Tamil Serial Rating : என்ன ரோஜா ஜெயில்ல டான்ஸ் ஆடுறீங்க… ரசிகர்களின் மைன்ட் வாய்ஸ்

Tamil Serial Update : சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது

Tamil Serial Rating Update : தற்போதைய காலகட்டத்தில் சீரியல் ரசிகர்களும் அதில் நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகளே மக்கள் மத்தியில அதிக வரவேற்பைபெற்று வருகினறனர். ஆனால் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதை கவர்ந்ததா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல் எத்த்தனை சீரியல்கள் ஒளிபரப்பானாலும் வார இறுதியில் வெளியாகும் டிஆர்பி ரேட்ங்கில் முதல் 5 இடங்களை பெறும் சீரியல்களே அதிக கவனம் பெறுகின்றன. அதற்காக மற்ற சீரியல்கள் எல்லாம் சரியாக போகவில்லை என்று அர்த்தம் அல்ல.

சில சீரியல்கள் அதிகப்படியான ரசிகர்களின் மனதை கவர தவறி விடுகின்றன என்று கூறலாம். இதில் சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்படும். அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள ப்ரமோ வீடியோக்களில் எந்த சீரியல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்போம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் :

தனம் வளைகாப்பு

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் பலரும்,  முன்னாள் முல்லை சித்ராவை மிஸ் செய்வதாக கூறியுள்ளனர். அதில் ஒருவர் காவியாவை சித்ராவுடன் ஒப்பிட வேண்டாம் காவியா அவருக்கு கொடுத்த வேலையை நன்றாக செய்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார். மற்றப ரசிகர்கள் பலரும் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்களையே கூறி வருகினிறனர். இதில் சில இந்த சீனே இன்னும் ஒரு வாரத்துக்கு ஓட்டுவீங்களா என்று பதிவிட்டுள்ளார்.

கடந்த இரு தினங்களாக ஜீவா மாமனார் அடித்த்து தொடர்பான காட்சிகள் பலரும் விரும்பி பார்த்த நிலையில் சிலர்  ரொம்பஓவர் என்று கமெண்ட் செய்திருந்தனர். தற்போது வளைகாப்பு நிகழ்ச்சிக்கும் பலர் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், சிலர் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஏழை குடும்பம் அவங்களுக்கு எப்படி இந்த அளவுக்கு பணம் கெடச்சிது என்று கூறியுள்ளர்.

பாக்கியலட்சுமி :

மயூ ஆவேசம்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் பலரும மபூக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும் பலர் கோபி குறித்த ட்ரோல் செய்து வருகின்றனர். கடந்த வாரம் முழுவதும் காமெடி கிங்காக இருந்த கோபி இப்போ சீரியஸ் கிங்கா ஆகிட்டாரு என்று கமெண்ட் செய்து வருகின்றனர். மயூவின் அப்பா அவளை சந்தித்து பேசியது குறித்தும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

பாரதி கண்ணம்மா

கண்ணம்மா வீட்டில் பாரதி

இந்த ப்ரமோவை பார்த்த பலரும் சூப்பர் என்று கமெண்ட் கொடுத்துள்ளனர். இதில் ஒருவர் பழைய பாரதியா இருந்தா கண்ணம்மா பேசுரத ரசிச்சிட்டு இருப்பாரு அதெல்லாம் இப்போ இல்ல என பதிவிட்டுள்ளார். இதில் பலரும் பாவம் சீக்கிரம் பாரதிக்கு உண்மை தெரியனும் என்று பதிவிட்டுள்ளனர். மற்றொருவர் இவன் நல்லா முடிவு பண்ணாலும் கூட ஒரு பேய் இருக்கு அது சும்மா விடாது என்று பதிவிட்டுள்ளார்.  மற்றொரு ரசிகர் சீக்கரமே பாரதி மனசு மாறுவார் என்றும், அருவை மாதிரி இழுக்குரிங்களேடா என்று மற்றொரு ரசிகரும் பதிவிட்டுள்ளனர்.

ராஜா ராணி 2

சரவணன் – சந்தியா – சண்டை

இந்த ப்ரமோவை பார்த்த பலரும் கோபத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர். அதில் ஒரு ரசிகர் பேசாம டைவர்ஸ் செய்வது இரண்டு பெருக்கும் நல்லது என்று பதிலிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் ஏன் இந்த சீரியலை இப்படி கொண்டு போறீங்க இது மட்டும் தான் நல்லாருக்குன்னு நினைத்தேன் அட போங்கடா என்று பதிவிட்டுள்ளார்.  மேலும் பல நல்லா போய்க்கிட்டு இருந்த சீரியலை இப்படி செய்றீங்களே என்று பதிவிட்டுள்ளனர்.

ரோஜா சீரியல்:

ரோஜா – அர்ஜூன் – சாக்ஷி

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் செம்மையாக கலாய்த்து வருகின்றனர். இதில் ஒரு ரசிகர் அடப்பாவிகளா சீரியலா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா டா உங்க அலப்பறை எல்லை மீறி போய்கிட்டு இருக்கே என பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் என்னங்கடா இது ஜெயில்ல டான்ஸ் ஆடிக்கிட்டு இருக்கீங்க என பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் இந்த குரங்கு வித்தை காட்டி சாக்சியை நீயே பயமுறுத்தி இருக்கலாமே என பதிவிட்டுள்ளார்.  பைட் சீன்னு நெனச்சா அப்பபுறம் பாத்தாதா தெரியுது டான்ஸ் சீன்னு என்று மற்றொருவர் பதிவிட்டுள்ளார்.

இதில் ரசிகர்களின் கருத்துப்படி பாக்கியலட்சுமி சீரியலே ஓரளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்று சொல்லாம். மற்றபடி அனைத்து சீரியலும் ரசிகர்களின் ட்ரோலுக்கு உள்ளாகியுள்ளது.இதில் பாரதி கண்ணம்மா சீரியலி சிறிது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்று கூறலாம். மற்றபடி அனைத்து சீரியல்களும் அவரவர் ரசிகர்களை திருப்திப்படுத்தும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial rating to update

Next Story
Tamil Serial news: ராஜா ராணியில் நிலவும் குழப்பம்… எப்போது முடியும்?Vijay TV Serial, Raja Rani 2 Serial, Raja Rani 2 Serial today episode, Raja Rani 2, Alya manasa, Sidhu, Sandhya, விஜய் டிவி, ராஜா ராணி 2, ராஜா ராணி 2 சீரியல், ஆல்யா மானசா, சித்து, சந்தியா, சரவணன், சிவகாமி, சுந்தரம், அர்ச்சனா, Saravanan, Sivagami, Sundaram, Archana, tamil tv serial news, raja rani 2 serial news
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express