Raja Rani 2 New Promo Update In Tamil : தற்போதைய காலகட்டத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வந்தாலும், பெண்கள் மீதான வன்கொடுமை தாக்குதல், பாலியல் தொல்லைகள் இப்போதும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. இநத கொடுமைகளுக்கு எதிராக பல குரல்கள் ஒலித்துக்கொண்டிருந்தாலும், பாலியல் கொடுமைகள் இன்னும் குறைந்தபாடிவில்லை.
இந்த பாலியல் வன்கொடுமை குறித்து விழிப்புணவர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விளம்பரங்கள், மற்றும் பெண்களுக்காக கவுன்சிலிங் நடத்தப்பட்டு வரும் நிலையில், டிவி சீரியல்கள் மூலமாகவும், பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காட்சிகள் வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், விஜய் டிவியின் ராஜா ராணி சீரியல் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
ஒரு குடும்பத்தில் இருக்கும் சந்தியா அர்ச்சனா என்ற இரண் மருமகள்களில், அர்ச்சனா தனது மாமியார் வீட்டிற்கு துரோகம் செய்கிறார். மாமியார் மீது போலீஸ் கம்லைண்ட், பார்வதிக்கு கெடுதல், அவரது திருமணத்தை நிறுத்த சதி, உள்ளிட்ட ஏராளமான வேலைகளை பார்த்து வருகிறார். இந்த சதிச்செயலை கண்டுபிடிக்கும் சந்தியா இதில் இருந்து பார்வதியை காபாற்றிக்கொண்டே இருக்கிறார்.
அப்படி இருக்கும் நிலையில், தற்போது பார்வதிக்கு திருமணம் நடக்க இருக்கிறது. இந்த திருமணத்தை தடுத்து நிறுத்த சதித்திட்டம் தீட்டும் அர்சசனா பார்வதியின் முன்னாள் காதலனிடம் சொல்லி கல்யாணத்தை நிறுத்த ஏற்பாடு செய்கிறார். இதனால் அதிர்ச்சியடையும் பார்வதி என்ன செய்வது என்று தெரியாமல் அலைமோதிக்கொண்டிருக்கிறார்.
இந்த சதித்திட்டத்தை தற்போது புரிந்துகொண்ட சந்தியா பார்வதியை காப்பாற்ற அடுத்து என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது குறித்து தற்போது விஜய் டிவி ப்ரமோ வெளியிட்டுள்ளது. வித்தியாசமான உள்ள இந்த ப்ரமோவில், விஜய் டிவியின் தென்றல் வந்து என்னைத் தொடும், பாக்யலட்சுமி, பாரதி கண்ணம்மா உள்ளிட்ட தொடர்களின் நாயகிகள் சந்தியாவுக்கு ஆதரவாக இருப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த ப்ரமோ வைரலாகி வரும் நிலையில், பாக்யா:என் வீட்டுகார்னா மட்டும்தா பயம் மத்தபடி நா பயங்கரமான தைரியசாலி என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர், இந்த புது சமூகம் படைக்கிற விஷயம் சிவகாமி மாமிக்கு தெரியுமா என்று கேட்டுள்ளார். மேலும் ஒரு ரசிகர் யார் பேசினாலும் பரவாயில்லை ஆனால் இந்த பேக்குலட்சுமி எல்லாம் தைரியத்தை பற்றி பேசுது என கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் பாரதி கண்ட புதுமைப்பெண் கோபிய கண்டா பதுங்கும் பெண்… என்று கூறியுள்ளார்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“