மீண்டும் சீரியலில் நடிகை ஜெனிபர்
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவாக நடித்து வந்தவர் நடிகை ஜெனிபர். அப்போது அவர் கர்ப்பமாக இருந்ததால சீரியலை விட்டு விலகிய நிலையில், அவருக்கு பதிலாக ரேஷ்மா ராதிகாவாக நடித்து வருகிறார். 2-வது பிரசவத்தில் ஆண்குழந்தை பெற்றெடுத்த நடிகை ஜெனிபர் தற்போது மீண்டும் சீரியலில் ரீ-எண்ட்ரி கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆல்யா மானசாவின் புதிய தொடர்
விஜய் டிவியின் ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமான நடிகை ஆல்யா மானசா அந்த சீரியலின் நாயகன் சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் அவருக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில், ஆல்யா ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வந்தார். இதனிடையே அவர் 2-வது முறையாக கர்ப்பமானதால் அந்த சீரியலில் இருந்து விலகினார். தற்போது இவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில், ஆல்யா மீண்டும் சீரியலில் ரீ-எண்ட்ரி கொடுக்க உள்ளார். ஆனால் விஜய் டிவி இல்லாமல் அவர் சன்டிவியில் நடிக்க உள்ளதாக ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது.
டாப் 5 சீரியல் டிஆர்பி ரேட்டிங்
சின்னத்திரையின் சீரியலகள் ரசிகர்களின் வரவேற்பை பொறுத்து டிஆர்பி ரேட்டிங் கணக்கிடப்படுகிறது. அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள ரேட்டிங்கின்படி சன்டிவியின் கயல் சீரியல் முதலிடத்திலும், எதிர்நீச்சல் 2-வது இடத்திலும், சுந்தரி 3-வது இடத்திலும், ரோஜா 4-வது இடத்திலும், விஜய் டிவியின் பாக்கியலட்சுமி 5-வது இடத்திலும் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய்க்கு அக்காவாக மௌனராகம் சீரியல் நடிகை
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் புலி. குழந்தைகளை டார்கெட் செய்து எடுக்கப்பட்ட இந்த படம் சுமாரான வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தில் குழந்தை பருவத்தில் நடித்த விஜய் கேரக்டருக்கு அக்காவாக மௌனராகம் சீரியல் நடிகை ரவீனா நடித்திருந்தார். அந்த படத்தில் அவரை கொன்றுவிடுவார்கள்.

பாண்டியன்ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை விலகல்?
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குடும்பங்கள் கொண்டாடும் இந்த சீரியலில் இருந்து முல்லை மற்றும் ஐஸ்வர்யா கேரக்டர்களுக்கு அவ்வப்போது நடிகைகள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். அந்த வகையில் முல்லையாக நடித்து வந்த காவிய விலகியதை தொடர்ந்து தற்போது மற்றொரு நடிகை முல்லையாக நடித்து வரும் நிலையில், ஐஸ்வர்யா கேரக்டரில் நடித்து வரும் நடிகை காயத்ரி படங்களில் கமிட் ஆகி இருப்பதால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“