Tamil Serial Pandian Stores Today Episode : கஸ்தூரி கண்ணன் பற்றி மூர்த்தியிடம் கூறும்போது, ஏதோ காலேஜ்ல கூட படிக்குற பையன்னு தான் பேசிருப்பான் என சொல்கிறான். அதற்கு கஸ்தூரி அப்ப எங்க முன்னாடி பேசிருக்க வேண்டியது தான. மறைஞ்சு மறைஞ்சு எதுக்கு பேசணும் என கேட்கிறாள். அவளே அப்பா, அம்மா இல்லாத பொண்ணு. அவ கல்யாணத்துக்கு நான் எதுவும் சேர்த்து வைக்கல. அவளுக்கு ஒரு நல்ல வரன் அமைஞ்சு இருக்கு. அதுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்ட, அதுக்கு நீங்க தான் காரணம் என சொல்கிறாள்.
அதற்கு மூர்த்தி, இப்போ வரைக்கும் என்ன நடந்துச்சுன்னு எங்களுக்கு தெரியலை. ஆனா இனிமேல் கண்ணன், ஐஸ்வர்யா கிட்ட பேச மாட்டான் என என சொல்ல கஸ்தூரியும் வீட்டிற்கு கிளம்புகிறாள். அதன்பிறகு கண்ணனிடம் மூர்த்தி விசாரிக்கும்போது, காலேஜ்ல என்கூட படிக்கிற பிள்ளை. சித்தி திட்றாங்கன்னு என்கிட்ட சொன்னா. அதைத்தான் கேட்டுட்டு இருந்தேன் என சொல்கிறாள்.
அதற்கு மூர்த்தி உன் அண்ணன்கள் மேல இது மாதிரி புகார் வந்துதா? இனிமேல் உன்மேல இந்த மாதிரி ஏதாவது கம்பெளயிண்ட் வந்தா அவ்வளவு தான் என சொல்லிவிட்டு செல்கிறான். இதன் பிறகு அண்ணி மூவரும் மூவரும் தனித்தனியாக அட்வைஸ் பண்ணுகின்றனர். அதன்பிறகு நிச்சயம் நடந்து முடிந்த அன்று கண்ணன் ஐஸ்வர்யா இருவரும் தனியா பேசிகொண்டிருந்தது குறித்து தனம் மீனா இருவரிடமும் முல்லை சொல்கிறாள். அதை கேட்டு தனம் அதிர்ச்சியாக, ஒருவேளை ரெண்டு பேரும் லவ் பண்றாங்க போல என மீனா சொல்கிறாள்.
இதையெல்லாம் கேட்டு கொண்டிருக்கும் கண்ணன், உண்மையை சொல்ல யோசிக்கும்போது, மீனா, கண்ணனையே கூப்பிட்டு கேட்கலாம் என்று சொல்கிறாள். அதற்கு முல்லை, அவன் எந்த பொண்ண பார்த்தாலும் பல்ல இளிச்சு பேசுவான். அந்த மாதிரி தான் ஐஸ்வர்யா கிட்டயும் பேசிருப்பான் என சொல்கிறாள். அதற்கு தனம், அவ நிச்சயம் ஆன பொண்ணு. கண்ணன் இதையெல்லாம் நிறுத்துறது தான் நல்லது என சொல்கிறாள்.
இதைக்கேட்டு தனியாக யோசித்துக்கொண்டிருக்கும் கண்ணன் ஐஸ்வர்யாவிடம் போக் செய்து நடந்ததை பற்றி சொல்கிறான் கண்ணன். அப்போது பிரசாந்த் அவளுக்கு கால் பண்ணும் போது வெயிட்டிங்கில் வரவும் கஸ்தூரிக்கு போன் செய்து ஐஸ்வர்யாவிடம் பேசணும் என சொல்கிறான். அதன்பிறகு கஸ்தூரி ஐஸ்வ்ரயாவை போனை எடுக்க சொல்லி வற்புறுத்துகிறாள்.
அதன்பிறகு போன் எடுக்குமு ஐஸ்வர்யாவிடம், யார் கிட்ட பேசிட்டு இருந்தா. அவள் ப்ரண்டுகிட்ட என்று சொல்லும்போது அதை கட் செய்துவிட்டு என் போனை அட்டன் செய்ய வேண்டியதானே என சொல்கிறான். பேசிட்டு இருக்கும்போது எப்படி கட் பண்ற என்று அவர் கேட்க நான் பேசணும் நினைச்சா பேசணும். எனக்கு இந்த வெயிட்டிங்ல வர்றது எல்லாம் பிடிக்காது என ஐஸ்வர்யாவை எச்சரிக்க அவர் அதிர்ச்சியாகிறாள் அத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil