Tamil Serial Rating: முல்லை- கதிர் ரொமான்ஸை கூட்டுறாங்க... ஜம்ப் ஆகும் பாண்டியன் ஸ்டோர்ஸ்?

Tamil Serial Update : பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரமோவில் கதிர் முல்லை ரொமான்ஸ் கட்சிகள் வேற லெவல் என்று ரசிகர்கள் பாராட்டு வருகின்றனர்.

Tamil Serial Update : பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரமோவில் கதிர் முல்லை ரொமான்ஸ் கட்சிகள் வேற லெவல் என்று ரசிகர்கள் பாராட்டு வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
Tamil Serial Rating: முல்லை- கதிர் ரொமான்ஸை கூட்டுறாங்க... ஜம்ப் ஆகும் பாண்டியன் ஸ்டோர்ஸ்?

Tamil Serial Promo Fans Reaction : தற்போதைய காலகட்டத்தில் சின்னத்திரை சீரியல்கள் இல்லத்தரசிகளின் ஒரு இன்றியமையாத பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிட்டது. இதில் பல குடும்பங்களில் இல்லத்தரசிகளுக்கு இணையாக ஆண்களும் சீரியல் ரசிகர்களாக மாறிவிட்டனர். இவர்கள் வேலை காரணமாக வெளியில் சென்றாலும் தங்களது விருப்பமான சீரியல் பார்க்க முடியவில்லை என்றால் அன்றைய தினம் என்ன நடந்தது என்பதை தனது வீட்டில் இருப்பவர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளும் அளவிற்கு சீரியலுக்கு ரசிகர்கள் அதிகம்.

Advertisment

இதனால் ரசிகர்களின் ரசனைகளுக்கு விருந்தளிக்கும வகையில் தொலைக்காட்சிகள் மாதத்திற்கு ஒரு சீரியலை களமிறங்கி வருகின்றனர். இதில் மேலும் சுவாரஸ்யத்தை அதிகரிக்கும் வகையில் இரு சீரியல்களை இணைத்து மகாசங்கமம் என்ற பெயரில் ஒளிபரப்பி வருகின்றனர். இதனால் சீரியல் ரசிகர்களுக்கு நாள்தோறும் தங்களது விருப்பமான சீரியல் குறித்து ஒரு வகை எதிர்பார்ப்பு ஏற்படுகிறது. இந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்க தொலைக்காட்சிகள் எடுத்து ஆயுதம் தான் ப்ரமோ.

சீரியல்களில் நாளை ஒளிபரப்பாக உள்ள எபிசோடுகள் குறித்த ப்ரமோக்கள் இன்றே வெளியாகிவிடும். 30 வினாடிகள் ஓடக்கூடிய இந்த ப்ரமோவில் அன்றைய எபிசோட்டில் முக்கியமான சில காட்சிகள் இடம்பெற்றிருக்கும். இந்த ப்ரமோவை வைத்தே அன்றைய எபிசோடு விறுவிறுப்பாக செல்லுமா அல்லது போர் அடிக்குமா என்பதை ரசிகர்கள் யூசித்துக்கொள்ளும் அளவிற்கு ப்ரமோ காட்சிகள் இடம்பெற்றிருக்கும். இந்த ப்ரமோ வீடியோக்கள் சம்மந்தப்பட்ட தொலைக்காட்சியின் சமூக வலைதள பக்கத்திலும், யூடியூப் தளத்திலும் வெளியிடப்பட்டு வருகிறது.

இந்த ப்ரமோ வீடியோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில பெரும் வரவேற்பு இருந்து வரும் நிலையில், இந்த வீடியோவில் ரசிகர்கள் பலரும் அந்த சீரியல் குறித்து விமர்சனங்களும், அந்த பரமோ குறித்த கமெண்ட்களையும் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில்  ஒரு சில சீரியல்களின் ப்ரமோக்களுக்கு ரசிகர்கள் கூறிய விமர்சனங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.   

Advertisment
Advertisements

பாண்டியன் ஸ்டோர்ஸ் :

விஜய் டிவியில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் ''எவ்ளோ பயம் ரிசல்ட்டுக்கு பாவம்'' என பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர்கள் இதைவிட மாஸ் சீன் இந்த சீரியலில் இதற்கு முன்பு இல்லை என கூறியுள்ளார்.

மற்றொரு ரசிகர்கள் இன்னைக்கும் சீன்ஸ் வேற லெவல் செம்ம.. செம்ம.. கதிர் படிக்கனும்னு எப்போர்ட் எடுத்து அவரை என்கரேஜ் பண்ணி படிக்க வச்ச முல்லை சூப்பர் என பதிவிட்டுள்ளார்.

இதற்கு மற்றொரு ரசிகர்கள் அதான் ஆல் பாஸ் போட்டாங்களே என்று பதிவிட்டுள்ளார். மேலும் ஒருவர் ப்ரமோவில் கதிர் மல்லை சீன் வைத்து ரொம்ப நாள் ஆச்சு... கவலப்படாதீங்க கதிர் சர்ர் நீங்க பாஸ் பண்ணிட்டீங்க கங்கரஜ்லேஷன். வெரி நைஸ் மாஸ் சீன் என பதிவிட்டுள்ளார்.

இந்த ப்ரமோ வெளியாகிஒரு மணி நேரத்தில் ஒரு லட்சத்திற்கு அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாக்கியலட்சுமி :

இல்லத்தரசிகளின் வாழ்க்கை போராட்டத்தை மையமாக வைத்த இந்த சீரியலளுக்கு ரசிகர்கள் அதிகம்.

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர், சூப்பரா இருக்கா.. பெட்ரோல் போடும்போது வயிறு எரியும் பாரு என்று கூறியுள்ளார். இதற்கு மற்றொரு ரசிகர்கள் பெட்ரோல் விலை கூடிரிச்சி பாக்யா வேண்டாம் கனவோட நிறுத்திக்கோ என்று பதிவிட்டுள்ளார்.

சன்டிவி சீரியல்கள் :

இதில் சன்டிவியில் இரவில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல்களின் ப்ரமோ ஒரு வீடியோவாக வெளியிடப்பட்டுள்து. இந்த ப்ரமோக்களை பார்த்த ரசிகர்கள் பலரும் வெயிட்டிங் பார் சித்தி 2 சீரியல் என்றே பதிவிட்டுள்ளனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tv Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: