Advertisment

Tamil Serial Rating : இவங்க அலப்பற தாங்க முடியல சாமி... பாண்டியன் ஸ்டோர்ஸ்-க்கு இப்படி ஒரு நிலையா?

Tamil Serial Update : சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது

author-image
WebDesk
New Update
Tamil Serial Rating : இவங்க அலப்பற தாங்க முடியல சாமி... பாண்டியன் ஸ்டோர்ஸ்-க்கு இப்படி ஒரு நிலையா?

Tamil Serial Rating Update : தற்போதைய காலகட்டத்தில் சீரியல் ரசிகர்களும் அதில் நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகளே மக்கள் மத்தியில அதிக வரவேற்பைபெற்று வருகினறனர். ஆனால் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதை கவர்ந்ததா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல் எத்த்தனை சீரியல்கள் ஒளிபரப்பானாலும் வார இறுதியில் வெளியாகும் டிஆர்பி ரேட்ங்கில் முதல் 5 இடங்களை பெறும் சீரியல்களே அதிக கவனம் பெறுகின்றன. அதற்காக மற்ற சீரியல்கள் எல்லாம் சரியாக போகவில்லை என்று அர்த்தம் அல்ல.

Advertisment

சில சீரியல்கள் அதிகப்படியான ரசிகர்களின் மனதை கவர தவறி விடுகின்றன என்று கூறலாம். இதில் சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்படும். அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள ப்ரமோ வீடியோக்களில் எந்த சீரியல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்போம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் :

தனம் வளைகாப்பு

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் இவங்க அலப்பற தாங்க முடியல என்று பதிவிட்டுள்ளார். தனம் ஓவர் ஆக்டிங் என்று மற்றொரு ரசிகர் பதிவிட்டுள்ளார். இதில் மற்றொரு ரசிகர் சைடுல் கேமரா பாருங்க நான் ப்ராங்க் பண்ண என்று தனம் தாமுவிடம் சொல்வது போல பதிவிட்டுள்ளார். நடிக்கலாம் ஆனா இப்படியா என்று மற்றொரு ரசிகர் பதிவிட்டுள்ளார்.

போன லாக்டவுன்ல டாக் போட்டு கடைய மூடுனாங்க அதே மாதிரி ஒரு லாக் போட்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் மூடுங்கப்பா தாங்க முடியல என்று ஒரு ரசிகர் பதிவிட்டுள்ளார். மேலும் ஒரு ரசிகர் உலகமகா நடிப்புடா சாமி என்று பதிவிட்டுள்ளார். மேலும் பலரும் ரொம்ப ஓவர் ஆக்டிங் என்றே கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

பாரதி கண்ணம்மா

கண்ணம்மா வீட்டில் பாரதி

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் கண்ணம்மா தான் ஹேமாவுக்கு அம்மா ன்னு டைரக்டர் சார் நீங்க சொல்றீங்களா, இல்ல நான் கால் பண்ணி சொல்லவா. போன் நம்பர் மட்டும் கிடைக்கட்டும் அப்புறம் கதையையே மாத்துரேன் என பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் தனது குழந்தைதான் ஹேமா ன்னு கண்ணம்மா க்கு எப்போது தெரியும் ஹேமா க்கு கல்யாணம் ஆகும்போது தெரியுமா? ஏன்னா இந்த சீரியலுக்கு முடிவு இல்லையாமே என பதிவிட்டுள்ளார்.

மேலும் ஒரு ரசிகர் ஒருத்தன் முட்டாளா இருக்கலாம் ஆனா இந்த அளவுக்கா இருப்பாங்க அதுவும் ஒரு டாக்டர் எள்று பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் ஹேமா வீட்ல இருந்த லட்சுமி எங்கே போவா என்று பதிவிட்டுள்ளார். ஹாஸ்பிட்டல் கூட்டிகிட்டுபோய் டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தா இந்த டாக்டருக்கு தெரியபோகுது. அப்புறம் எதுக்கு இவ்ளோ எபிசோடு இழக்குறீங்க என்று பதிவிட்டுள்ளா.

பாக்கியலட்சுமி :

பாக்யா – கோபி – ராதிகா

இந்த ப்மோவை பார்த்த ரசிகர் ஒருவர் கோபி ப்ரண்டு குடும்பத்துக்கு நாக்கே இல்ல போல நல்லா இருக்க சாப்பாட்ட நல்லா இல்லனு சொல்லறாங்க என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் கோபி இப்படி சத்தம் போடுவதை பார்த்து உனக்கு ஒருநாளைக்கு இருக்குடா என்று நினைப்பது போல பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் இது உண்மையா இருக்குமா இல்லது கனவா என்று பதிவிட்டுள்ளார்.

ராஜா ராணி 2:

சந்தியா – சரவணன்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் ஏன் இவ்ளோ போர் அடிக்கர மாதிரி சீரியலை கொண்டுபோரிங்க என்றுபதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் சூப்ப்பு ஆல்யா மானசா என்று பதிவிட்டுள்ளார். கடந்த வாரம் முழுவதும் இருவரும் புரிதல் இல்லாமல் நடந்துகொண்டது ரசிகர்களை கடுப்பேற்றியது குறிப்பிடத்தக்கது.

ரோஜா

அர்ஜூன் – ரோஜா – அனு

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் டைகர் மாணிக்கம் திற்கு முன்னால் அர்ஜுன் சவால் விடும் போது. டைகர் மாணிக்கம் அங்கே பூனை மாணிக்கம் ஆகிவிட்டார் என்று பதிவிட்டுள்ளார்.  மற்றொரு ரசிகர் ஆமாம் டைகர், நல்லா தெரிஞ்சிக்கங்க. நாங்களும் அர்ஜுன் கூட நின்னு மாஸ் காட்டுவோம் அர்ஜுன் என பதிவிட்டுள்ளார். மேலும் ஒரு ரசிகர் அர்ஜூன் ஆல்வேஸ் மாஸ் என்று பதிவிட்டுள்ளார். மேலும் பல ரசிகர் அர்ஜூன் பற்றி புகழ்ந்து கமெண்ட் பதிவிட்டுள்ளனர்.

இந்த ப்ரமோக்களை வைத்து பார்க்கும்போது ரோஜா சீரியலுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்று கூறலாம். பாக்கியலட்சுமி சீரியலும் கொஞ்சம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மற்றபடி அனைத்து சீரியல்கள் அவரவர் ரசிகர்களை திருப்திப்படுத்தும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial News Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment