/tamil-ie/media/media_files/uploads/2021/11/VJ-Archana.jpg)
Tamil Serial Raja Rani 2 Archana Update : தமிழில் சினிமாவை விட சீரியலுக்கே அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. அதிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு மக்கள் பெரும் ஆதரவு அளித்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் தமிழில் பெரும் ஹிட் அடித்த படங்களின் தலைப்பை சீரியலுக்கு பயன்படுத்தி மக்கள் மத்தியில் பிரபலபடுத்தி வருகின்றனர்.
இதில் சினிமா டைட்டிலில் வெளியான கடைக்குட்டி சிங்கம், ஈரமான ரோஜாவே, நாம் இருவர் நமக்கு இருவர் சின்னத்தம்பி, ராஜாராணி உள்ளிட்ட அனைத்து சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதில் ராஜா ராணி சீரியல் முடிவடைந்த நிலையில், தற்போது அதன் 2-ம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
சித்து மற்றும் ராஜா ராணி சீசன் 1-நாயகியான ஆல்யா மானசா ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் இந்த சீரியல் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. இந்த தொடரில் வில்லி அர்ச்சனா என்னும் கேரக்டரில், நடித்து வருபவர் விஜே அர்ச்சனா. சைலண்டாக இவர் செய்யும் வில்லத்தனம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தி வருவது வழக்கம். ஆனாலும் இவரது கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் பிரபலம்.
சிறுவயது முதல் ஆங்கராக ஆக வேண்டும் என்ற நோக்கத்துடன் இருந்த அர்ச்சனா, ஆதித்யா தொலைக்காட்சியின் மூலம் விஜேவாக களமிறங்கியுள்ளார். தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் புகழ்பெற்று பிரபலமான இவர், விஜய் டிவியில் ஒளிப்பரப்பான நீயா நானா ஷோவில் பங்கேற்றுள்ளார். அதன்பிறகு பல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2021/11/VJ-Archana2.jpg)
இதனைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக இவருக்கு ராஜா ராணி 2 தொடரில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் இவர் சீரியலில் நடிப்பதற்கு முன்பாக இவரது பற்கள் சீரமைப்புஇல்லாமல் இருந்துள்ளது. இதனால் பல வாய்ப்புகள் நழுவிய போது, இவர் தனது பற்கள் சீரமைப்பு சிகிச்சை கொண்டுள்ளார். அதன்பிறகு தற்போது சீரியலில் நடித்து வருகிறார். சிகிச்சைக்கு முன்னர் இருந்த அவரது புகைப்படம் தறபோது வெளியாகியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.