Tamil Serial Bharathi Kannamma Rating Update ; மாநிறமான நாயகி... அவரை காதலித்து திருமணம் செய்துகொள்ளம் நாயகன். இவர்களை காதலை பிடிக்காத நாயகனின் ப்ரண்டு இவர்களை சதி செய்து பிரித்து விடுகிறார். அதன்பிறகு நாயகனை திருமணம் செய்துகொள்ள அவனது ப்ரண்டு முயற்சி செய்கிறார். இதை தெரிந்துகொள்ளும் நாயகி என்ன செய்ய போகிறார்? மீண்டும் நாயகனுடன் சேர்ந்தாரா என்பதே பாரதி கண்ணம்மா சீரியலின் மொத்த கதை.
மலையாளத்தில் வெளியான கருத்த முத்து என்ற சீரியலை தெலுங்கில் கார்த்திகை தீபம் என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். அதே சீரியலை தமிழில் பாரதி கண்ணம்மா என்ற ரீமேக் செய்து ஒளிபரப்பாகி வருகிறது. விஜய் டிவியின் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு தனியாக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அருண்பிரசாத் (பாரதி) விணுஷா தேவி (கண்ணம்மா) வெண்பா (ஃபரீனர் ஆசாத்) ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகினறனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பர அதிரடி திருப்பங்களுடன் அரங்ககேறிய இந்த சீரியலின் சமீப எபிசோடுகள் ரசிகர்களின பொறுமையை ரொம்பவே சோதிக்கும் விதமாகத்தான் அமைந்தது. அதற்கு முக்கிய காரணம், கண்ணம்மா ரோலில் நடித்து வந்த ரோஷ்னி திடீரெ சீரியலில் இருந்து விலகியது, வில்லி வெண்பா பிரசவம் காரணமாக சீரியலில் இருந்து குட்டி பிரேக் எடுத்தும் கதையின் சுவாரஸ்யத்தை குறைத்தது.
ஆனால் சுவாரஸ்யத்தை அதிகரிக்கும் வகையில் பாரதி கண்ணம்மா இருவரும் ஒரே வீட்டில் வாழ்வதும் அவர்களுக்குள் நடக்கும் டாம் அன் ஜெர்ரி மோதலும் இயக்குநர் சீரியலை கலகலப்பாக கொண்டு செல்ல முயன்றாலும், இந்த காட்சிகள் ரசிகர்களை அவ்வளவாக ஈர்க்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இது போதாது என்று விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோ நாயகி அறந்தாங்கி நிஷா என்ட்ரி ஆனார். அதன்பிறகு பாரதி கண்ணம்மா சீரியலே இவரை நம்பித்தான் உள்ளது என்று கூறிவந்தனர்.
ஆனால் இந்த சீரியலின் தீவிர ரசிகர்கள் பலரும் கதை டிராக் மாறி சென்றுகொண்டிருக்கிறது. விறுவிறுப்பாக சென்ற கதையில் ஏன் இப்படி மாற்றுகிறீகள் என்று கேட்க தொடங்கினர். அதுமட்டுமல்லாமல் வில்லி வெண்பாவை திட்டி தீர்க்கும் ரசிகர்கள் கூட அவர் கதைக்குள் வந்தால் தான் சுவாரஸ்யமாக இருக்கும் என்று யோசிக்க தொடங்கிவிட்டனர். இதனால் பாரதி கண்ணம்மா சீரியலின் டிஆர்பி ரேட்டிங் தொடர் சரிவை சந்தித்து வருகிறது.
இதனை சரிகட்ட என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருந்த இயக்குநர் தற்போது வெண்பாவை மீண்டும் கதைக்குள் அழைத்து வந்துள்ளார். தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில், சட்டவிரோதமாக கருகலைப்பில் ஈடுபட்டதாக கைது செய்யப்படுவதுபோல் காட்டப்பட்ட வெண்பா தற்போது சிறையில் இருந்து ஜாமீனில் வருகிறார். அவரிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்விகள் கேட்கும்போது பதில் சொல்ல முடியாது என்ன பண்ண முடியும் என்று பழைய திமிருடன் சொல்லிவிட்டு செல்கிறார்.
அதன்பிறகு வீட்டிற்கு வரும் வெண்பாவிடம், வேலைக்காரி கண்ணம்மா மற்றும் பாரதி குறித்து சொல்லிவிட இதை கேட்ட வெண்பா கொஞ்சம் கூட கேப் விடாம அவளை டார்சல் செய்ய போகிறேன் என்று சொல்கிறார். இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் ஆமா வெண்பா நீ இல்லாம அவங்க ரெண்டுபேரும் சந்தோஷமா இருந்தாங்க என்று கூறியுள்ளார். அவர்கள் எப்போது சேருவார்கள் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்கள் அவர்கள் சேர்ந்ததையே பொருத்துக்கொள்ள முடியாமல் உள்ளது போல் இருக்கிறது இந்த பதிவு.
இவ்வளவு நாட்கள் ரசிகர்களுக்கு சளிப்பை ஏற்படுத்திய இந்த சீரியல் தற்போது வெண்பா என்ட்ரியால் மீண்டும் டிஆர்பியில் அதகளம் பண்ணம் என்று நம்பலாம். மேலும் அஞ்சலிக்கு மாத்திரிரை கொடுத்த வெண்பா மீது கோபமாக இருக்கும் பாரதி அடுத்து என்ன செய்ய போகிறார்... வெண்பா பாரதியை என்ன செய்ய போகிறார் என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.