Pandian Stores Serial Today Episode Update : ஐயர் தாலி எடுத்து கொடுக்க கண்ணன் ஐஸ்வர்யா கழுத்தில் தாலி கட்டுகிறான். அந்த நேரத்தில் கதிர் ஜீவா இருவரும் கோவிலுக்குள் வந்து பார்த்துவிடுகின்றனர். இவர்களை பார்த்து அதிர்ச்சியாகும் கண்ணன், ஜீவாவிடம் அண்ணே எனக்கு வேற வழி தெரியல அண்ணே என சொல்கிறான். அதற்கு ஜீவா என்னடா சாதரணமாக வழி தெரியலனு சொல்ற.. நீ ஐஸ்வாயா கூட்டிக்கிட்டு போய்ட்டனு கஸ்தூரி அக்கா அங்க சத்தம் போட்டுக்கிட்டு இருக்காங்கடா... ஆனா எங்க கண்ணன் அப்படி பட்டவன் இல்லனு சொல்லி உன்ன கூட்டிகிட்டு வர சொல்லி அங்க எல்லாம் காத்துக்கிட்டு இருக்காங்கடா என ஜீவா சொல்கிறான்.
மேலும் நீ இப்படி பண்ணுவேனு கொஞ்சம் கூட எதிர்பார்க்கலடா நீ எங்க கண்ணனா சொல்லுடா என் கேட்கிறான். அடுத்த கதர் உன்ன இந்த கோலத்துல பாப்பேனு நினைக்கவே இல்லடா என்று சொல்கிறான். அப்போது கோவிலுக்குள் வரும் பிரஷாந்த் கண்ணனை தாறுமாறாக அடிக்கிறான். ஆனால் கதிர் பிரஷாந்தை தடுக்க அவனை பிரஷாந்த தள்ளி விட்டு மீண்டும் கண்ணனை அடிக்க கை ஓங்குகிறான். அப்போது ஐஸ்வர்யா கண்ணனின் முன்னாள் வந்து நிற்கிறாள்.
அதை பார்த்து பிரஷாந்த் அமைதியாக இருக்க, உன்ன புடிக்கலனு சொல்லியும் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணது உன் தப்ப்பு. எனக்கு கண்ணன் மாமாவதான் புடிச்சிருக்கு. நானா விரும்பிதான் இங்க வந்து கல்யாணம் பண்ணிக்கிட்டோன் என்று ஐஸ்வர்யா சொல்கிறாள். மேலும் உன்ன எனக்கு சுத்தமா புடிக்கல கண்ணன் மாமாவத்தான் எனக்கு புடிச்சிருக்கு என்று சொல்ல கண்ணன புடிச்சிருக்கா என்று கேட்கும் பிரஷாந்த் மீண்டும் அவனை அடிக்க கை ஓங்குகிறான்.
அப்போது அவனை தடுக்கும் கதிர் அடிக்க வேண்டாம்னு சொல்றேன்ல என்று சொல்லி அவனை தள்ளி விடுகிறான். அதன்பிறகு என்ன புடிக்கலனு சொல்லிட்டு இவன்கூட எப்படி வாழ்றனு நான் பாக்குறேன் என் சொல்லிட்டு பிரஷாந்த் அங்கிருந்து கிளம்புகிறான். அவன் போன பிறகு கண்ணன் ஜீவாவிடம் அண்ணே என்ன புரிஞ்சிக்கனே என்று சொல்ல கிட்டவராத என் ஜீவா சொல்கிறான். கண்ணன போய் கூட்டிக்கிட்டு வா அவன் வந்த அவன் மேல தப்பு இல்லனு தெரிஞ்சிடும் சொன்னாங்கடா இப்ப போய் என்னடா பதில் சொல்றது என கேட்கிறான்
அதன்பிறகு கண்ணன் கதிரிடம் செல்ல, கதிர் அவனை அடிக்க போகிறான். அப்போது ஐஸ்வர்யா கண்ணன் கை பிடிக்க கதிர் அடிக்காமல் விடுகிறான். அதன்பிறகு ஜீவா கதிரை அழைத்துக்கொண்டு புறப்படுகிறான். வீட்டிற்கு வரும் கதிர் ஜீவா இருவரும் அமைதியாக இருக்க கண்ணன் எங்கடா என் தனம் கேட்கிறாள். அதற்கு இருவரும் அமைதயான இருக்கின்றனர். அப்போது கஸ்தூரியும் பேச , அப்போது அங்கு வரும் பிரஷாந்த் ஐஷ்வர்யா கண்ணன் கூடத்தான் போயிருக்கிறாள் என்று சொல்கிறான்.
அப்போது மல்லி உனக்கு விஷயம் தெரிந்தப்பவே என்ற சொல்லிருக்க வேண்டாமா? இவ இப்படித்தான் ஊர் சுத்துவானா இந்த ஐஸ்வர்யா நமக்கு எதுக்குடா, உனக்கு என்ன பொன்னா கிடைக்காது என்று கேட்க, கஸ்தூரி என் வீட்டு பொண்ணு தப்பானவ கிடையாது என்று சொல்கிறாள். இந்த கண்ணன்தாக் அவள ஏதேதொ பேசி மயக்கி கூட்டிக்கிட்டு போய்ருக்கான் என்று சொல்ல அப்போது பிரஷாந்த் அவர்கள் இருவரும் கல்யாணம் பண்ணிக்கிட்டதாக சொல்கிறாள் இதை கேட்டு அனைவரும் ஷாக் ஆக அத்துடன் முடிகிறது இன்றைய எபிசோடு.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil