சீரியல்கள் ஒளிபரப்புவதில் முன்னணியில் இருந்து வரும் விஜய் டிவியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் புதிதாக தொடங்கப்பட்ட ஒரு சீரியல், 9 மாதங்களில் திடீரென முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் டிவி சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதை தக்க வைத்துக்கொள்ள, சீரியல் திரைக்கதையில் சுவாரஸ்யத்தை அதிகரிப்பது, புதிய சீரியல்களை களமிறக்குவது உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் விஜய் டிவியில் தொடங்கப்பட்ட சீரியல் பனிவிழும் மலர்வனம்.
ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்து பிரபலமான நடிகர் சித்தார்த் குமரன், பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் சின்னத்திரை சீரியலில் அறிமுகமான வினுஜா தேவி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் இந்த சீரியிலில், பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். அண்ணன் தங்கை, இடையேயான பாசம், மற்றும் அவர்களின் வாழ்க்கைகையை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பை பெற்று வந்தது.
/indian-express-tamil/media/media_files/2025/03/18/vinusha-devi-serial1-270095.jpg)
கடந்த ஆண்டு ஜூன் மாதம் இறுதியில் தொடங்கப்பட்ட இந்த சீரியல், ஒரு வருடம் கூட முடியாத நிலையில், மோசமான டி.ஆர்.பி காரணமாக சீரியல் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக விஜய் டிவி மற்றும் சன்டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள், குறைந்தது 2 வருடங்கள ஒளிபரப்பாகி வரும் நிலையில், தற்போது பனிவிழும் மலர்வனம் 9 மாதங்களில் முடிவுக்கு வருவது அந்த சீரியல் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாரதி கண்ணம்மா சீரியலின் முதல் சீசனில் பாதியில் அறிமுகமான நடிகை வினுஷா தேவி, அதன்பிறகு, பாரதி கண்ணம்மா சீரியலின் 2-வது சீசனில், சிபு சூரியனின் ஜோடியாக நடித்திருந்தார். இந்த சீரியலுதம் ஒரு வருடத்திற்கு முன்பாகவே முடிவுக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் நடித்துள்ள மற்றொரு சீரியலும் ஒரு வருடத்திற்கு முன்பாக முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.