/tamil-ie/media/media_files/uploads/2021/07/Raja-rani.jpg)
Raja Rani 2 Promo Update : விஜய் டிவியில் ஒளிபரப்பான புகழ் பெற்ற சீரியல் ராஜா ராணி. இந்த சீரியல் முதல் சீசனுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து தற்போது 2-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த இரண்டாவது சீசனும் ஒரு வகை எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சீரியல் குறித்து நாள்தோறும் வெளியாகும ப்ரமோக்கள் வலைதளங்களில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில் சந்தியாவுக்கு அவரது மாமியார் சிவகாமிக்கும் இடையே நடைபெறும் உரையாடல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரவீன் பென்னட் இயக்கி வரும் இந்த சீரியலில் ராஜா ராணி முதல் சீசனில் நடித்த ஆல்யா மானசா மற்றும் சித்து ஆகியோர் முதன்மை கதாப்பாத்தில் நடித்து வருகின்றனர். இதில் ஸ்வீட் கடை வைத்திருக்கும் ஹீரோ சரவணன் தனது வருங்கால மனைவி குறித்து கற்ப்பனை வைத்திருக்கிறார். அதேபோல் தனது மருமகள் குறித்து சரவணனின் அம்மா சிவகாமி ஒரு கற்பனையில் உள்ளார்.
இதில் சிவகாமியின் கற்பனைக்கு ஏற்றவாரு சந்தியாவை ஒரு சாதாரணமான பெண்ணாக நடிக்க வைத்ததால் சந்தியாவின் சகோதரர்ரிடம் சிவகாமியின் குடும்பம் ஏமாற்றப்படுகிறது. அதேசமயம் சந்தியா ஐபிஎஸ் அதிகாரியாக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். இதனால் சிவகாமிக்கு சந்தியா மீது வெறுப்பு ஏற்பட்டு அவரை குறைகூறியே வருகிறார். இதனால் மாமியாரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய சந்தியா போராடுகிறார். இதுவே இந்த சீரியலின் கதையாக உள்ளது.
இதில் தினசரி எபிசோடுகள் பரபரப்பை கூட்டி வரும் நிலையில், இன்றைய எபிசொடு குறித்து வெளியாகியுள்ள ப்ரமோ பெரும் எதிர்ப்பார்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ப்ரமோவில் சிவகாமி சந்தியாவை திட்டினாலும், சந்தியா தனது தோழியிடம் தனது மாமியார் குடும்பத்தை பற்றி உயர்வாக பேசுகிறார். இதை கேட்டு சிவகாமி தனது கணவரிடம் இப்படிப்பட்ட மருமகள்தான் ஒரு குடும்பத்திற்கு தேவை என்று கூறுகிறார்.
இதன் மூலம் சிவகாமி சந்தியாவை ஏற்றுக்கொண்டாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்படுகிறது. அது இன்றைய எபிசோட்டில் தெரியவரும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.