scorecardresearch

விஜய் டிவி சீரியலில் புது என்ட்ரி…! யார் இந்த பவித்ரா?

Tamil Serial Update : குடும்ப கதையும் ஆக்ஷன் மற்றும் ட்விஸ்ட்கள் நிறைந்த நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் டிஆர்பி ரேடங்கிங்கிலும் முன்னணியில் இருந்து வருகிறது.

Tamil Serial Naam Iruvar Namakku Iruvar Update : தமிழ் சின்னத்திரையில், விஜய் டிவி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் ஒரு சில சீரியலகள் டிஆர்பி ரேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் கொரோனா காலகட்டத்தில் இந்த சீரியல் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் ரசிகர்கள் பெரிய ஏமாற்றம் அடைந்தது.

அதனைத் தொடர்ந்து சில மாதங்கள் இடைவெளிக்கு பிறகு நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2 சீரியல் தொடங்கப்பட்டது. முதல் சீசனைப்போலவே இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குடும்ப கதையும் ஆக்ஷன் மற்றும் ட்விஸ்ட்கள் நிறைந்த இந்த சீரியல் டிஆர்பி ரேடங்கிங்கிலும் முன்னணியில் இருந்து வருகிறது. மிர்ச்சி செந்தில் ராஜூ ஜெயமோகன் ஆகியோருடன் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றன.

இந்த சீரியலில் மிர்ச்சி செந்தில் மாயன் மற்றும் மாறன் என்ற இரு வேடங்களில் நடித்து வருகிறார். இதில் மாயனின் மனைவி மகா கேரக்டரில் நடித்து வந்த நடிகை ரக்ஷிதா திடீரென சீரியலில் இருந்து விலகினார். சினிமா வாய்ப்பு கிடைத்ததால் சீரியலில் இருந்து விலகியதாக தகவல் வெளியானது. அதனைத் தொடர்ந்து தற்போது மகா கேரக்டரில் அரண்மனை கிளி சீரியலின் மோனிஷா நடித்து வருகிறார்.

இது ஒருபுறம் இருக்க பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற ராஜூ ஜெயமோகன் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தும் இன்னும் சீரியலில் என்ட்ரி ஆகாமல் உள்ளார். இதனால் ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ள நிலையில், தற்போது இந்த சீரியலில் புதிய கேரக்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அவர் பெயர் பவித்ரா. தொகுப்பாளினியாக அறியப்பட்ட இவர், சன்டிவியின் நிலா சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இதில் இரட்டையர்களில் மாறனுக்கு மகா ஜோடியாக உள்ள நிலையில், தற்போது பவித்ரா மாறன் கேரக்டருக்கு ஜோடியாக நடிப்பார் என்று கூறப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial pavithra entry in vijay tv naam iruvar namakku iruvar serial