவிட்டு போகலாம் என்று வற்புறுத்த மூர்த்தியும், குடும்பத்தினர் அங்கேயே தங்கி திருமணத்தை முடித்துவிட்டு ஊருக்கு செல்லாம் என்று முடிவு செய்து மண்டபத்திற்குள் சென்கின்றனர். அத்துடன் ப்ரமோ முடிவடைகிறது.
தற்போது இந்த ப்ரமோ வைரலாகிவரும் நிலையில், ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.