Tamil Serial Pandian Stores Today Episode : பக்கத்து கடைகாரர் தன்னை அடித்தது குறித்து ஜனார்த்தன் தனது மனைவியிடம் சொல்லிட்டு வீட்டில் அமர்ந்திருக்கிறார். அப்போது அவரது மனைவி மீனாவுக்கு போன் பண்ணி நடந்தவற்றை கூறுகிறாள். இதை கேட்டு அதிர்ச்சியாகும் மீனா, இதை ஜீவாவிடம் இதைப்பற்றி சொல்லலாமா என யோசிக்கும் அவள், அவன்கிட்ட சொன்னா என்ன நடக்க போகுது. கிண்டல் தான் பண்ணுவேன் என மனதிற்குள் நினைத்து அழுது கொண்டிருக்கிறாள்.
அப்போது ரூமிற்குள் வரும் ஜீவா, என்னாச்சி என்று கேட்க முதலில் மீனா சொல்ல தயங்குகிறாள். அதன்பிறகு ஜீவா வற்புறுத்தி, கேட்கும்போது நடந்ததை சொல்கிறாள். அதைகேட்டு அதிர்ச்சியாகும் ஜீவா தனம், முல்லையிடம் மீனா அப்பா கீழே விழுந்துட்டாரு என சொல்லிலிட்டு மீனாவை கூட்டிக்கொண்டு ஜனார்த்தன் வீட்டுக்கு கிளம்புகிறான். அங்கு போய் ஜனார்த்தனிடம் நடந்தவற்றை பற்றி விசாரிக்கிறான் ஜீவா.
அப்போது நடந்த்தை சொல்லும் ஜனார்த்தன் நம்ம கடைக்கு முன்னாடி வண்டி நிப்பாட்டுன கஸ்டமர் கிட்ட வண்டி நிப்பாட்ட கூடாதுன்னு பிரச்சனை பண்ணான். நான் என்னான்னு போய் கேட்கும் போது, பேசிட்டு இருக்கும் போதே கை வைச்சுட்டான் அங்க யாருமே கேட்க வரல என சொல்கிறான். அப்போது ஜீவா உங்களுக்கு யாரும் இல்லன்னு சொல்லாதீங்க. உங்க மேல கையை வைச்சுட்டு, ஒருத்தன் இந்த ஊர்ல இருக்கனுமா என கோபமாக சொல்லிவிட்டு கிளம்புகிறான்.
ஆனால் ஜனார்த்தன் மீனா என அனைவரும் சொல்லியும் கேட்காத ஜீவா, கார் டிரைவர் கூட்டிக்கொண்ட கடைக்கு வருகிறான். அங்கு 'உங்க ஐயாவே அடி வாங்கிட்டு போயிட்டாரு. இவன் என்ன கிழிக்கவா போறான்' என திமிராக சொல்ல அவனை அடித்து உதைக்கிறான் ஜீவா. அடுத்து அவனை ஜனார்த்தனிடம் மன்னிப்பு கேட்க அழைத்து செல்கிறான். இதற்கிடையில் தனம், போன்பன்னி மூர்த்தியிடம் சொல்ல, மூர்த்தி கதிர் இருவரும் நாங்க போய் என்னான்னு பார்த்துட்டு வர்றோம் என சொல்லி கிளம்புகின்றனர்.
அதற்குள் ஜீவா, அவனை கூட்டிட்டு வந்து ஜனார்த்தனிடம் மன்னிப்பு கேட்க சொல்லும் போது, மூர்த்தியும் கதிரும் அங்கு வருகின்றனர். அவர்களிடம் நடந்தவற்றை பற்றி சொல்கிறான். அப்போது கதிர் அவனை மீண்டும் அடிக்க போ, அவனை தடுக்கும் மூர்த்தி, அவனே ஆள் யாருன்னு தெரியாம அவர் மேல கைவச்சிருக்கான். இவர்மேல கை வைச்சுட்டு இந்த ஊர்ல இருந்துருவியா. உன்னை நாங்க எல்லாம் இருக்க விட்ருவோமா என சொல்கிறான்.
அதன்பிறகு அவன் மீண்டும் ஜனார்த்தனிடம் மன்னிப்பு கேட்டு, இன்னைக்குள்ள கடையை காலி பண்ணிறேன் என சொல்கிறான். அவன் போனபிறகு கதிர், ஏன் அண்ணே எங்கள எல்லாம் கூப்பிட மாட்டீயா என கேட்கிறான். அதற்கு அவன் இல்லடா அப்பாவை அடிச்சுட்டாங்கன்னு , மீனா அழுதுட்டே சொன்ன உடனே அவசரமா கிளம்பி வந்துட்டேன் என சொல்கிறான். அதன்பிறகு மீனா, நீங்க எல்லாரும் வருவீங்கன்னு நினைக்கவே இல்லை என சொல்கிறாள். அப்போது மூர்த்தி அதெப்படிம்மா, உன் அப்பாவுக்கு ஒண்ணுன்னா விட்ருவோமா என கூறுகிறான்.
இதற்கிடையில் ஜனார்த்தனை சட்டை மாற்ற அறைக்கு கூட்டி வர அவர் சட்ட மாற்றிக் கொண்டிருக்கிறார். அப்போது ஜீவா அவருக்கு பட்டன் போட்டுவிட இதை பார்க்கும் ஜனார்த்தன் நெகிழ்ச்சியுடன் ஜீவாவை கட்டிப்பிடிக்க அத்துடன் முடிகிறது இன்றைய எபிசோடு.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil