Pandian Stores Serial Update In Tamil : வெளியூர் சென்றுள்ள கண்ணன் ஐஸ்வர்யாவிடம் பேசுவதற்காக டிரைவரிடம் போன் கேட்கிறாள். ஆனால் டிரைவர் இன்னும் கொஞ்ச நேரத்தில் வீட்டுக்கு போய்டலாம் என்று சொல்லி போன் தர மறுத்துவிடுகிறான். இதற்கிடையே ஜீவாவிடம் பேசும் ஜனார்த்தன் கண்ணன் சரக்கு டெலிவரி செய்யும் இடங்களுக்கு எல்லாம் சொல்லிவிட்டேன் தகவல் அவனுக்கு கிடைத்துவிடம் என்று சொல்கிறான்.
இதனிடையே லக்ஷ்மி அம்மாவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மல்லி வருகிறாள். அப்போது வாசலில் நிற்கும் ஐஸ்வர்யாவை பார்த்து முறைத்தபடி உள்ளே சென்று லக்ஷ்மி அம்மாவுக்கு மாலை அணிவித்துவிட்டு மூர்த்திக்கு ஆறுதல் சொல்கிறாள். அப்போது தனம் அம்மா மீனாவிடம் வந்தவர்களுக்கு காபி கொடுக்குமாறு சொல்கிறாள். அப்போது ஜனார்த்தன் ஜீவா மூர்த்தி இருவருக்கும் ஆறுதல் சொல்லி டீ குடிக்குமாறு சொல்கிறான்
அப்போது ஜீவாவை தனியாக அழைக்கும் மீனா கண்ணனிடம் சொல்லவில்லையா என்று கேட்கிறாள். அப்போது ஜீவா ஜனார்த்தன் சொன்னதை சொல்கிறாள். அதன்பிறகு ஐஸ்வர்யாவை பார்க்கும் மீனா அவளுக்கு டீ கொடுக்கிறாள். ஆனால் ஐஸ்வர்யா வேண்டாம் என்று சொல்கிறாள். அதன்பிறகு இங்கேயே எவ்வளவு நேரம் இருப்ப உள்ள வந்து உட்காரு என்று சொல்கிறாள் மீனா. முதலில் மறுக்கும் ஐஸ்வர்யா அதன்பிறகு உள்ளே செல்கிறாள்.
ஐஸ்வர்யா உள்ளே வருவதை பார்க்கும் கஸ்தூரி எங்கடி வந்த நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து அந்த அம்மாவ கொன்னுட்டீங்களேடி என்று திட்டி அவளை வெளியில் அனுப்புகிறாள். சோகமாக வெளியில் வரும் ஐஸ்வர்யா வீட்டு வாசலில் நின்றாள். இதற்கிடையே தனம் கதிரிடம் கண்ணன் எங்க என்று கேட்கிறாள். அப்போது மூர்த்தி அவன் இன்னும் வரல என்று சொல்கிறான். அப்போது ஜீவா அவன்திருச்சி போய்ருக்கான் அவனிடம் தகவல் சொல்ல முடியவில்லை என்று சொல்கிறான். அதற்கு தனம் என்ன இருந்தாலும் அவனுக்கு அம்மாடா அவனும் வந்து பாக்கனும்ல என்று சொல்கிறாள்.
அப்போது கண்ணன் வந்தபிறகுதான் தூக்கனும் என்று தனம் மற்றும் வீட்டில் உள்ள அனைவரும் சொல்கின்றனர். ஆனால் ஊர் பெரியவர்கள் திருவிழா வருது நாளைக்கு கொடி ஏற்றவேண்டும் 6 மணிக்குள்ள எடுத்தாகனும் என்று சொல்கின்றனர். அப்போத கஸ்தூரி கண்ணனுக்கு முகத்தை காமிக்காம எடுத்துடனும் என்று சொல்கிறாள். ஆனால் மீனா அவன கண்டிப்பா வரணும என்று சொல்கிறாள். மேலும் ஊர்காரர்கள் எவ்வளவோ சொல்லியும் கண்ணன் வரமா எடுக்க முடியாது என்று அனைவரும் சொல்கின்றனர்.
அதன்பிறகு ஊர் கார்ர்கள் ஆகவேண்டியதை பாருங்கள் உங்க தம்பி வரட்டும் என்று சொல்கிறர்கள். அதன்பிறகு சடங்குள் நடக்கிறது. அப்போது ஐஸ்வர்யா நானும் அவங்களுக்கு மருமகள் தான என்று சொல்லி சடங்கு செய்ய வரும்போது கஸ்தூரி தடுத்துவிடுகிறாள். அதன்பிறகு சடங்குகள் நடக்கிறது அத்துடன் இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil