New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/09/Raja-rani-2.jpg)
உண்மை சரவணன் சந்தியாவுக்கு தெரியவர அவர்கள் ஜெசி பெற்றோரிடம் பேசி ஆதியின் சுயரூபத்தை வெளிக்கொண்டு வந்துள்ளனர்
விஜய் டிவியின் ராஜா ராணி 2 சீரியலில் ஷூட்டிங்கின்போது எடுக்கப்பட்ட சில படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இந்த படங்களை நெட்டின்கள் கடுமையாக கிண்டல் செய்து வருகினறனர்.
இன்றைய காலகட்டத்தில் இல்லாத்தரசிகள் மட்டுமல்லாது இளைஞர்கள் மத்தியிலும் சீரியல் ஒரு முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிட்டது. அதற்கு ஏற்றார்போல் அவ்வப்போது சேனல்கள் புதிய சீரியலையும் களமிறங்கி வருகின்றனர். இதில் விஜய் டிவி சீரியல்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் பரபரப்பான திருப்பங்களுடன் அரங்கேறி வரும் சீரியல் ராஜா ராணி 2.
குடும்ப உறவுகளையும், ஐபிஎஸ் கனவுடன் இருக்கும் ஒரு பெண்ணின் போராட்டத்தையும் மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியலில் சரவணன் கேரக்டரில் நடிகர் சித்து சந்தியா கேரக்டரில் நடிகை ரியா ஆகியோர் நடித்து வருகின்றனர். விஜே அர்ச்சனா வில்லி ரோலில் நடித்து வந்த நிலையில், தற்போது அவர் விலகியதை தொடர்ந்து மற்றொரு அர்ச்சான உள்ளே வந்துள்ளார்.
இந்நிலையில் சிவகாமி குடும்பத்தின் 3-வது மகன் ஆதி ஜெசியை காதலித்து வந்த நிலையில், இருவரும் நெருங்கி பழகி வந்ததால், தற்போது ஜெசி கர்ப்பமாகியுள்ளார். இந்த விஷயத்தை ஜெசி சிவகாமியிடம் சொல்ல, ஆதி இதற்கு நான் காரணம் இல்லை என்று பொய் சொல்லிவிடுகிறான். இந்த உண்மை சரவணன் சந்தியாவுக்கு தெரியவர அவர்கள் ஜெசி பெற்றோரிடம் பேசி ஆதியின் சுயரூபத்தை வெளிக்கொண்டு வந்துள்ளனர்
இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், ராஜா ராணி 2 சீரியலின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. ஆதி – ஜெசி இருவரும் பேசிக்கொ்ளவது போல் உள்ள இந்த படத்தில் உயரம் கம்மியாக இருந்ததால் ஜெசி கேரக்டர் ஸ்டூல் மீது நிற்க வைத்து படம் பிடித்துள்ளனர்
இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் ஸ்டூல்மேல் நிற்பது குறித்து விமர்சித்து வருகின்றனர். ஸ்டூல் மேல நிக்கிறதுக்கு பதிலா ஹீல்ஸ் செருப்பு போட்டுக்கலாம்ல என்று கிண்டல் செய்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.