/tamil-ie/media/media_files/uploads/2021/09/Raja-Rani-2-Sep-15.jpg)
Raja Rani 2 Serial: ராஜா ராணி 2 சீரியலில் சரவணன் தனது மனைவி சந்தியா தன்னிடம் இருந்து விவாகரத்து பெற்று செல்ல விரும்புவதாக தவறாக நினைத்துக்கொண்டு அவளை வீட்டை வீட்டு அனுப்புகிறான். உண்மையில், சந்தியாவின் ஹேண்ட் பேக்கில் இருந்த டிவோர்ஸ் பேப்பர், சந்தியாவின் ஃபிரெண்ட் அனிதா, சந்தியாவுக்கே தெரியாமல் அவளுடைய பையில் வைத்துவிட்டாள். சரவணனுக்கு அந்த டிவோர்ஸ் பேப்பர் பற்றி தெரியவந்ததில் இருந்துதான் பிரச்னையே வந்தது. சந்தியாவை அவளுடைய ஃபிரெண்ட் அனிதாவின் வீட்டுக்கு அனுப்பி வைக்க பஸ் ஏற்றச் செல்கிறான். அப்போது, சந்தியாவை பிரிய மனமில்லாமல், அவளுடன் கடைசி பயணம் என்று அவளுக்கு தெரியாமல் அதே பஸ்ஸில் செல்கிறான்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியல் ஒவ்வொரு எபிசோடும் எதிர்பாராத திருப்பங்களையும் விறுவிறுப்பான கட்டத்தையும் அடைந்து வருகிறது.
ராஜா ராணி 2 சீரியலில் ஹீரோயின் சந்தியா கதாபாத்திரத்தில் ஆல்யா மானசா நடிக்கிறார். ஹிரோ சரவணன் கதாபாத்திரத்தில் நடிகர் சித்து நடிக்கிறார். இவர்களுடன், பார்வதியாக வைஷ்ணவி சுந்தர், சிவகாமியாக பிரவீனா, சைவம் ரவி சுந்தரமாகவும், அர்ச்சனாவாக வி.ஜே.அர்ச்சனாவும் நடிக்கிறார்கள். ராஜா ராணி 2 சீரியல், இப்போது முதல் பாகத்தைப் போல சூடு பிடித்து விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.
/tamil-ie/media/media_files/uploads/2021/09/Raja-Rani-2-Sep-15-1.jpg)
ராஜா ராணி 2 சீரியலில் இன்றைய எபிசோடில், சரவணன் சந்தியாவை வீட்டை விட்டு அனுப்பியதற்கு காரணம், சிவகாமிதான் என்று சுந்தரம் சண்டைபோடுகிறார். ஆனால், சிவகாமி நான் எதுவும் செய்யவில்லை. சரவணனுக்கு சந்தியாவுக்கும் இடையில் ஏதோ ஒரு பெரிய பிரச்னை இருக்கிறது என்று சொல்லி அதை அவர்களே பேசி தீர்த்துக்கொள்வார்கள் என்று சொல்லி நீங்கள்தான் தடுத்துவிட்டீர்கள். அதனால், நீங்கள்தான் காரணம் என்று குற்றம் சாட்டுகிறார்கள். சிவகாமியும் சுந்தரமும் இருவரும் மாறி மாறி குற்றம்சாட்டிக்கொண்டிருப்பதைப் பார்த்த செந்தில், இரண்டு பேரையும் அமைதியாக இருக்கச் சொல்கிறான். சந்தியாவை அனுப்பிவைக்க சென்ற சரவணன் இன்னும் வரவில்லை என்பது பற்றி கூறுகிறான். செந்தில் சொன்னதைக் கேட்டு வீட்டில் எல்லோரும் பதற்றமாகிறார்கள்.
பார்வதி, சரவணன் அண்ணன் மனசு மாறி சந்தியா அண்ணியை வீட்டுக்கு கூட்டிக்கொண்டு வந்துவிட்டால் நன்றாக இருக்கும் என்று கூறுகிறாள். மயிலுவும் சந்தியா இந்த குடும்பத்தினர் மீது எவ்வளவு அன்பு வைத்திருந்தால் என்பது பற்றி சொல்கிறாள். ஸ்வீட் கடையில் வேலை சிறுவன் சக்கரையும் சந்தியா இந்த குடும்பத்தில் இருப்பவர்கள் மீதும் சரவணன் மீதும் எவ்வளவு அன்பு வைத்திருந்தார்கள் என்பது பற்றி சொல்கிறான். ஆனால், சரவணனின் கடைசி தம்பி ஆதி மட்டும் சரவணன் அண்ணனுக்கு இப்பதான் புத்தி வந்திருக்கிறது. ஆனால், இவங்க எல்லாம் அன்பை பொழியறாங்க, இந்த பார்வதிக்கும் செந்திலுக்கும் என்ன ஆச்சு, சந்தியா அண்ணிக்கு சப்போர்ட் பன்றாங்க என்று மனதுக்குள் நினைத்துக்கொள்கிறான்.
அந்த நேரத்தில்தான், சந்தியாவின் ஃபிரெண்ட் அனிதா வீட்டுக்கு வருகிறாள். அனிதாவைப் பார்த்து வீட்டில் இருக்கும் எல்லோரும் அதிர்ச்சி அடைகிறார்கள். சந்தியாவை சரவணன் உங்க வீட்டுக்குதான் அனுப்பி வைக்கப் போயிருக்கிறான். ஆனால், நீங்க இங்க வந்திருக்கீங்களே என்று கேட்கிறார்கள். பார்வதி, அனிதாவிடம் நடந்ததை எல்லாம் சொல்கிறாள். அனிதா, சந்தியா இதுதான் என் குடும்பம் என்று நேசித்தவள். அவளை எப்படி வீட்டை விட்டு அனுப்பி வச்சீங்க என்று கேட்கிறாள். அதோடு, தான் சந்தியாவின் ஹேண்ட் பேக்கில் வைத்த டிவோர்ஸ் பேப்பர்தான் இவ்வளவு பிரச்னைக்கு காரணமாக இருக்குமோ என்று நினைத்து மனதுக்குள் அதிர்ச்சி அடைகிறாள்.
ஆனால், அனிதா தனக்கு சரவணன் தான் போன் பண்ணி, வரச்சொன்னதாகவும் பக்கத்துவீட்டில் இருக்கிறவர்களுக்கு போன் பண்ணி அவர்கள் வந்துவிட்டார்களா என்று விசாரிப்பதாகச் சொல்கிறார்கள். சிவகாமி, சுந்தரம் எல்லோரும் இதையே சொல்கிறார்கள்.
அந்த நேரம் பார்த்து, சந்தியாவின் அண்ணனும் அண்ணியும் அமெரிக்காவில் இருந்து அனிதாவுக்கு போன் பண்ணுகிறார்கள். சந்தியாவை வீட்டைவிட்டு அனுப்பிவிட்டார்களா, எனது தங்கையை தண்டித்துவிட வேண்டாம், நான் தான் அவள் படிக்காதவனு பொய் சொல்லி கட்டிவைச்சேன். சந்தியா பொய் சொல்லல உங்களுகு புடிச்ச மாதிரி இருக்க வேண்டும் என்றுதான் அவள் அதை மறைத்திருப்பாள். அவளை மன்னிச்சு ஏற்றுக்கொள்ளுங்கள், என்று சுந்தரத்திடமும் சிவகாமியிடமும் கெஞ்சி மன்னிப்பு கேட்கிறான். சுந்தரம், ஆறுதல் சொல்கிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2021/09/New-Project-2021-09-15T193551.235.jpg)
சந்தியாவும் சரவணனும் போய்க்கொண்டிருந்த பஸ் திடீரென பஞ்சர் ஆகி நிற்கிறது. அதனால், கண்டக்டர் எல்லோரையும் கீழே இறங்கச் சொல்கிறார். சரவணனும் சந்தியாவும் பஸ்ஸை விட்டு கீழே இறங்குகிறார்கள். சரவணன் சந்தியா கண்ணில் படக்கூடாது என்று மறைந்துகொள்கிறான்.
/tamil-ie/media/media_files/uploads/2021/09/New-Project-2021-09-15T195427.211.jpg)
வீட்டில், சுந்தரமும் சிவகாமியும் ஒருவருக்கு ஒருவர் வாக்குவாதம் செய்கிறார்கள். அந்த நேரம் பார்த்து, வீட்டுக்கு சம்மந்தி அம்மாவும் பார்வதியின் வருங்கால கணவர் பாஸ்கரும் வருகிறார்கள். யாரும் இங்கே நடந்த விஷயம் தெரியக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள். அவர்களை வரவேற்ற சிவகாமி, பார்வதியை தனியாக அழைத்துச் சென்று அதற்குள் மாப்பிள்ளைக்கு போன் பண்ணி எல்லாவற்றையும் சொல்லிவிட்டீர்களா என்று கேட்கிறாள். அதற்கு பார்வதி இல்லை என்று சொல்கிறாள். கல்யாண தேதியை நீயே குறிச்சிட்டியா என்று சிவகாமி மகள் பார்வதியிடம் கேட்கிறார். அதற்கு பார்வதி இல்லைம்மா நல்லது நடக்க வாய்ப்பு இருக்குனு சொன்னேம்மா என்று கூறுகிறாள். ஆனால், சிவகாமி, பார்வதியை வாயைத் திறக்காத என்று சொல்லிவிட்டு சம்மந்தி விஷயம் தெரிந்துதான் வந்திருப்பாரோ என்று அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கேட்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.