/tamil-ie/media/media_files/uploads/2022/03/Bharathi-kannama.jpg)
Bharathi Kannamma Serial Promo Update : சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் விஜய் டிவி சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதிலும், டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் இருந்து வரும் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு தனியாக ரசிகர்கள் கூட்டம் உள்ளது. கடந்த சில எபிசோடுகளுக்கு முன்பு பல அதிரடி திருப்பங்களுடன் அரங்கேறிய இந்த சீரியல் தற்போது அதிகப்படியான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
அதற்கு முக்கிய காரணம் ரசிகர்கள் எளிதில் யூகிக்கக்கூடிய வகையிலான திரைக்கதை மற்றும் ஒரு உண்மையை சொல்ல இவ்வளவு காலம் தேவையாக என்ற சளிப்பும்தான் காரணம். கண்ணம்மாவின் குழந்தைகளுக்கு பாரதி தான் அப்பா என்ற ணரு உண்மையை வைத்தே இந்த சீரியலை நகர்த்தி வருவது ரசிகாகளின் பொறுமையை ரொம்பவே சோதிக்கும் வகையில் அமைந்துள்ளது.
ஆனாலும் பாரதி கண்ணம்மா சீரியலின் பரம ரசிகர்கள் பலரும் இந்த சீரியலை ஆர்வமுடன் கண்டு ரசித்து வரும் நிலையில். இவர்கள் இருவரும் எப்போது இணைந்து வாழ்வார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் தற்போது பாரதி கண்ணம்மா சீரியலின் ப்ரமோ வெளியிடப்பட்டுள்ளது
இதில் பாரதியின் கார் ரிப்பேர் ஆகிவிட, நடுரோட்டில், காரின் முன்பகுதியை திறந்து பார்த்தக்கொண்டிருக்கிறான். அப்போது, அங்கு வரும் மர்ம நபர் ஒருவர், காரின் கதவை திறந்து மொபைல்போனை திருடுகிறார். இதை பார்த்துவிடும் கண்ணம்மா அந்த திருடனை துறத்திக்கொண்டுபோக, அவனை தேங்காயால் அடித்து பிடிக்கிறாள். இதை பார்த்த பாரதி பின்னாடியே ஓடுகிறான்.
அப்போது எதிர்பாராத விதமாக அந்த திருடன் கத்தியை வைத்து கண்ணம்மாவின் கையை கிழித்துவிடுகிறான். இதனால் கண்ணம்மா மயங்கி விழ, அவளை அழைத்துக்கொண்டு பாரதி ஹாஸ்பிடலுக்கு செல்கிறான் இதனால் அடுத்து என்ன நடக்கும் என்று பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.