/tamil-ie/media/media_files/uploads/2021/07/Alya.jpg)
Raja Rani Season 2 Episode Update : கொரோனா தொற்று அதிகரிப்பின் காரணமாக திரைப்படங்கள் வரத்து வெகுவாக குறைந்த நிலையில், மக்கள் அனைவரும் தங்களது கவனத்தை சீரியல் பக்கம் திருப்பியுள்ளனர். இதனால் மக்களை கவரும் வகையில் குறிப்பாக இளம் ரசிகர்களை இழுக்கும் வகையில், தொலைக்காட்சிகள் நாள்தோறும் புதிய முயற்சிகளை கையாண்டு வருகின்றனர். அந்த வகையில் விஜய்டிவியின் ராஜா ராணி சீசன் 2-ன் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ தற்பேது வைரலாகி வருகிறது.
கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவின் காரணமாக பல சீரியல்கள் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து கொரோனாவின் தாக்கம் குறைந்த நிலையில், சீரியல் ஷூட்டிங்கும் தொடங்கியுள்ளது. அந்த வகையில் விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றாக ராஜா ராணி சீசன் 2 சீரியலின் படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது. காதல், ரொமான்ஸ், குடும்ப சண்டை என பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த சீரியல் குறித்து பலரும் பலவித கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். பாரதி கண்ணம்மா சீரியல் இயக்குனர் பிரவீன் பெனட் இயக்கும் ராஜா ராணி 2 சீரியலில் சித்து மற்றும் ஆல்யா மானசா இடையே ரொமான்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு இருக்கிறது.
/tamil-ie/media/media_files/uploads/2021/07/Romance.jpg)
இந்த காட்சி குறித்து அசிஸ்ட்டண்ட் டைரக்டர்கள் பரிதாபங்கள் என்ற பெயரில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் உதவி இயக்குநர்கள் பட்ட கஷ்டம் பற்றி எடுத்து கூறும் விதமாக இயக்குனர் பிரவீன் பெனட் வெளியிட்டுள்ளார். இதில் சித்து ஆல்யா மானசா படுத்துக்கொண்டு ரொமான்ஸ் காட்சியில் நடித்துள்ளனர்.அந்த காட்சிக்காக இரண்டு அசிஸ்டன்ட் டைரக்டர்கள் படுத்து நடித்து காட்டி இருக்கிறார்கள். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.