/tamil-ie/media/media_files/uploads/2021/07/Pandian-Stores-12.jpg)
Pandian Stores Serial Today Episode Update : பிரசாந்த் வீட்டிற்கு வந்து பேசிவிட்டு போன பிறகு கண்ணன் ஐஸ்வர்யாவுக்கு என்ன ஐஸ்சு இன்னும் ஒரு வாரத்துல கல்யாணமாமே என்று கேட்க, நான் பிரசாந்த் கிட்ட நம்ம லவ் பண்ற விஷயம் பற்றி சொன்னேன். அவன் புரிஞ்சுக்கிட்டு கல்யாணத்தை நிறுத்துவான்னு. ஆனா இப்படி பண்ணிட்டான் என ஐஸ்வர்யா சொல்கிறாள்.
அப்போது அங்கு வரும் பிரசாந்த், போனை வாங்கி எப்படி இருக்கீங்க கண்ணன் சார். நான் இவளோட நிச்சயம் பண்ணி வைப்பேன். நீங்க லவ் பண்றேன் சொன்னா விட்டுட்டு போவேனா என சொல்லி போனை கட் பண்ணுகிறான். அதன்பிறகு ஐஸ்வர்யாவிடம் உனக்கு என்ன பெரிய அழகின்னு நினைப்பா. எனக்கு வேணும்னு நினைச்சா வேணும். உனக்கு வேணுமா, வேணாமா என்பது பற்றிலாம் எனக்கு கவலை இல்லை. இதுதான் அவன்கிட்ட நீ பேசுற கடைசியா இருக்கணும் என சொல்லிவிட்டு போகிறான்
இதற்கிடையே இன்னைக்கு எப்படியாவது வீட்ல இதைப்பற்றி பேசிடனும் என கண்ணன் யோசித்துக்கொண்டிருக்க அப்போது ஜீவா, கதிர், மீனா மூவரும் பிரசாந்த் கல்யாணம் குறித்து பேசி கொண்டிருக்கிறான். இதனால் கடுப்பாகும் கண்ணன், அங்கிருந்து சென்று விடுகிறான். அதன்பிறகு தனம் முல்லை மூர்த்தி வரும் கண்ணனிடம் என்னாச்சு என்று கேட்க, என்னடா பணம் எதுவும் வேணுமா என மூர்த்தி கேட்கிறான்.
அப்போது தனத்திடம் அவன் உண்மையை சொல்ல வரும்போது, தனம் அம்மா இப்பவும் உனக்கு மத்தவங்களை பற்றி தான் கவலை. இங்க யாரும் சின்ன பிள்ளை இல்லை என சத்தம் போடுகிறாள். அதனால் கண்ணன் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து சென்று விடுகிறான். இதற்கிடையே பிரசாந்துடன் இன்றே மதுரை கிளம்பி செல்வதை அறிந்து அதாச்சியடையும் ஐஸ்வர்யா இது குறித்து கண்ணனிடம் கூறுகிறான், அவன் நம்ம நினைச்ச மாதிரி இல்லை ரொம்ப பயங்கரமானவனா இருக்கான். இன்னைக்கே நாங்க மதுரை கிளம்பி போறேன். ஏதாவது பண்ணு மாமா ப்ளிஸ் என சொல்கிறாள்.
அப்போது கஸ்தூரி வருவதை பார்த்து போனை கட் பண்ணி விடுகிறாள். அங்கு வரும் கஸ்தூரி, அவளிடம் போனை பிடுங்கி, போய் மதுரைக்கு கிளம்புடி என சொல்ல அத்துடன் முடிகிறது இன்றைய எபிசோடு.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.