scorecardresearch

Tamil Serial Rating : அதென்ன ஒரு நாள் ஜெயில் தண்டனை? கேள்வி படாத ஒரு முறையாக இருக்கு… ரோஜாவுக்கு செக்

Tamil Serial Update : சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது

Tamil Serial Rating Update : தற்போதைய காலகட்டத்தில் சீரியல் ரசிகர்களும் அதில் நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகளே மக்கள் மத்தியில அதிக வரவேற்பைபெற்று வருகினறனர். ஆனால் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதை கவர்ந்ததா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல் எத்த்தனை சீரியல்கள் ஒளிபரப்பானாலும் வார இறுதியில் வெளியாகும் டிஆர்பி ரேட்ங்கில் முதல் 5 இடங்களை பெறும் சீரியல்களே அதிக கவனம் பெறுகின்றன. அதற்காக மற்ற சீரியல்கள் எல்லாம் சரியாக போகவில்லை என்று அர்த்தம் அல்ல.

சில சீரியல்கள் அதிகப்படியான ரசிகர்களின் மனதை கவர தவறி விடுகின்றன என்று கூறலாம். இதில் சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்படும். அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள ப்ரமோ வீடியோக்களில் எந்த சீரியல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்போம்.

பாண்யடியன் ஸ்டோர்ஸ் :

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் வெளியில துரத்திவிடுங்க அப்போதான் கஷ்டம் தெரியும் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் உலக மகா நடிப்புடா சாமி தனம் மெதுவா அழு கண்ணு வலிக்க போகுது என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் கண்ணன் பேச வரும் போது யாரும் கண்டுக்கல இப்ப வாங்க எல்லாரும் என கூறியுள்ளார். மேலும் ஒரு ரசிகர் அடி வாங்குறப்பதான் அண்ணன் ஞாபகம் வருதா என கேட்டுள்ளார். கண்ணனை கல்யாணம் செய்து ஐஸ்வர்யா தனத்துக்கு தங்கையாகி விட்டாள் என கூறியுள்ளார்.

பாரதி கண்ணம்மா :

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் ஓல்டு மெமரீஸ் என்று கூறியுள்ளார். மேலும் பலரும் இதற்கு தான் இவ்வளவு நாளா காத்திருந்தோம் என்று குறும் வகையில் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். மேலும் பலரும் இந்த சீன அப்படியோ கன்டினியூ பண்ணுங்க டைரக்டர் சார் என்று பதிவிட்டுள்ளனர். ரெண்டுபேரும் எவ்ளோ ஜாலியா இருக்காங்க அப்படியோ டிஎன்ஏ டெஸ்ட் எடுங்க என்று ஒரு ரசிகர் பதிவிட்டுள்ளார்.

பாக்யலட்சுமி

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் பாக்யா ரொம்ப பாவம் என்று பதிவிட்டுள்ளனர். மேலும் ஒரு ரசிகர் எழில் ரியாக்ஷன் சூப்பர் என்று பதிவிட்டுள்ளார். மேலும் பலரும் பாக்யாவின் வெகுலித்தனத்தை கோபி பயன்படுத்திக்கொள்வதாக கூறியுள்ளனர். பாக்யா மாமியாராகவும், அம்மாவாகவும் மருமகளாகவும் சிறப்பாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். குடும்பத்தினர் அனைவரையும் பாக்யா நல்லா புரிந்து வைத்திருப்பதாகவும் கூறியுள்ளனர்.

ராஜா ராணி 2

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் சந்தியாவை பாராட்டி வருகின்றனர். அதில் ஒரு ரசிகர் சூப்பர் சந்தியா என்று பதிவிட்டுள்ளார். மேலும் ஒரு ரசிகர் இவங்களுக்கு நடிக்கவே தெரியல என்றும், இப்படியெல்லாம் பேசுனா நீங்க ஹீரொயின் னு நெனப்பா என்றும் கூறியுள்ளனர். மற்றொரு ரசிகர் நல்ல சோசியல் மெசேஜ் என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் இந்த டைலாக் கேட்டு கேட்டு வெறுத்துட்டேன் என்று பதிவிட்டுள்ளார். மேலும் ஒரு ரசிகர் உங்கள யார் நடிக்க கூப்டா என்று கேட்டுள்ளார்.

ரோஜா

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் ரோஜா திரும்ப வீட்டுக்கு வந்ததில் எல்லாருக்கும் மகிழ்ச்சி ஆனால் இந்த அனு நடிக்கிறா அர்ஜுன் கண்டு பிடிக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் ஆயுள் முழுக்க அண்ணப்பூரணி ஜெயிலில் இருந்தாலும் செண்பகம் சீன் ல வர்ற வரைக்கும் எபிசொட் முடியாது என பதிவிட்டுள்ளனர். அதென்ன ஒரு நாள் ஜெயில் தண்டனை? கேள்வி படாத ஒரு முறையாக இருக்கிறது என ஒரு ரசிகர் கேட்டுள்ளார். இனி என்ன வழக்கம் போல அண்ணப்பூரணியும்…சாக்சியும் கூட்டணி வைப்பாங்க என ஒரு ரசிகர் கூறியுள்ளார்.

இந்த கருத்துக்களின் படி பார்க்கும்போது இன்று பாக்கியலட்சுமி சீரியலுக்கே அதிக எதிர்பார்ப்பு உள்ளது என்று கூறலாம். பாக்யா குடும்பத்தின் மீது உள்ள அக்கரையை ஒவ்வொரு முறையும் சரியாக நிரூபித்து ஸ்கோர் செய்கிறார். இதனால் இந்த சீரியலுக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது என்று கூறலாம். மற்றபடி அனைத்து சீரியல்களும் அந்தந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் என்று கூறலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial rating on promo video update