Raja Rani 2 Serial Update : ரசிகர்களின் ரசனைகளுக்கு ஏற்ப சீரியல் வழங்குவதில் விஜய் டிவி முன்னணியில் உள்ளது. இதில் ஒளிபரப்பாகும் சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், ஒரு சில சீரியல்களில் ரசிகர்களின் பொறுமையை சோதிக்கும் விதமாகவும் இருப்பது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. அந்த வகையில் விஜய் டிவியின் ஹிட் சீரியல்களில் ஒன்று ராஜா ராணி 2.
ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியல் பலமுறை ரசிகர்களின் கடும் விமர்சனங்களை பெற்றுள்ளது. இதில் மாமியார் சிவகாமி தனது வீட்டில் எது நடந்தாலும் அதற்கு சந்தியாதான் காரணம் என்று சொல்லும் வசனம் ரசிகர்கள் மத்தியில் பெரிய ரீச். இந்த சீரியல் மட்டுமல்லாது மற்ற சிரியல்களுக்கு ரசிகர்கள் தங்களது விமாசனத்தை பதிவிட இந்த வனத்தை பயன்படுத்தி வருகினறனர்.
அந்த அளவிற்கு கடுமையான விமர்சனங்களை பெற்று வரும் இந்த சீரியல் மற்றமொழி சீரியல் ஒன்றின் ரீமேக் என்று ரசிகர்கள் கூறி வந்தாலும், இதற்கொன்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. கூட்டு குடும்ப கதையை மையமாக கொண்ட இந்த சீரியலில், சரவணன் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் சித்துவும், சந்தியா என்ற கதாபாத்திரத்தில் ஆலியா மானசாவும் நடிக்கிறார்.
இந்நிலையில் இந்த சீரியலின் கடந்த சில எபிசோடுகள் ரொமான்ஸ்க்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. அதிலும் சில தினங்களுக்கு முன்பு ஆலியா மானசா சீத்துக்கு முத்தம் கொடுக்கும் காட்சிகள் வந்திருந்தது. இந்த காட்சி தற்போது சோசியல் மீடியாவில் ரசிகர்களும் நெட்டிசன்கள் கடுமையான விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.
நிஜ வாழ்கையில் இவர்கள் இரண்டு பேருக்குமே குடும்பம் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று. ராஜா ராணி சீசன் 1 –ல் தன்னுடன் நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஆல்யா. தற்போது இவர்களுக்கு ஐலா என்ற பெண் குழந்தையும் உள்ளது. கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான திருமணம் சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த ஸ்ரேயாவை காதலித்து வருகிறார் சித்து.
இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்ய உள்ள நிலையில், தங்களது குடும்பத்தை பற்றி யோசிக்காமல் இருவரும் இப்படி நடித்து வருகின்றனர். குடும்ப பெண்கள் பார்க்கும் சீரியலுக்கு இவ்வளவு ரொமான்ஸ் காட்சிகள் அவசியமா என்று நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் இவர்கள் இருவருமே விவாகரத்து வாங்கி விடுவார்கள் போல உள்ளது என்று பதிவிட்டு வருகினறனர்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் பார்க்கும் தமிழ் சீரியலில் இந்த மாதிரி எல்லாம் ரொமான்ஸ் காட்சிகள் பார்ப்பது தேவையா? என்று விஜய் டிவிக்கும் ரசிகர்கள் தங்களது விமர்சனத்தை பதிவிட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil