Tamil Serial Rating : ஒரு பிரிவிற்கு பிறகு வரும் காதல் அழகானது: ரசிகர்களின் பாராட்டு மழையில் பாரதி கண்ணம்மா

Tamil Serial Update : சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது

Tamil Serial Rating Update : தற்போதைய காலகட்டத்தில் சீரியல் ரசிகர்களும் அதில் நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகளே மக்கள் மத்தியில அதிக வரவேற்பைபெற்று வருகினறனர். ஆனால் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதை கவர்ந்ததா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல் எத்த்தனை சீரியல்கள் ஒளிபரப்பானாலும் வார இறுதியில் வெளியாகும் டிஆர்பி ரேட்ங்கில் முதல் 5 இடங்களை பெறும் சீரியல்களே அதிக கவனம் பெறுகின்றன. அதற்காக மற்ற சீரியல்கள் எல்லாம் சரியாக போகவில்லை என்று அர்த்தம் அல்ல.

சில சீரியல்கள் அதிகப்படியான ரசிகர்களின் மனதை கவர தவறி விடுகின்றன என்று கூறலாம். இதில் சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்படும். அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள ப்ரமோ வீடியோக்களில் எந்த சீரியல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்போம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் :

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் கல்யாணத்தை சீக்கரம் முடிங்கப்பா என்று கூறியுள்ளார். மற்றொருவர், கண்ணன நம்பாத ஐஸ்சு அவன் இன்னும்வீட்டில சொல்லவே ஒரு வருஷம் ஆகும் என்று பதிவிட்டுள்ளார். கண்ணன விட பிரஷாந்த் பெட்டர் என மற்றொரு ரசிகர் பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் கண்ணா ஐஸ்வர்யா உனக்குதான் என்று பதிவிட்டுள்ளார்.  மற்றொரு ரசிகர் வேலைக்கு போகல கண்ணன் எப்படி ஐஸ்வர்யாவ பாத்துக்குவான் என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் கண்ணனுக்கு எதிராகவே கமெண்ட் செய்துள்ளனர்.

பாக்கியலட்சுமி

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் கோபியை கலாய்த்து கமெண்ட் பதிவிட்டு வருகினறனர். கடந்த வாரம் முதல் ராதிகா வீட்டில் மயூ பிரச்சினை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது கோபி ராதிகா இருவரையும் ஒன்றாக பார்த்த எழில் அடுத்து என்ன செய்ய போகிறரன் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பாரதி கண்ணம்மா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் பாரதியையும் கண்ணாமாவையும் இப்படி சேர்ந்து பார்க்க ரொம்ப சந்தோஷமாக இருக்கு…. என பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் ஒரு பிரிவிற்கு பிறகு வரும் காதல் அழகானது என்று பதிவிட்டுள்ளார். இப்போ தான் கதை நல்லா போகுது சரி இந்த சந்தோசத்துல அப்படியே அந்த டெஸ்ட் எடுங்க என ஒரு ரசிகர் பதிவிட்டுள்ளார். மறுபடியும் பாரதி கண்ணம்மா பார்க்க வேண்டியது தான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூப்பர் என ஒரு ரசிகர் பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் டெஸ்ட் பன்னலனாலும், உப்புமா,கேசரி பன்னியே சேர்ந்துருவாங்க போலையே என பதிவிட்டுள்ளார்.

ராஜா ராணி 2

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் சிவகாமி முகம் ஏன் அப்படி போகுது என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் வீட்டுக்கு போய்தான் அவளுக்கு இருக்கு என்று சிவகாமி நினைப்பது போல் பதிவிட்டுள்ளார். கடந்த வாரம் முழுவதும் டல்லாக சென்ற இந்த சீரியல் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பையும் கூட்டியுள்ளது.

ரோஜா

இந்த பரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் ரோஜா அன்னைக்கே அர்ஜூன் பேச்சை கேட்டிருக்கலாம். என கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் மூக்குப்பொடி டெக்னிக் யூஸ் பன்னலாம் ஐடியா இல்லாத அர்ஜூன் என பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் அப்படியே கொல்லுங்க அந்த அனுவ என பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் கைய கத்தியால் லைட்டா கிழிச்சா போதும் வழியில துடிப்பாள் அதுல தெரிஞ்சிடும் என பதிவிட்டுள்ளார்.

இதில் ரசிகர்களின கருத்துக்களை வைத்து பார்க்கும்போது பழைய நினைவுகள் திரும்பி வருவதால், பாரதி கண்ணம்மா சீரியலுக்கே அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இவ்வளவு நாள பிரிந்து இருந்த பாரதி கண்ணம்மா இருவரும் ஒள்றினையும் சீனுக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள் என்றே சொல்ல்லாம். மற்றபடி அனைத்து சீரியலும் அந்தநத ரசிகர்களுக்கு திருப்தியை கொடுக்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial promo rating update

Next Story
Vijay TV Serial : பிரஷாந்திடம் உண்மையை சொல்லும் ஐஸ்வர்யா : கண்ணனுக்கு பெரிய ஷாக்…
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express