செந்தில் காலில் விழுந்து கதறி அழும் அர்ச்சனா… ராஜா ராணி சீரியலில் அடுத்து இந்த சீன் தானா?

Tamil Serial Update : ராஜா ராணி சீரியலில் அடுத்து வரும் எபிசோடுகளில் அர்சசனா செந்தில் காலில் விழுவது போன்ற காட்சிகள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

Tamil Serial Rajarani 2 Video : சின்னத்திரையில் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வரும் சீரியல் ராஜா ராணி 2.  ராஜா ராணி முதல் சீசனில் நாயகியாக நடித்த ஆல்யா மானசா மற்றும் திருணம் சீரியலில் நடித்து புகழ் பெற்ற சித்து ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீரியலில் தொடக்கத்தில் இருந்தே மாமியார் சிவகாமியிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று சந்தியா முயற்சிக்கும் வொவ்வொரு முயற்சியும் இறுதியில் வெற்றி பெற்றாலும், மாமியார் சிவகாமியிடம் சின்ன மருமகள் அர்ச்சனாவே நல்ல பெயரை பெற்று வருகிறார். ஆனாலும் கணவர் சரவணன் சப்போர்ட்டில் இருக்கும் சந்தியாவுக்கு தற்போது புது வடிவில் பிரச்சனை உருவாகியுள்ளது.

வீட்டில் பார்வதி நிச்சயத்தின்போது சந்தியா அவரது பையில் வைத்திருந்த டைவர்ஸ் பேப்பரை சரவணன் பார்த்துவிடுகிறார்.இதனால் இருவருக்குள்ளும் பிரச்சனை உருவாகிறது. இந்த டைவர்ஸ பேப்பரை பார்த்து கோபமாகும் சரவணன்,  அதில் கையெழுத்து போட்டு கொடுத்துவிட்டு விரும்பிய வாழ்கையை அமைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்கிறார். இதனால் இருவரும் பிரிந்துவிடுவார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் அடுத்த எபிசோட்டில் என்ன நடக்கும் என்று ரசிகர்கள் ஒருபுறம் காத்துக்கொண்டிருக்கும் நிலையில், மறுபுறம் வில்லி அர்ச்சனாவின் அடுத்த திட்டம் என்னவாக இருக்கும் என்ற தீர்பார்ப்பும் மேலோங்கியுள்ளது. இதற்கு அர்ச்சனா பார்வதியை விக்கியிடம் சிக்க வைக்க சதி திட்டம் போட்டு செந்திலிடம் சிக்கிக்கொண்டதால், அர்ச்சனாவிடம்பேசுவதை செந்தில் நிறுத்திக்கொண்டுள்ளார்.

இதனால் இவர்களுக்குள் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையல், தற்போது செந்தில் கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் பாலாஜி தியாகராஜன் ராஜா ராணி 2 ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார். அதில் அர்ச்சனா அவரது காலில் விழுந்து கதறுவதுபோலவும், அதற்கு அவர்,  ‘அழு நல்லா அழு’ என சொல்லி அவரை அழ வைத்திருக்கிறார்கள்.

இதனால் ராஜா ராணி 2 சீரியலில் வரும் எபிசோடுகளில் இந்த காட்சிகள் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial raja rani serial archana down to senthil feet viral update

Next Story
நாடி நரம்பு முறுக்க முறுக்க… அரங்கம் முழுக்க தெறிக்க… இணையத்தை கலக்கும் அண்ணாத்த மோஷன் போஸ்டர்…
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com