scorecardresearch

என்ன பாரதி இன்னுமா இதெல்லாம் நம்புறீங்க… உங்க கஷ்ட காலம்…

Tamil Serial Update : நீங்கள் ரசிகர்களுக்கு ஆர்வத்தை கூட்டுகிறோம் என்று சொல்லி அவர்ளின் பொறுமையைத்தான் சோதித்துக்கொண்டிருக்கிறீர்கள்.

என்ன பாரதி இன்னுமா இதெல்லாம் நம்புறீங்க… உங்க கஷ்ட காலம்…

Tamil Serial Rating Update : எப்படி வெண்பா நாங்க நினைக்கிறது எல்லா அப்படியே சொல்றீங்க… நீங்க சொல்றது சரிதான் சீக்கிமாக சீரியலை முடிச்சிட்டு போங்க நாங்களாவது நிம்மதியா இருப்போம் என்று சொல்லும் அளவுக்கு பாரதி கண்ணம்மா படு மோசமான அரங்கேறி வருகிறது.

ஏங்க பாரதி சார் அது எப்படிங்க உங்களுக்குனு சுய சிந்தனையே கிடையாதா எல்லா தப்பையும் பண்ணியது வெண்பாதான் அது தெரியாம கடைசியில அவங்களோடவே ப்ரண்ஷிப் வச்சிக்கிரீங்க அப்புறம் காரணமே இல்லாம கோபப்படுறீங்க என்னதான் உங்க கதைனு தெரியவே இல்லையே.

லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்ட கண்ணம்மா எவ்வளவோ தான் தப்பு செய்யலனு சொல்லி கதறி அழுதாலும் நம்பாத பாரதி வெண்பா கொஞ்சம் எமோஷ்னலா பேசினாலே அப்படியே மன்னிச்சி பழையபடி ஃப்ரண்டா ஆகிடுறாரு இதுக்கு என்ன காரணம் பால்ய நட்பா இல்ல தன் எதிரியை மன்னிக்கும் மனப்பக்குவமா?

இப்போ வெண்பாவோட அம்மா பாரதிக்கு வெண்பா மேல லவ் இல்லனு கண்டுபிடிச்சிட்டாங்க. அதனால் வெண்பாவுக்கு வேற மாப்பிள்ளை பார்க்க போறதா சொல்றாங்க அதை கேட்ட வெண்பா டக்குனு பாரதியை பாக்க ஓடி வராங்க முதலில் பாரதி கோவமாக பேசினாலும், அடுத்த வெண்பாவின் நடிப்பை பார்த்து மனம் இறங்கி விடுகிறார்.

இதே மாதிரி தான் வெண்பா ஜெயிலுக்கு போனபோதும் நடந்தது. இதே சீன் எத்தனை தடவைதான் காமிப்பிங்க டைரக்டர் சார். அடுத்து ஏதாவது பண்ணுங்க. கண்ணம்மா எவ்வளவுதான் நல்லவள் என்று யார் எடுத்து சொன்னாலும் பாரதி அதை பற்றி யோசிக்கவே மாட்டேங்கிறார். ஆனால் வெண்பா ஒரு பொய் சொன்னா போதும் உடனே நம்பி விடுகிறார்.

ஒரு பெண்ணுக்கு இன்னொரு பெண் மீது இவ்வளவு வன்மம் வேண்டுமா? மக்களோட வாழ்க்கையைான் சீரியலா எடுக்குறோம் என்றுசொன்னாலும், யாருடைய ரியல் லைஃப்பிலும் இதுபோன்ற ஒரு சந்தேகம் இத்தனை வருடம் இருக்ககுமா என்று தெரியாது. அதேபோல் இத்தனை ஆண்டுகள் உண்மையை தெரிந்துகொள்ள ஒரு சிறிய முயற்சி கூட எடுக்காமல் இருந்திருப்பார்களா என்பது கேள்விக்குறி.

நீங்கள் ரசிகர்களுக்கு ஆர்வத்தை கூட்டுகிறோம் என்று சொல்லி அவர்ளின் பொறுமையைத்தான் சோதித்துக்கொண்டிருக்கிறீர்கள். அடுத்து வரும் எபிசோடுகளிலாவது புதியதாக கதையில் ஒரு திருப்பதை கொடுங்கள். கடைசியாக ஹேமாதான் கண்ணம்மா பொண்ணு என்று தெரியபடுத்தி ட்விஸ்ட் தான் வந்தது.

அதன்பிறகு பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோடுகள் நகருகிறதே தவிர சீரியலின் கதை நங்கூரம் போட்டது போன்று அதே இடத்தை தான் சுற்றிக்கொண்டிருக்கிறது. விரைவில் விருவிறுப்பை கூட்டுங்கள் இயக்குநர் அவர்களே….  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial rating bharathi kannamma update in tamil