Baakiyalakshmi Serial Rating Update : விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று பாக்யலட்சுமி. குடும்பங்கள் கொண்டாடும் வகையில் திரைக்கதை அமை்ககப்பட்டு்ளள இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ஒரு குடும்பத்தில் நடக்கும் பிரச்சினைகளை வெளியுலகம் அறியாத மருமகள் எதிர்த்து நின்று போராடும் இந்த சீரியலின் கதை பலரையும் கவர்ந்துள்ளது என்று சொல்லாம்.
இந்த சீரியல் கடந்த சில நாட்களாக ஒளிபரப்பாகும் எபிசோடுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கோபி ராதிகாவிடம் சுற்றக்கூடாதுஎன்று அவரது அப்பா சத்தியம் வாங்கியதும், எழில் அமிர்தாவை பிடித்துள்ளது என்று கூறியதும் பாக்ய புதிய பிஸினஸ் தொடங்கியது என பல பரபரப்பான திருப்பங்கள் ஏற்பட்டது. டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னணியில் இருந்து வரும் இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.
இதில நேற்றைய எபிசோட்டில், அமிர்தாவை பிடித்துள்ளதாக அவரது மாமனார் மற்றும் மாமியாரிடம் எழில் சொல்லி விடுகிறார். இதை கேட்டு அமிர்தாவின் அப்பா எழிலை வெளியில் போக சொல்கிறார். ஆனால் தனது நிலை குறித்து அவர்களிடம் எடுத்து கூறும் எழில் நீங்கள் எப்போது கூப்பிட்டாலும் நான் இங்கு வருவேன் என்று சொல்லிவிட்டு போய் விடுகிறான். அவன் வெளியில் சென்றபிறகு எழில் பற்றி இருவரும் பெருமையாக பேசிக்கொள்கின்றனர். இதில் அமிர்தாவின் மாமனார் எழில் வீட்டை நினைத்து கவலைப்படுகிறார்.
இதனிடையே இனியா ஸ்கூலில் ஆசிரியரின் தவறான கண்ணோட்டத்திற்கு ஆளாகிறாள். இதை பிரின்சிபாலிடம் சொல்ல போகுமபோது அந்த ஆசிரியர் வந்து தடுத்துவிடுகிறார். இதனால் இனியா அடுத்து என்ன முடிவு செய்ய போகிறார், ஸ்கூலில் நடந்தது பாக்யாவுக்கு தெரியவருமா, எழில் சொன்னதை கேட்டு அடுத்து அமிர்தா வீட்டில் என்ன நடக்கும் என்பது குறித்து பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ள நிலையில், அடுத்தடுத்து வரும் எபிசோடுகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதற்கிடையே கோபியின் நிலைமை குறித்து எவ்வித தகவலும் இல்லை பாக்யாவுக்கு கோபி பற்றிய உண்மை எப்போது தெரிய வரும் என்று எதிர்பாத்து காத்திருக்கும் ரசிகர்களுக்கு இதுநாள் வரை ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இதில் ராதிகாவை பார்க்க மாட்டேன் என்று குடும்பத்தினர் மீது சத்தியம் செய்த கோபி, தற்போது ராதிகாவை சந்தித்து வருவதோடு மட்டுமல்லாமல், அவளை திருமணம் செய்துகொள்வதாகவும், அவளது அம்மாவிடம் கூறியுள்ளார். இதனால் கோபியின் அடுத்த மூவ் என்ன என்பதில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஆனால் இது குறித்து தற்போது எந்த காட்சியும் வராது என்றும், அடுத்த வாரம் முழுவதும் இனியாவின் ஸ்கூல் பிரச்சனை பற்றிய கதைய ஒளிபரப்பாகும் என்று கூறி வருகினறனர்.அதிலும் ஒரு சில ரசிகர்கள் இனியாவின் ஸ்கூல் பிரச்சனையில் கோபியின் ரியாக்ஷனை பார்க்க ஆவலுடன் இருப்பதாக கூறியுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil