Pandian Stores Serial Update : கண்ணனை நினைத்து புலம்பும் தனம் ஜெகாவிற்கு போன் செய்து கண்ணன் காலையில் வீட்டிற்கு வந்தது குறித்தும், மூர்த்தி அவனிடம் முகம் கொடுத்து பேசாதது குறித்தும் சொல்கிறாள். அத்கு ஜெகா மூர்த்தி மாப்பிள்ளை பண்ணது தப்பே இல்லை. ரெண்டு தடவை வீட்டு வாசல்ல வந்து நின்னா சேர்த்துப்பீங்கன்னு நினைப்பு என சொல்கிறான். அப்போது தனம், கண்ணனை நான் பிள்ளை மாதிரி வளர்ந்துட்டேன். அவனுக்கு ஏதாவது உதவி பண்ண முடியுமா என கேட்கிறாள்.
இதனால் அதிர்ச்சியாகும் ஜெகா, நான் ஏதாவது பண்ணா கஸ்தூரி சாமி ஆட்டம் ஆடுவா. உனக்கு ஏதாவது வேணும்னா சொல்லு. அண்ணன் என் தலையை அடமானம் வைச்சாவது உனக்கு செய்வேன். ஆனா அவனுக்குன்னு எதையும் நீ எனக்கு கேட்காத என சொல்கிறான். இதனால் தனம் சோமாக இருக்க, முல்லை, அவள் அப்பா முருகனுக்கு போன் பண்ணி கண்ணனுக்கு உதவி செய்ய முடியுமா என கேட்கிறாள்.
அதை கேட்டு பதறும் முருகன், உன் அம்மா சும்மா இருப்பாளா, இல்ல மூர்த்தி மாப்பிள்ளை தான் சும்மா இருப்பாரா என்று கேட்கிறான். அது எல்லாத்தையும் யோசிச்சு தான் இந்த உதவியை உங்ககிட்ட நான் கேட்கிறேன். முடிஞ்சா எனக்காக இதை பண்ணுங்க அப்பா என சொல்லிவிட்டு போனை கட் பண்ணுகிறாள். இதற்கிடையில் கண்ணன், ஐஸ்வர்யா இருவரையும் ரூம் எடுத்து தங்குமாறு சொல்கிறான் சதீஷ். அப்போது அங்கு வரும் முருகன், நீ இப்படி பண்ணுவேனு எதிர்பார்க்கவே இல்ல மாப்பிள்ளை என் அக்காவுக்கு கடைசி காலத்துல கூட உன்னால நல்லது செய்ய முடியலைல என சொல்கிறான்.
அதனை தொடர்ந்து அவர்கள் இருவரையும் தன்னுடைய வீட்டிற்கு அழைத்து செல்கிறான் செல்கிறான். அவர்களை பார்த்து கொதிப்படையும் பார்வதி வாசலிலே நிற்க சொல்கிறாள் பார்வதி. அப்போது முருகன், எங்க போறதுன்னு தெரியாம ரெண்டும் ரோட்ல நிற்குதுங்க என என சொல்ல கல்யாணம் பண்ண தெரிஞ்சவங்களுக்கு வாழ தெரியும். நீங்க எதுக்கு கூட்டிட்டு வந்தீங்க என கேட்கிறாள்.
இதற்கு முருகன் எவ்வளவு சமாதானம் கூறியும் பார்வதி அதை ஏற்க மறுக்கிறாள். அதனை தொடர்ந்து கொஞ்ச நாளைக்கு இங்க இருக்கட்டும் பார்வதி. எனக்காக இதை பண்ணு என சொல்லி அவர்களை வீட்டிற்குள் போக சொல்கிறான். அதன்பின்னர் முல்லைக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்கிறான் முருகன் அத்துடன் இன்றைய முடிகிறது இன்றைய எபிசோடு
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil