Tamil Serial Rating Update : தற்போதைய காலகட்டத்தில் சீரியல் ரசிகர்களும் அதில் நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகளே மக்கள் மத்தியில அதிக வரவேற்பைபெற்று வருகினறனர். ஆனால் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதை கவர்ந்ததா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல் எத்த்தனை சீரியல்கள் ஒளிபரப்பானாலும் வார இறுதியில் வெளியாகும் டிஆர்பி ரேட்ங்கில் முதல் 5 இடங்களை பெறும் சீரியல்களே அதிக கவனம் பெறுகின்றன. அதற்காக மற்ற சீரியல்கள் எல்லாம் சரியாக போகவில்லை என்று அர்த்தம் அல்ல.
சில சீரியல்கள் அதிகப்படியான ரசிகர்களின் மனதை கவர தவறி விடுகின்றன என்று கூறலாம். இதில் சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்படும். அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள ப்ரமோ வீடியோக்களில் எந்த சீரியல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்போம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
இந்த பரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் அடடே கூட்டுக்குடும்பம்னா இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் முல்லை கவலையை தீர்க்க கதிர் என்ன பண்ணபோறாரு என்று கேட்டுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் இதுக்கு அப்புறம் கண்ணன் உங்கள ஆட்டி வைக்கபோறான் அது கூடிய சீக்கிரம் தெரியபோகுது கஸ்தூரி சப்போர்ட்டோட என்று கூறியுள்ளனர்.
பாரதி கண்ணம்மா
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் தவளை தன்வாயால் கெடும் என்று சொல்வது மாதிரி வெண்பா வாண்ட்டடா வந்து சிக்குது என்று கூறியுள்ளார். மற்றொரு ரசகர் அஞ்சலி படிச்ச பொண்ணு ஏன் இப்படி முட்டாளா காமிக்கிறீங்க என்று கேட்டுள்ளார். மேலும் ஒரு ரசிகர் சாப்பிடுற டேப்லெட் பத்தி எழுதி கொடுத்தவன் கிட்டயே கேட்டுக்களாமே உங்க வீட்லதான இருக்கான என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் இந்த வெண்பா விக்கெட் மட்டும் விழவே மாட்டேங்குதே என்றே கூறியுள்ளனர்.
ராஜா ராணி 2
இவங்களுக்கு எப்போவும் இதே வேலைதானா என்று ஒரு ரசிகர் கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இந்த சீரியல் என்ன வில்லி அர்ச்சனாவுக்கு சாதகமாவே போகுது என்று கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் எல்லா சீரியலிலும் நல்லவர் செய்யும் நல்லது யாருக்கும் தெரியல கெட்டவங்க கெட்டது செய்வதும் யாருக்கும் தெரியலா என்று கூறியுள்ளார். சிவகாமி என்ன நடக்குதுனு தெரியாம அரகுறையாக பாத்துட்டு திட்டுவதே வேலையாபோச்சு என்று கூறியுள்ளார்.
ரோஜா
இந்த பரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் இந்த கதையை பார்க்கவும் முடியலை பாக்கமா இருக்கவும் முடியால என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் அனு என்ன பண்ண போறாளோ ஆனா அர்ஜுன் ப்ளான் நல்லாத்தா போகும் என்று கூறியுள்ளார். அர்ஜுன்னும். ரோஜாவும். செண்பகத்தை. இந்த இக்கட்டான நிலையில் இருந்து விடுவித்தால். நல்லா இருக்குமே என்று ஒரு ரசிகர் கூறியுள்ளார். இந்த அன்னபூரணி எப்பதான் திருந்த போகுதோ தெரியல என கேட்டுள்ளார்.
இந்த கருத்துக்களை வைத்து பார்க்கும்போது பாரதி கண்ணம்மா சீரியலுக்கே அதிக எதிர்பார்ப்பு உள்ளது என்று கூறலாம். விறுவிறுப்பாக ட்விட்ஸ்களுடன் கதை செல்வது இதற்கு முக்கிய காரணம். மற்றபடி அனைத்து சீரியல்களும் அந்தந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் என்று கூறலாம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil