Advertisment

Tamil Serial Rating : கல்யாணம் நடக்காதுனு ஊருக்கே தெரியும்பா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் ரகசியத்தை வெளியிட்ட ரசிகர்கள்

Tamil Serial Update : சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது

author-image
WebDesk
Jul 27, 2021 18:53 IST
Tamil Serial Rating : கல்யாணம் நடக்காதுனு ஊருக்கே தெரியும்பா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் ரகசியத்தை வெளியிட்ட ரசிகர்கள்

Tamil Serial Rating Update : தற்போதைய காலகட்டத்தில் சீரியல் ரசிகர்களும் அதில் நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகளே மக்கள் மத்தியில அதிக வரவேற்பைபெற்று வருகினறனர். ஆனால் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதை கவர்ந்ததா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல் எத்த்தனை சீரியல்கள் ஒளிபரப்பானாலும் வார இறுதியில் வெளியாகும் டிஆர்பி ரேட்ங்கில் முதல் 5 இடங்களை பெறும் சீரியல்களே அதிக கவனம் பெறுகின்றன. அதற்காக மற்ற சீரியல்கள் எல்லாம் சரியாக போகவில்லை என்று அர்த்தம் அல்ல.

Advertisment

சில சீரியல்கள் அதிகப்படியான ரசிகர்களின் மனதை கவர தவறி விடுகின்றன என்று கூறலாம். இதில் சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்படும். அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள ப்ரமோ வீடியோக்களில் எந்த சீரியல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்போம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர்  மொத்தத்துல அண்ணன் தம்பி 4 பேர் கல்யாணமும் கலவரத்துல தான் நடக்குது என கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் ரொம்ப பில்டப் எல்லாம் வேணாம்! கல்யாணம் நடக்காதுனு மீனாவோட பொண்ணுக்கு கூட தெரியும் என பதிவிட்டுள்ளார். மேலும் ஒரு ரசிகர் வளைகாப்பு முடிஞ்சி இனி கல்யாணம்தான் போல என்று பதிவிட்டுள்ளார். இந்த பிரஷாந்த் வில்லண் லெவலுக்கு வொர்த் இல்லை என்று ஒரு ரசிகர் கூறியுள்ளார்.

மற்றொரு ரசிகர் அடம்பிடிச்சி வாங்க அது என்ன குச்சி மிட்டாயா? பொண்ணுடா என்று பதிவிட்டுள்ளார். இது ஒரு இரண்டு வாரம் ஓடும்.. எப்படியும் கல்யாணம் நடக்காது னு பாக்குற எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தானே இருந்தாலும் அடுத்த சீன் என்னனு தெரியாத மாதிரியே பாக்குறது தான் சிறப்பு என மற்றொரு ரசிகர் கூறியுள்ளார். மேலும் பலரும் இந்த கல்யாணம் நடக்காது என்று தெரியும் எள்றே கமெண்ட் செய்துள்ளனர்.

பாக்கியலட்சுமி

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் வாழைப்பழ தோல் மாட்டுக்குதான் போடுவோம் ஆனா நீங்க ட்ஸ்பின்ல போடுறீங்கலா என்று கேட்டுள்ளார். மற்றபடி பலரும் அப்பா தப்பு செய்தாலும்அவரை காப்பாற்றும் எழிலுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

ராஜா ராணி 2

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் இப்போதா சீரியல்ல நல்ல சீன கொண்டு வரீங்க என்று கூறியுள்ளனர். கடந்த சில நாட்களாக இவர்கள் இருவருக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்தபோது அனைவரும் போர் அடிக்குது என்று சொல்லி வந்தனர். தற்போர் ரொமானஸ் கட்சிக்கு வரவேற்பு அளித்துள்ளனர்.

ரோஜா :

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் அனுவை திட்டி கமெண்ட் பதிவிட்டு வருகினறனர். அதில் ஒரு ரசிகர் நாசமா போனா அணு கண்ண முழிச்சுகிச்சி உயிரை வாங்க போகுது என பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் டைகர் மாணிக்கம் என்ன தான் பக்கம் பக்கமா வசனம் பேசுனாலும் அர்ஜுன் தான் ஜெயிப்பான் பாரு அப்போ உன் மூக்கு உடையறது பார்த்து சந்தோசமா ரசிப்போம் என பதிவிட்டுள்ளார். என்னடா இது கோமா பேசன்ட்லா எழுந்து ஓடராங்க என ஒரு ரசிகர் கமெண்ட் செய்துள்ளார்.

ரசிகர்களின் கருத்தக்களை குறித்து பார்த்தால், இன்று ரோஜா சீரியலுக்கே அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. அனு தப்பித்தது., ரோஜா மர்ம உருவம் பார்த்த்து என பல எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.மற்ற்படி அனைத்து சீரியல்களும் அந்தந்த ரசிகர்களை திருப்திப்படுத்தும் என நம்பலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Tamil Serials
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment