New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/01/Pandian-Stores.jpg)
Tamil Serial Pandian Stores Rating Update : விஜய் தொலைக்காட்சியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது சகோதரர்களின் ஒற்றுமையை முக்கிய கருவாக வைத்துள்ள இந்த சீரியல் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு ஹிட்டடித்து வருகிறது. தொடக்கத்தில் நல்ல வரவேற்பை பெற்றாலும் இடையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்களுக்கு சற்று சளிப்பை ஏற்படுத்தியது என்று தான் சொல்ல வேண்டும்.
இதற்கு முக்கிய காரணம் ஒற்றுமையாக இருந்த குடும்பத்தில் இருந்து கண்ணன் தனியாக பிரிந்தது, லட்சுமி அம்மா இறந்தது, அதன்பிறகு நடைபெற்ற பல சம்பவங்கள் எதுவும் சுவாரஸ்யமாகதாக இல்லை. ஆனால் கடந்த சிலஎபிசோடுகளில் கண்ணன் மீது திருட்டுப்பழி, அதை மீனா தீர்த்து வைத்தது, கண்ணனுக்கு விபத்து, மீண்டும அவர்களை வீட்டிற்குள் சேர்த்துக்கொண்டது என பரபரப்பான திருப்பங்கள் அரங்கேறியது.
என்னதான் இந்த காட்சிகள் அனைத்து திருங்களை ஏற்படுத்தி எதிர்பார்ப்புகளை அதிகரித்தாலும், வீட்டிற்குள் வந்த ஐஸ்வர்யா என்ன செய்ய போகிறாரோ இதனால் என்ன பிரச்சனை வரப்போகிறது என்று தெரியவில்லை என ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர். ஆனால் இந்த குழப்பத்திற்கு முடிவு தெரியும் வகையில், தற்போது நைட்டி வடிவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் புதிய பூகம்பம் வெடித்துள்ளது.
வெளியில் இருந்து வீட்டிற்கு வந்துள்ள ஐஸ்வர்யா குடும்பத்தினரிடம் நன்றாக பழகினாலும், அவரை பாண்யன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக்கொள்ள ரசிகர்கள் உடன்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். கண்ணன் அந்த வீ்ட்டிற்குள் செல்ல வேண்டும் என்று எவ்வளவு ரசிகர்கள் எதிர்பார்த்தார்களே அந்த அளவிற்கு ஐஸ்வர்யா பாண்டியன் ஸ்டோர் குடும்பத்திற்கு செட் ஆவாரா என்றும் யோசித்தனர்.
தற்போது அவர்கள் எதிர்பார்த்தது போலவே தற்போது ஐஸ்வர்யா வீட்டில் உள்ள அனைவரின் பேச்சையயும் தட்டிக்கழிக்கும் வகையிலே நடந்துகொள்கிறார். முதல்நாளில் வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் செய்தாலும், அவர் நைட்டி அணிந்தது வீட்டில் உள்ள யாருக்கும் பிடிக்கவில்லை. மீனா ஐஸ்வர்யாவிடம் நைட்டி அணிய கூடாது என்று சொன்னாலும் ஐஸ்வர்யா அதனை கேட்பதாக இல்லை.
மாறாக தனம் நம்ம குடும்பத்திற்கு நைட்டி செட் ஆகாது என்று சொல்லியும், ஐஸ்வர்யா அதை கேட்காமல் நைட்டியுடனே சுற்றிக்கொண்டிருக்கிறார். இதை பார்த்த மீனா கோபத்தில் உச்சத்திற்கு சென்றிவிடுகிறார். தற்போது ஐஸ்யாவுக்கு போட்டியாக அவரும் தனது அம்மாவிடம் சொல்லி நைட்டி வாங்கியுள்ளார். ஐஸ்வர்யாவுக்கு போட்டியாக மீனா நைட்டி அணிவது குடும்பத்தில் என்ன பிரச்சனையை உண்டாக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு பாத்ரூம் கட்டுவது குறித்து காட்சிகளுடன் சில எபிசோடுகளை கடத்திய பாண்டியன் ஸ்டோர்ஸ் இயக்குநர் தற்போது நைட்டியை வைத்து பல எபிசோடுகளை கடத்த முடிவு செய்துவிட்டார் போலும். கிட்டத்தட்ட 2 வாரங்களுக்கு மேலாக இந்த நைட்டி பிரச்சினை பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்த்தை சுற்றி வருகிறது. இதன் மூலம் ரசிகர்கள் எதிர்பார்த்த அந்த சண்டை வெடிக்க தொடங்கியுள்ளது.
ஆனாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சண்டையில் இருந்தாலும், மீனா கேரக்டர் தனது நடிப்பின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறார். அவரின் துருதுரு நடிப்பினால் மட்டுமே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நன்றாக சென்றுகொண்டிருப்பதாக ரசிகர்கள் பலரும் கூறி வருகினறனர். ஆனால் நாட்டில் எவ்வளவோ பிரச்சினை இருக்கிறது. ஆனால் உங்களுக்கு நைட்டி தான் பிரச்சினையா குடும்ப கதையை சரியா கொண்டு போங்க சார் என்று கூறி வருகின்றனர். எது எப்படியோ இந்த நைட்டி பிரச்சனை இன்னும ஒரு மாதத்திற்கு தாங்கும் என்று எதிர்பார்க்கலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.