Pandian Stores Episode Update : கண்ணனை நினைத்து யாருமே சாப்பிடாமல் இருப்பதால் அனைவரையும் உட்கார வைத்து சாப்பாடு போட்டு கொடுக்கிறான் மூர்த்தி. ஆனால் சாப்பாட்டை வாங்க அனைவரும் மறுப்பதால், இப்போ ஒருத்தன் தான் வீட்டை விட்டு போயிருக்கான். நீங்க எல்லாம் இப்படியே இருந்தா நானும் வீட்டை விட்டு போய்டுவேன் என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சியாகின்றனர். இதன்பிறகு என்மேல உண்மையாவே மரியாதை இருந்தா ஒழுங்கா சாப்பிடுங்க என மூர்த்தி சொல்ல அனைவரும் சாப்பிட ஆரம்பிக்கின்றனர்.
இந்நிலையில், நண்பனின் வீட்டில் இருக்கும் கண்ணன், என்ன பண்ண போறேன் தெரியலை. வீட்டை விட்டு அனுப்புவாங்கன்னு நினைக்கவே இல்லை என ஐஸ்வர்யாவிடம் சொல்கிறான். அப்போது அவனை சமாதானப்படுத்தும் ஐஸ்வர்யா, உன்னை பார்க்காம அவுங்களால இருக்க முடியாது. கோபமா இருக்காங்க அவ்வளவு தான் என சொல்கிறாள். இதனிடையே மூர்த்தி வீட்டில் லஷ்மி சாப்பிடாமல் இருக்க, கதிர் வந்து அவன் அம்மாவை சமாதானம் செய்கிறான். ஆனால் லஷ்மி எதுவும் பேசாமல், சிலை மாதிரி உட்கார்ந்திருக்கிறாள். அப்போது அங்கு வரும் மூர்த்தியிடம், அத்தையை சாப்பிட வைங்க மாமா. அவுங்கள பார்த்தா பயமா இருக்கு என தனம் சொல்கிறாள்.
இதன்பிறகு அம்மா பக்கத்தில் அமரும் மூர்த்தியிடம் லக்ஷ்மி, என்னை விட உனக்கு தான்டா கஷ்டமா இருக்கும். நம்ம எல்லாரையும் ஏமாத்திட்டான்டா என்னால முடியலைடா மூர்த்தி. இந்த ராத்திரில எங்க போய்டா தங்குவான். ஒருநாள் கூட அவன் இந்த வீட்ல இல்லாம இருந்தது இல்லை என சொல்ல, தயவுசெய்து அவனை பற்றி பேச வேண்டாம் அம்மா. நம்மல பற்றி எல்லாம் யோசிக்காம தான இந்த காரியத்தை பண்ணினான் என சமாதானம் சொல்லி, லஷ்மிக்கு சாப்பாடு கொடுக்கிறான் மூர்த்தி.
இதற்கிடையே கஸ்தூரி அத்தை சொன்ன அப்பவே நம்ம சுதாரிச்சு இருக்கலாம். கண்ணன்கிட்ட நான் மனசு விட்டு பேசி இருக்கணும். என்மேல தான் தப்பு மாமா என தனம் சொல்கிறாள். மேலும் நான் அவனை சரியா கவனிக்காம விட்டுட்டேன் என சொல்ல அதற்கு மூர்த்தி எல்லா தப்பையும் உன் தலைல தூக்கி போட்டுகிட்ட. அவன் நம்ம தலைல கல்லை போட்டுட்டு போயிட்டான். போதும் தனம். மத்தவங்கள நினைச்சு நீ அழுதது எல்லாம் என சொல்கிறான்.
இதற்கிடையே அறையில் இருக்கும் தனம் ஒருபக்கம் தனியாக அழ மறுபுறம் மூர்த்தி சோகமான படுத்திருக்கிறான். அப்போது அவனை எழுப்பும் தனம், கண்ணன் எங்க போவான் மாமா. கஸ்தூரி அத்தாச்சியும் அவனை சேர்த்துக்க மாட்டாங்க. ரெண்டு பேர் படிப்பு என்னாகும் மாமா. எல்லாத்தையும் யோசிச்ச எனக்கு தலையே சுத்துது மாமா என சொல்லி அழுகிறாள் அத்துடன் முடிகிறது இன்றைய எபிசோடு.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil