Tamil Serial Rating : ”கோபி உங்க திட்டம் எங்களுக்கு புரியுது” : பாக்கியலட்சுமி குறித்து ரசிகர்கள் கமெண்ட்

Tamil Serial Update : சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது

Tamil Serial Rating Update : தற்போதைய காலகட்டத்தில் சீரியல் ரசிகர்களும் அதில் நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகளே மக்கள் மத்தியில அதிக வரவேற்பைபெற்று வருகினறனர். ஆனால் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதை கவர்ந்ததா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல் எத்த்தனை சீரியல்கள் ஒளிபரப்பானாலும் வார இறுதியில் வெளியாகும் டிஆர்பி ரேட்ங்கில் முதல் 5 இடங்களை பெறும் சீரியல்களே அதிக கவனம் பெறுகின்றன. அதற்காக மற்ற சீரியல்கள் எல்லாம் சரியாக போகவில்லை என்று அர்த்தம் அல்ல.

சில சீரியல்கள் அதிகப்படியான ரசிகர்களின் மனதை கவர தவறி விடுகின்றன என்று கூறலாம். இதில் சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்படும். அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள ப்ரமோ வீடியோக்களில் எந்த சீரியல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்போம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் :

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் மல்லி மூர்த்தியை மணக்கோலத்தில் விட்டு விட்டு ஏமாற்றினாள் அதனால் தான் அந்த பாவம் அவமானம் ஏற்படுகிறது அவளுக்கு என பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் வேலையே இல்ல இதுல கல்யாணமா என்று கேட்டுள்ளார். மேலும் மற்றொரு ரசிகர் கண்ணனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மற்றொரு ரசிகர் இந்த வாரம் முழுவதும் இந்த கல்யாணத்தை வச்சே ஓட்டிட்டீங்களே என்று பதிவிட்டுள்ளார்.

பாரதி கண்ணம்மா :

இந்த பரமோவை பார்த்த ரசிகர் ஒருவரு கேசரி ட்ராக் முடிந்து இப்போ லுங்கி ட்ராக் ஆனா டிஎன்ஏ டெஸ்ட் மட்டும் எடுக்காதீங்க என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் பாரதி வெண்பா கூட பேசாமா இருந்தா பாரதி கண்ணம்மா வாழ்க்கை சூப்பரா இருக்கும் என பதிவிட்டுள்ளார். மேலும் ஒரு ரசிகர் அம்மா அப்பா இரு பிள்ளைகள் பார்ப்பதற்கு மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார். டைரக்டர் சார் பாரதிக்கு எப்ப தான் கண்ணம்மா மேல நல்ல அபிப்பிராயம் வற்றமாதிரி சீன் வரும் என்று ஒரு ரசிகர் கேட்டுள்ளார். பாரதியின் காதல் மீண்டும் ஆரம்பம் என ஒரு ரசிகர் பதிவிட்டுள்ளார்.

பாக்கியலட்சுமி :

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் கோபி மயூகிட்ட நல்லபேர் வாங்க ட்ரை பன்றாரு என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் கோபிக்குவிமர்சனங்களை கொடுக்கும் வகையிலேயே கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

ராஜா ராணி 2:

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் மீண்டும் முதல்ல இருந்தா என்று பதிவிட்டுள்ளனர். மேலும் ரசிகர்கள் இந்த சீரியலின் இயக்குநரை விமர்சிக்கும் அளவுக்கு கருத்துக்களை கூறியள்ளனர்.

ரோஜா :

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் சிறப்பான தரமான சம்பவம் என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் ஆமா ரெண்டு பேருக்கும் ஹனி மூன் தண்டனை குடுங்க மை லார்ட்! ஒரு வருஷம் தப்பிச்சிட்டே இருக்காங்க என கூறியுள்ளார். மற்றொருவரு இனிமேல்தான் அர்ஜூன் சார் ஆட்டம் ஆரம்பம் என்று கூறியுள்ளார். மேலும் பலரும் அர்ஜூனுக்கு ஆதரவாகவும், டைகர் மாணிக்கம், மற்றும் அண்ணப்பூரணிக்கு எதிராகவும் கமெண்ட் கொடுத்துள்ளனர்.

இந்த கருத்துக்களை வைத்து பார்க்கும்போது பாரதி கண்ணம்மா சீரியலுக்கே அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. பாரதி கண்ணம்மா இருவரும் எப்போது இணைவார்கள் என்ற எதாபார்ப்பே இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. மற்றபடி அனைத்து சீரியல்களும் அந்தந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் என நம்பலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial promo rating update in tamil serials

Next Story
Tamil Serial: கண்ணம்மா வீட்டில் தங்கும் பாரதி; ரொமான்ஸ் ஆரம்பிச்சிட்டாங்கடோய்..!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com