சன் டி.வியின் முக்கிய சீரியல் முடிவு : களமிறங்கும் புதிய சீரியல் : ஹீரோ யார் தெரியுமா?

சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல் முடிவுக்கு வர உள்ள நிலையில், அடுத்து வரும் புதிய சீரியலின் ப்ரமோ எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது,

சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல் முடிவுக்கு வர உள்ள நிலையில், அடுத்து வரும் புதிய சீரியலின் ப்ரமோ எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது,

author-image
WebDesk
New Update
Priyamana Thozhi

சன்டிவியின் சீரியல்

சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரியமான தோழி சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இந்த சீரியலின் இறுதி எபிசோட்டுக்கான படப்பிடிப்பு முடிந்துள்ளதாகவும், இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழ் சின்னத்திரையில் சன் டிவி சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக கிராமபுரங்களில், சன் டிவி சீரயில்கள் தான் சின்னத்திரை ரசிகர்களின் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக உள்ளது. இதன் காரணமாக ஒரு சீரியல் முடிவுக்கு வரும்போது மற்றொரு சீரியல் உடனடியாக தொடங்கிவிடும். மேலும் சீரியல் முடிவுக்கு வரும் முன்னரே புதிய சீரியலின் ப்ரமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிடும்.

அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரியமான தோழி சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, கடந்த 2 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிரியமான தோழி சீரியலை பாண்டவர் இல்லம் சீரியலை இயக்கிய குழுவினர் தான் இயக்கி வருகின்றனர். விக்கி ரோஷன் இந்த சீரியலின் நாயகனாக நடித்து வருகிறார். இந்த சீரியலின் இறுதி எப்சோட்டுக்கான படப்பிடிப்பு முடிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பிரியமான தோழி சீரியல் முடிந்த பிறகு அதற்கு பதிலாக கல்யாண கலாட்ட என்ற புதிய சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீரியலிலும் விக்கி ரோஷன் நாயகனாக நடிக்க உள்ளார். சன் டிவியில் ஏற்கனவே மல்லி மற்றும் புன்னகை பூவே ஆகிய புதிய சீரியல்கள் ஒளிபரப்பாக உள்ள நிலையில், தற்போது புதிதாக கல்யாண கலாட்டா என்ற சீரியலும் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீரியல்கள் ரசிகர்கள் மனதை கவருமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamil Serial News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: