Raja Rani 2 Serial: ராஜா ராணி 2 சீரியலில் சரவணன் தனது மனைவி சந்தியா தன்னிடம் இருந்து விவாகரத்து பெற்று செல்ல விரும்புவதாக தவறாக நினைத்துக்கொண்டு அவளை வீட்டை வீட்டு அனுப்புகிறான். உண்மையில், சந்தியாவின் ஹேண்ட் பேக்கில் இருந்த டிவோர்ஸ் பேப்பர், சந்தியாவின் ஃபிரெண்ட் அனிதா, சந்தியாவுக்கே தெரியாமல் அவளுடைய பையில் வைத்துவிட்டாள். சரவணனுக்கு அந்த டிவோர்ஸ் பேப்பர் பற்றி தெரியவந்ததில் இருந்துதான் பிரச்னையே வந்தது. சந்தியாவை அவளுடைய ஃபிரெண்ட் அனிதாவின் வீட்டுக்கு அனுப்பி வைக்க பஸ் ஏற்றச் செல்கிறான். அப்போது, சந்தியாவை பிரிய மனமில்லாமல், அவளுடன் கடைசி பயணம் என்று அவளுக்கு தெரியாமல் அதே பஸ்ஸில் செல்கிறான்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியல் ஒவ்வொரு எபிசோடும் எதிர்பாராத திருப்பங்களையும் விறுவிறுப்பான கட்டத்தையும் அடைந்து வருகிறது.
ராஜா ராணி 2 சீரியலில் ஹீரோயின் சந்தியா கதாபாத்திரத்தில் ஆல்யா மானசா நடிக்கிறார். ஹிரோ சரவணன் கதாபாத்திரத்தில் நடிகர் சித்து நடிக்கிறார். இவர்களுடன், பார்வதியாக வைஷ்ணவி சுந்தர், சிவகாமியாக பிரவீனா, சைவம் ரவி சுந்தரமாகவும், அர்ச்சனாவாக வி.ஜே.அர்ச்சனாவும் நடிக்கிறார்கள். ராஜா ராணி 2 சீரியல், இப்போது முதல் பாகத்தைப் போல சூடு பிடித்து விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.
ராஜா ராணி 2 சீரியல் இன்றைய எபிசோடில், சிவகாமி வீட்டுக்கு சம்மந்தி அம்மாவும் பார்வதியை திருமணம் செய்துகொள்ளப் போகும் பாஸ்கரும் வருகிறார்கள். அவர்கள் வந்ததைப் பார்த்து வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் ஷாக் ஆகிறார்கள். அவர்களை வரவேற்ற சிவகாமி, பார்வதியை அழைத்து வாயைத் திறக்காமல் அமைதியாக இருக்கச் சொல்லிவிட்டு, அப்பா சுந்தரத்தை அழைத்து வரச் சொல்கிறாள். பார்வதியும் சுந்தரத்தை அழைத்து வந்ததும், சிவகாமி, சரவணன் சந்தியாவை வீட்டை விட்டு அனுப்பியதைப் பற்றி எதுவும் சொல்லாதீர்கள். அது தெரிந்தால், வீட்டுக்கு வாழ வந்த பொண்ணை வீட்டை விட்டு அனுப்பிட்டாங்கணு பார்வதி கல்யாணத்தை வேண்டாம்ணு சொல்லிடப் போகிறார்கள் என்று சொல்கிறார்கள். இதைக்கேட்டு பார்வதி முகம் வாடிப் போகிறது. சுந்தரம், மனைவி சிவகாமியிடம் குழந்தை பார்வதியை வைத்துக்கொண்டே இப்படி பேசலாமா என்று கேட்கிறார். மேலும், சம்மந்தியம்மாவிடம் சந்தியா சரவணன் பற்றி எதுவும் பேச வேண்டாம் என்று சொல்லிவிட்டு சம்மந்தி அம்மாவிடம் பேச செல்கிறார்கள்.
சம்மந்தியம்மா எல்லோரையும் பார்த்து ஏன் எல்லோருடைய முகமும் ஒரு மாதிரியாக இருக்கிறது என்று கேட்கிறார். அதற்கு, சிவகாமியும் சுந்தரமும் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்று சொல்லி சமாளிக்கிறார்கள். பிறகு, சம்மந்தியம்மா, எங்க மகன் சரவணனும் சந்தியாவும் எங்கே போயிருக்கிறார்கள் அவர்களை வைத்துக்கொண்டு பேசினால் நல்லா இருக்கும் என்று கூறுகிறார்கள். இதைக்கேட்டு சுந்தரம் என விஷயம் என்று கேட்க சம்மந்தியம்மா, எல்லாம் பார்வதி கல்யாணம் பத்திதான் என்று சொல்ல சிவகாமி, சுந்தரம் எல்லோரும் அதிர்ந்து போகிறர்கள். அனைவரின் முகக்குறியைப் புரிந்துகொண்ட சம்மந்தி உடனடியாக, தப்பா எதுவும் இல்லை. என்னைக்கா இருந்தாலும் பார்வதிதான் எங்க வீட்டு மருமகள் அதில் எந்த மாற்றமும் இல்லை. நான் நிச்சயதார்த்தம் அன்றைக்கு, பார்வதி படிப்பு முடியட்டும் அதற்கு பிறகு கல்யாணத்தை வச்சுக்கலாம்னு சந்தியா சொன்னதா சொன்னேன் இல்லையா. அது எனக்கு சரியாபட்டது. ஒரு பெண்ணுக்கு கையில ஒரு டிகிரி இருந்தால் நல்லதுதான். அதனால்தான், படிப்பு முடிஞ்சதும் கல்யாணம் வச்சுக்கலாம்ணு சொன்னேன். அதற்கு பிறகு வீட்டுக்கு போன பிறகுதான், பாஸ்கர், அம்மா, நீங்க சந்தியா சொன்னாங்கணு சொல்லியிருக்க கூடாது. அவங்க தப்பா நினைச்சுகிட்டு இருப்பாங்க இல்லை, நீங்க ஒரு வருஷம் கழிச்சு கல்யாணம் வச்சுக்கலாம்ணு சொன்னதும் பார்வதியோட அம்மா முகம் ஒரு மாதிரி ஆகிடுச்சுணு சொன்னான். எனக்கும் நான் சொன்னதை நீங்க தப்பா புரிஞ்சுகிட்டு இருக்கலாம்ணு தோணுச்சு, அதான் பேசிட்டு போகலாம்ணு வந்தேன் என்று கூறுகிறார்.
அப்போது, சுந்தரம் ஆமாம், எங்க வீட்டு பொண்ணு சந்தியாவும் அப்படி வீடு தேடி போய் பேசற பொண்ணு இல்லை என்று கூறுகிறார். இதைக்கேட்ட சம்மந்தியம்மா, ஆமாம், சந்தியா எங்கிட்ட நேரடியா சொல்லல, ஆனால், சந்தியா உங்ககிட்ட சொன்னதை நான் கேட்டேன். அது சரியாபட்டது, அதனால்தான், ஒரு வருஷம் கழிச்சு பார்வதி படிப்பு முடிஞ்சதும் கல்யாணம் வச்சுக்கலாம்ணு சொன்னேன். உண்மையில் அப்போது நான் சொன்னது என் பையனுக்கும் என் வீட்டுக்காரருக்கும்கூட தெரியாது பார்த்துக்கங்க, அந்த நொடியே எனக்கு அது நல்லதுணு பட்டது. இப்பவும் சொல்கிறேன் பார்வதிதான் என் மருமகள், அதில எந்த மாற்றமும் கிடையாது. ஒரு வருஷம் கண்ண மூடி திறகறதுக்குள்ள போயிடும். அப்புறம் என்ன ஜாம் ஜாம்ணு கல்யாணத்தை பண்ணுவோம் என்று உறுதியளித்துவிட்டு சம்மந்தியம்மாவும் பாஸ்கரும் செல்கிறார்கள்.
அவர்கள் போன பிறகு, சுந்தரம் இப்ப என்ன சொல்ற சிவகாமி என்று கேட்கிறார். பார்வதி, ஆதியிடம், அண்ணியை நீ என்னல்லாம் பேசின, இப்ப என்ன சொல்ற என்று கேட்கிறாள். இதற்கு ஆதி பதில் சொல்லாமல் நெளிகிறான். பார்வதி நீ என்ன சொன்ன, என்னப் பார்த்து அவங்க பொறாமை படறாங்கலா, அவங்க மாதிரி நல்லவங்களா இருக்க முடியலையேணு நாமதா வெட்கப் படணும் என்று சொல்கிறாள். மயில், சரவணனுக்கு போன் பண்ண சொல்கிறாள். ஆதி, போன் பண்ணாலும் எடுக்க மாட்டேங்கிறார்கள் என்று சொல்கிறான்.
அடுத்த காட்சியில், சந்தியாவும் சரவணணும் சென்ற பஸ் பஞ்சர் ஆகி நிற்கிறது. சரவணன் சந்தியாவுக்கு தெரியாமல் பின்னால் வந்து ஒரு கடை அருகே நிற்கிறான். சந்தியாவும் கீழே இறங்கி என்ன செய்வது என்று தெரியாமல் நிற்கிறாள்.
அப்போது சரவணனுக்கு ஒரு போன் அழைப்பு வருகிறது. அதில், சரவணன், சந்தியாவை பஸ் ஏற்றி அனுப்பிடலாம்ணுதான் வந்தேன். ஆனால், மனசு கேட்கல, அவங்களை அவங்க ஃபிரெண்ட் அனிதா வீட்டுக்கே போய் விட்டுவிடலாம்ணு திருநெல்வேலி வரைக்கும் போய்க்கொண்டிருக்கிறேன் என்று கூறி போனை வைத்துவிடுகிறான்.
அப்போது, சரவணனைத் தெரிந்த ஒருவர், சரவணனை நலம் விசாரிக்கிறார். ஒரு டீ சாப்பிடலாம் வா என்று கட்டாயப்படுத்துகிறார். ஆனால், சரவணன் வேண்டாம் என்று சொல்கிறான்.
அதற்குள், கண்டக்டர், பஸ் டயர் மாத்தியாச்சு எல்லோரும் பஸ்ல ஏறுங்க என்று கூறுகிறார். இதைக்கேட்டு சந்தியாவும் பஸ்ஸில் ஏறுகிறாள். அப்போது, சந்தியா அமர்ந்திருந்த இடத்தில், வேறு ஒரு பெண் அமர்ந்திருக்கிறார். சந்தியா இது நான் அமர்ந்திருந்த இடம் என்று கூறுகிறாள். அதற்கு அந்த பெண், காலியா இருந்தது அதான் உட்கார்ந்துட்டேன். எழுந்துக்க முடியாது என்று கூறிவிடுகிறாள். சந்தியா சரி என்று எதிர்புறத்தில் இருந்த சீட்டில் அமர்ந்துகொள்கிறார்.
சரவணன், பஸ் எடுக்கப் போகிறார்கள் என்பதை அறிந்து அந்த நபரிடம் டீ வேண்டாம் என்று சொல்லிவிட்டு பஸ்ஸை நோக்கி வருகிறான். அந்த நேரம் ஒரு லாரி வேகமாக வந்து பஸ்ஸின் பின் பிறம் பயங்கரமாக மோதி விபத்து ஏற்படுகிறது. பஸ்ஸை நோக்கி சென்ற சரவணன், மயிரிழையில் தப்புகிறான். பஸ்ஸில் இருந்த எல்லோருக்கும் பயங்கர காயம், சிறிது நேரத்திலேயே அந்த இடமே ரனகளமாகிறது. எங்கும் கதறல்களும் மனித ஓலங்களுமே கேட்கிறது.
அதற்குள், விபத்து நடந்த இடத்திற்கு, அம்புலன்ஸ், டாக்டர்கள், நர்ஸ்கள், போலீசார் எல்லோரும் விபத்தில் சிக்கியவர்களை மீட்க வந்துவிடுகிறார்கள். சரவணன், விபத்து நடந்த பஸ்ஸில் சந்தியா அமர்ந்திருந்த இடத்தில், ஒரு பெண் இருப்பதைப் பார்த்து பஸ் உள்ளே ஏறி சென்று பார்க்கிறான். அந்த பெண் மயங்கிய நிலையில் இருக்கிறார். ஆனால், அது சந்தியா இல்லை. பஸ்ஸிலும் சந்தியா இல்லை. உடனடியாக, அங்கே மீட்பு பணியில் இருப்பவரிடம் இங்கே ஒரு பெண் இருந்ததைக் கேட்கிறான். நிறைய பேரை ஆம்புலன்ஸில் ஆஸ்பிட்டலுக்கு அழைத்துகொண்டு போயிருக்கிறார்கள் என்று கூறுகிறார். விபத்தில் சந்தியாவுக்கு என்ன ஆனதோ, சந்தியா எங்கே என்று தேடுகிறான். அங்கும் இங்கும் அல்லாடுகிறான். விபத்து நடந்த இடம் போரக்களம் போல காட்சி அளிக்கிறது. சரவணன் சந்தியா எங்கே என்று சந்தியா என்று வாய்விட்டு கத்தி அறற்றி அழுது கதறுகிறான். நான் உங்ககிட்ட நான் மனசாற மன்னிப்பு கேட்கணும், நான் உங்களை காதலிக்கிறேணு கத்தி சொல்லணும், தயவு செய்து வந்திடுங்க என்று குமுறி அழுகிறான்.
அடுத்த காட்சி வீட்டில், எல்லோரும் சரவணன் எப்போது வருவான் என்று காத்துக்கொண்டிருக்கிறார்கள். அப்போது அங்கே வரும் செந்தில், அண்ணன் அண்ணியை அனிதா வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு வர்றேணு போன்ல சொன்னான் என்று சொல்கிறான். ஒண்றும் ஆகவில்லை என்று எல்லோரும் அமைதியாக இருக்கிறார்கள். அப்போதுதான், சிவகாமியின் பக்கத்து வீட்டு ஃபிரெண்ட் கவிதா, வந்து, சந்தியாவும் சரவணனும் போன பஸ் ஆக்ஸிடெண்ட் ஆகிவிட்டதாக சொல்கிறாள். இதைக்கேட்டு குடும்பமே அதிர்ச்சி அடைந்து, இடி விழுந்ததுபோல கலங்கி நிற்கிறார்கள். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.