Pandian Stores Serial Today Episode : ஐஸ்வர்யாவை பார்க்க மல்லியும் பிரஷாந்தும் அவர் வீட்டிற்கு வருகின்றனர். அப்போது பிரஷாந்த் நான் ஐஸ்வர்யாவை வெளியில் கூட்டி செல்ல வேண்டும் என்று சொல்கிறான். முதலில் தயங்கும் ஐஸ்வர்யா கஸ்தூரியின் வற்புறுதலால் பிரஷாந்துடன் செல்கிறாள். இதற்கிடையே தனம் வீட்டில் அவளுடைய அம்மா அறிவுரை கூறுகிறாள். அப்போது தனம் அம்மா அவளை தன் வீட்டிற்கு கூட்டிச்செல்ல முடிவில்லைஎன்று கூறி கவலைப்படுகிறாள்.
அதற்கு முல்லையும் மீனாவும், அக்கா இங்க இல்லனா வீடு வீடாவே இருக்காது என்று கூறுகிறாள். அப்போது மீனா முல்லையை பார்த்து நீஙக ஏன் இன்னும் குழந்தை பெத்துக்கல என்று கேட்க அதற்கு முல்லை இப்போ அக்கா பெத்துக்கட்டும் அப்புறம் நான் என்று சொல்லும்போது ஒஹோ வருஷத்திற்கு ஒரு பாப்பாவா என்று கேட்கிறார். அதற்கு தனம் அம்மா பெத்துப்போடுங்கடி வளர்க்கறதுக்கா ஆயாங்க இருக்கோம் என்று கூறுகிறாள். இதனைத் தொடர்ந்து அனைனவரும் பேசி சிரித்துக்கொள்கின்றனர்.
இதற்கிடையே ஐஸ்வர்யாவை தனியாக வெளியில் கூட்டி வரும் பிரஷாந்த் நமக்கு நிச்சயம் ஆகி 3 வாரம் ஆகிறது. இதுலா ஒரு நாள் கூட நீ எனக்கு போன பண்ணலா. நான் போன் பண்ணாகூட நீ சரியா பேசல ஆனா இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில கண்ணன் கூட சிரிச்சி சிரிச்சி பேசிட்டு இருக்க என்று கேட்க, ஐஸ்வர்யா கண்ணனை விரும்புவதாக கூறுகிறாள். இதனை கேட்டு கோபப்படும் பிரஷாந்த் எந்த விதத்தில் கண்ணன் என்னவிட பெரிய ஆளு என்று கேட்கிறான். அதற்கு ஐஸ்வர்யா நான் கம்பார் பண்ணி பாக்கல நீங்க வரதுக்கு முன்னாடியே கண்ணன எனக்கு தெரியும் என்று கூறுகிறாள். அதன்பிறகு இருவரும் வீட்டிற்கு கிளம்புகின்றனர்.
இதற்கிடையே வீட்டிற்கு வரும் பிரஷாந்த் கல்யாணத்தை ஒரு மாசத்துக் அப்புறம் வேண்டாம் அடுத்த வாரமே வச்சிக்கலாம் என்று சொல்கிறன். இதை கேட்டு ஐஸ்வர்யா ஷாக் ஆக கஸ்தூரி மல்லி இருவருமே ஷாக் ஆகின்றனர். ஆனாலும் அவர்கள் இருவரும் இதற்கு சம்மதம் சொல்கின்றனர். அடுத்து மூர்த்தி வீட்டிற்கு வரும் கஸ்தூரி மல்லி ஜெகா பிரஷாந்த் அனைவரும் கல்யாணம் குறித்து பேசுகின்றனர். இதை கேட்டு கண்ணன் ஷாக் ஆக ஒருவழியாக மூர்த்தி இதற்கு சம்மதிக்கிறான். இதன்பிறகு கஸ்தூரியிடம் தனியாக பேசும் பிரஷாந்த ஐஸ்வர்யா கூறிய சொல்கிறான். இதை கேட்டு கஸ்தூரி ஷாக் ஆக அத்துடன் முடிகிறது இன்றைய எபிசொடு.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil