Pandian Stores Serial Today Update : கதிர் மூர்த்தி இருவரும் பைக்கில் கடைக்கு போய்கொண்டிருக்கும்போது கதிரிடம் மூர்த்தி காலேஜ் போறியா என கேட்கிறான். ஆனால் கதிர் அதெல்லாம் வேணாம் அண்ணே. நானே முல்லை சொன்னான்னுதா பரிட்சை எழுதுனேன். இனிமே படிச்சி என்ன கலெக்டராவா ஆக போறன் என் கேட்கிறான். அதற்கு மூர்த்தி உனக்கு இருக்க அறிவுக்கு கண்டிப்பாக கலெக்டர் ஆகலாம்டா என் சொல்கின்றான்.
ஆனால் கதிர் காலேஜ்லம் வேண்டாம்னே கடைய வேற பார்த்துக்கணும்ல என கூறுகிறான். அதற்கு மூர்த்தி, அதெல்லாம் கடையை நாங்க பார்த்துக்குவோம்டா. நீ நல்ல மார்க் எடுத்துருக்க. படிக்கணும்னா சொல்லுடா. அண்ணே உன்னை காலேஜ்ல சேர்த்து விட்றேன் என்கிறான். அப்போது கதிர், வேணும்னா வீட்ல இருந்தே படிக்கிறேன். கடை வேலையும் பார்த்த மாதிரி இருக்கும். அப்புறம் படிச்ச மாதிரியும் இருக்கும் என சொல்கிறான்.
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, அந்த வழியாக வரும் சிலர், இப்போதான் ரோட்ல பார்த்தேன் ரொம்ப சந்தோஷம் வாழத்துக்கள் தம்பி என சொல்லிவிட்டு செல்கின்றனர். அதற்கு மூர்த்தி ஏண்டா கதிரு உன்ன டிவில பார்த்தேனு சொன்ன சரி ரோட்ல பாத்தேன்னு சொல்லிட்டு போறாங்க என்ன இது என்று புரியாமல் இருவரும் கடைக்கும் செல்கின்றனர். அப்போது வழியில்,கதிர் மார்க் எடுத்ததற்காக வாழ்த்தி பேனர் வைத்திருக்கின்றனர்.
இதைபார்த்த கதிரும் மூர்த்தியும் ஆச்சரியமாக பார்க்க, அங்கே நின்றிருந்த சிலர் அவர்களுடன் செல்பி எடுத்துக்கொள்கின்றனர். அதன்பிறகு இந்த பேனர் யார் வச்சிருப்பா என்று இருவரும் மாறி மாறி கேட்டுக்கொண்டு பேனர் பற்றி சொல்வதற்காக வீட்டிற்கு செல்கின்றனர். இருவரும் வந்து வீட்டில் சொல்லும் போது, யாரு வச்சுருப்பான்னு யோசிக்கின்றனர். அப்போது ஜீவா அமைதியாக சிரித்து கொண்டு நிற்கும் போது, கதிர் அவனிடம் நீதான்ன வச்ச என கேட்கிறான்.
அனைவரும் கேட்கவும் ஜீவா நான்தான் வச்சேன் என சொல்கிறான். அப்போது மூர்த்தி, இதுக்கெல்லாம் ரொம்ப செலவு ஆகி இருக்கும்ல. எப்டிடா ரெடி பண்ண என்று கேட்க, அதற்கு ஜீவா மோதிரத்தை வைச்சுட்டேன் அண்ணே என சொல்கிறான். அப்போது கதிர் ஜீவாவை கட்டிப்பிடித்து ஏன் அண்ணே இந்த மாதிரி பண்ண என கேட்கிறான். என்னோட ஒரு மன சந்தோஷத்துக்காக தான்டா இதெல்லாம் என சொல்கிறான். அதன்பிறகு அனைவரும் பேனரை பார்க்க கிளம்புகின்றனர்.
இதற்கிடையில் ஐஸ்வர்யாவுக்கு போன் பண்ணும் பிரஷாந்த் அவள் எடுக்காததால், கஸ்தூரிக்கு போன் செய்து அவளிடம் கொடுக்க சொல்கிறான். போனை வாங்கி ஐஸ்வர்யா ஒழுங்காக பேசாததால், ஏன்டி அந்த தம்பி டெய்லி போன் பண்ணுது. நீ போன் பண்ண எடுக்க மாட்டீயா என கேட்க அதற்கு ஐஸ்வர்யா, அப்படியாவது அவனுக்கு எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லன்னு தெரியட்டும் என கோபமாக சொல்லிவிட்டு செல்கிறாள்.
இதனிடையில் மூர்த்தி குடும்பத்தி இருந்து அனைவரும் வந்து கதிர் பேனரை பார்த்து சந்தோஷத்தில் அனைவரும் நின்று செல்பி எடுத்துக்கொள்கின்றனர் இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil