சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பை பெற்று வரும் சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் சந்தியாவாக நடித்து வந்த ஆல்யா மானசபிரசவத்தின் காரணமாக விலகியதை தொடர்ந்து தற்போது ரியா என்ற புதுமுக நடிகை நடித்து வருகிறார்.
Advertisment
ஆல்யா மானசா போன்று இவரக்கும் இந்த சீரியலில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது சீரியலில் ஆதியின் திருமணம் தொடர்பான எபிசோடுகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
Advertisment
Advertisement
இதனிடையே சீரியல் மட்டுமல்லாது சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ரியா அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். இநத வகையில் சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
அந்த வகையில் தற்போது ஏற்காடு சுற்றுப்பயணம் சென்றுள்ள ரியா இது தொடர்பான படங்களை வெளியிட்டுள்ளார். ஏற்காடு டைரிஸ் என்ற பதிவில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.