Tamil Serial Pandian Stores Today Episode Update : துணி எடுப்பதற்காக கண்ணனும், ஐஸ்வர்யாவும் நண்பர் ஒருவருடன் தெருவில் நடந்து செல்கின்றனர். அப்போது மூர்த்தியின் நண்பர் ஒருவர் கண்ணனிடம் நலம் விசாரிக்கிறார். மேலும் ஐஸ்வர்யாவை யார் என்று கேட்க என் தங்கச்சி என்று சொல்லி கண்ணனின் நண்பன் சமாளிக்கின்றனர். அதன்பின்னர் துணி எடுத்துக்கொண்டுமறுபடியும் காரில் ஏறி கிளம்புகின்றனர்.
இதனிடையில் ஒவ்வொரு வீடாக சென்று ஐஸ்வர்யாவை பற்றி கேட்டு கொண்டிருக்குக்கும் பிரஷாந்த், வழியின் கண்ணனின் நண்பன் ஒருவனை பார்க்கிறான். அவனிடம் கண்ணனை பற்றி விசாரிக்க அவன் கார் எடுத்து நண்பர்களோடு சென்றிருப்பதாக கூறுகிறான். அதன்பின் அவனை அழைத்துக்கொண்டு கார் ஓனரிடம் விசாரிக்கின்றனர். அவர்கள் காரைக்குடிக்கு சென்றுள்ளதாக ஓனர் கூறுகிறான்.
இதனையடுத்து பிரசாந்த் உடனே கிளம்புகிறான். இதனிடையில் கண்ணன், ஐஸ்வர்யா இருவரும் நண்பர்களுடன் கோவிலுக்கு வந்து விடுகின்றனர். இதற்கிடையே தனம் வீட்டில் கஸ்தூரி கத்திக்கொண்டிருக்க தனம் மூர்த்தியை போன் பண்ணி வீட்டிற்கு வர சொல்ல, அவன் ஜீவாவுடன் வருகிறான். அவன் வந்தவுடன் ஐஸ்வர்யா காணமல் போனதாகவும், கண்ணன் தான் அவளை இழுத்து கொண்டு ஓடி சென்றதாகவும் கஸ்தூரி கூறுகிறாள். ஆனால் தனம் இது கண்ணன் பத்தி தப்பா பேசாதீங்க என்று சொல்ல, கண்ணனை கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பஸ் ஸ்டாண்டில் பார்த்ததாக ஜீவா கூறுகிறான்.
அதனை தொடர்ந்து கண்ணனை அழைத்துக்கொண்டு வருமாறு ஜீவாவிடம் சொல்லும் மூர்த்தி கூடவே கதிரை அழைத்து கொண்டு போக சொல்கிறான். அதன்படி இருவரும் கண்ணன் நண்பர்கள் வீட்டில் எல்லாம் விசாரிக்கிறார்கள். இதற்கிடையில் கண்ணனும், அவன் பிரெண்ட் சதீஷும் கோவிலுக்கு வெளியில் நின்று பேசி கொண்டிருக்கும் போது, அங்கு பிரசாந்த் நிற்கிறான. இதனால் அதிர்ச்சியடையும் கண்ணன், அவனுக்கு எப்படி இடம் தெரியும் என்பது பற்றி யோசிக்கின்றனர்.
அவன் வருவதற்குள் சீக்கிரம் கல்யாணம் பண்ணிடனும் என முடிவு செய்கின்றனர். அதன் பின்னர் கோவில் அர்ச்சகர் கல்யாணம் செய்ய தாலி எங்கே என கேட்கும் இங்க இருக்காத என்கின்றனர். வெளிய சென்று தான் வாங்க முடியும் என சொல்லும் போது, கண்ணனும் அவன் நண்பன் சதீஷும் தாலி வாங்க வெளியே சொல்லும்போது இன்றைய எபிசொடு முடிவடைகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil