Advertisment
Presenting Partner
Desktop GIF

கலைஞர் டிவிக்கு சென்ற ராதிகாவின் ஹிட் சீரியல் : ப்ரைம் டைமில் ஒளிபரப்பு

Tamil Serial Update : ராதிகா சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்து ஹிட்டடித்த வாணி ராணி சீரியல் தற்போது கலைஞர் டிவியில் மறுஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

author-image
WebDesk
New Update
கலைஞர் டிவிக்கு சென்ற ராதிகாவின் ஹிட் சீரியல் : ப்ரைம் டைமில் ஒளிபரப்பு

Radhika Hit Serial Vani Rani Retelecast Kalaignar TV : 1978-ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ராதிகா. 80-90 காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த இவர் முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துளார். தொடர்ந்து 90களின் இறுதியில் சின்னத்திரையில் கால்பதித்த அவர் சித்தி தொடரின் மூலம் சித்திரையில் தனது வெற்றிப்பயணத்தை தொடங்கினார்.

Advertisment

அதன்பிறகு அண்ணாமலை செல்வி, செல்லமே, வாணி ராணி சந்திரகுமாரி சித்தி 2 ஆகிய சீரியல்களில் நடித்துள்ள இவர், கடைசியாக சித்தி 2 சீரியலில் நடித்து வந்த போது திடீரென அதில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தற்போது திரைப்படங்களில் கவனம் செலுத்தி வரும் அவர் தனது கணவர் சரத்குமாருடன் இணைந்து அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் சின்னத்திரையில் ராதிகாவின் ஹிட் சீரியல்களில் ஒன்றான வாணி ராணி தற்போது கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. ராதிகா அக்கா தங்கையாக வாணி ராணி என்ற இரு கதாப்பாத்திரத்தில் நடித்த இந்த சீரியல் 2013-ம் ஆண்டு தொடங்கி 2018 வரை 5 வருடங்கள் 1743 எபிசோடுகள் ஒளிபரப்பானது. அக்கா தங்கை இருவரும் அண்ணன் தம்பியை திருமணம் செய்துகொண்டு ஒரே குடும்பத்திற்கு வாழப் போகிறார்கள்.

இந்த கூட்டு குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளை இவர்கள் எப்படி தீர்க்கிறார்கள் என்பதை மையமாக வைத்து இந்த தொடரின் திரைக்கதை அமைக்கப்பட்டு இருந்தது. ராதிகா சரத்குமார் கதையில், ஓ.என்.ரத்தினம் இயக்கத்தில் உருவாகி இருந்த இந்த சீரியல் முடிந்து 3 வருடங்கள் ஆகும் நிலையில், தற்போது கலைஞர் தொலைக்காட்சியில் மறுஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. ஏற்கனவே சன்டிவியின் ஹிட் சீரியல்கள் “தெய்வமகள்”, “நாயகி”, “திருமதி செல்வம்” ஆகிய சீரியல்கள் கலைஞர் தொலைக்காட்சியில் மறு ஒளிரப்ப்பு செய்யப்பட்டு வரவேற்பை பெற்று வருகிறது.

அந்த வரிசையில் தற்போது வாணி ராணி சீரியலும் இடம்பெற்றுள்ளது. விகடன் நிறுவனம் தயாரித்திருந்த இந்த சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை, இரவு 8:30 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial Update Radhika Sarathkumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment