Tamil Serial Rating : எப்படி இருந்த மனுசன இப்படி ஆகிட்டீங்களே : பாக்யலட்சுமி கோபியின் பரிதாபம்

Tamil Serial News : தமிழ சீரியலில் இன்று எந்த சீரியல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை இந்த பதிவில் பார்போமா?

Tamil Serial Rating Update : தற்போதைய காலகட்டத்தில் சீரியல் ரசிகர்களும் அதில் நடித்து வரும் நடிகர் மற்றும் நடிகைகளே மக்கள் மத்தியில அதிக வரவேற்பைபெற்று வருகினறனர். ஆனால் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதை கவர்ந்ததா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல் எத்த்தனை சீரியல்கள் ஒளிபரப்பானாலும் வார இறுதியில் வெளியாகும் டிஆர்பி ரேட்ங்கில் முதல் 5 இடங்களை பெறும் சீரியல்களே அதிக கவனம் பெறுகின்றன. அதற்காக மற்ற சீரியல்கள் எல்லாம் சரியாக போகவில்லை என்று அர்த்தம் அல்ல.

சில சீரியல்கள் அதிகப்படியான ரசிகர்களின் மனதை கவர தவறி விடுகின்றன என்று கூறலாம். இதில் சீரியல்களின் அன்றைய எபிசோடு குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்படும். அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள ப்ரமோ வீடியோக்களில் எந்த சீரியல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை பார்போம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் :

ஜனார்த்தன் மீது தாக்குதல் – ஜீவா கோபம்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் ஜீவாவிற்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இதில் ஒருவர் ஜீவா நடிப்பு சூப்பர் என்றும், கதிர் கூட கோபப்பட்டார் என்று கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். ஆனால் ஒரு சில ரசிகர்கள் இது கொஞ்சம் ஓவர் என்று கூறியுள்ளனர். இதில் மற்றொரு ரசிகர் ஜீவா இதை உங்க அம்மாவும் அண்ணியும் பாத்தாங்கனா அவ்வளோதான் ஜீவா மீனா குடும்பத்தோட போய்ட்டானு சொல்லிலுவாங்க என பதிவிட்டுள்ளார்.

கடந்த இரு தினங்களாக கண்ணன் பிரச்சனை கொஞ்சம் விறுவிறுப்பை குறைத்த நிலையில், தற்போது ஜனார்த்தன் பிரச்சணை ஏதிர்பார்ப்பை  அதிகப்படுத்தியுள்ளது.

பாக்கியலட்சுமி :

வில்லன் கோபி – இப்போ காமெடி கோபி

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் கோபியை காலாய்த்து வருகின்றனர்.  வீட்டிங்கு பக்கத்தில் குடி வந்து விட்ட ராதிகாவை கோபி அடிக்கடி சந்தித்து வரும் நிலையில், ராதிகாவின் மகள் மயூ பாக்யா வீட்டிற்கு வருகிறாள். இதனால் தான் வீட்டில் எப்பேது மாட்டிக்கொள்வேன் என்று கோபி பயந்துகொண்டிருக்கிறார். அடப்பாவிகளா எப்படி இருந்த கோபிய இப்படி ஆக்கிட்டீங்களே என்று ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

பாரதி கண்ணம்மா

ஹேமா – சமையல் அம்மா – பாரதி

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் ஆதரவாக்வும் கலாய்த்தும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இதில் இந்த உலகமே அழிஞ்சாலும் டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க மாட்டான் யார் எல்லாம் சொல்றீங்க என ஒரு ரசிகரும், பாரதியும் கண்ணம்மா வும் குழந்தை குட்டி ஓட சந்தோஷமா இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும் என மற்றொரு ரசிகரும் பதிவிட்டுள்ளனர்.

மேலும் அப்பாடி… கண்ணம்மா இப்ப தான் உப்பு போட்டு சோறு சாப்பிடுற மாதிரி கொஞ்சம் ரோஷமா பேசியிருக்கா… சந்தோசமா இருக்கு… என ஒரு ரசிகர் பதிவிட்டுள்ளார். நோய்க்கு மருந்து நல்ல சமையல்ன்னு தெரியும் முதல் முறையா நோய்க்கு மருந்து சமையல் அம்மான்னு கேள்விபடுறேன் என பதிவிட்டுள்ளார்.

கண்ணம்மா இப்படி சொல்லிருக்கலாம்….என் கூட டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க வா அப்போ நான் ஹேமா வ பாத்துக்கிறேன் னு அப்போவாச்சும் அவன் ஓகே சொல்லிருப்பானா.. மாட்டான் யாரெல்லாம் டிஎன்ஏ டெஸ்ட் எடுகுர எபிசோட் ஆக வெயிட் பண்ணுறீங்க என பதிவிட்டுள்ளார். இந்த முறை ஹேமாவுக்கு முந்திரி அல்வா செய்து கொடு கண்ணம்மா .அப்படியே நெய் அதிகம் ஊற்று பாரதி மனம் மாறிடுவான் என மற்றொரு ரசிகர் பதிவிட்டுள்ளார்.

ராஜா ராணி 2:

சிவகாமி ஐடியா – சந்தியா – சரவணன் சமாதானம்

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் சிலர் எதிர்மறையாக கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒரு ரசிகர் ஹேப்பியா மாறும்னு பாத்தா சீரியல் இருக்க இருக்க சேடாதா போகுது என பதிவட்டுள்ளார். இதில் சிலர் சூப்பர் என்றும் பதிவிட்டுள்ளனர்.  கடந்த சில நாட்களாக சரவணன் சந்தியா இணைந்து இருந்த இருந்த போது விறுவிறுப்பாக சென்ற இந்த சீரியல் தற்போது இவர்களிடம் புரிதல் இல்லாத்தால் கொஞ்சம் விறுவிறுப்பு குறைந்துள்ளது.

ரோஜா :

ரோஜா – அர்ஜூன் இருவரும் சிறை

இநத ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் டைரக்டரை கலாய்த்து வருகின்றனர். அதில் ஒரு ரசிகர் டைரக்டர் கூட ஹோமா ல தான் இருப்பாரோ. என்ன பண்றதுன்னு தெரியாம பழசையே ஆல மாத்தி மாத்தி ஜெயில்க்கு கூப்டு போராரு என பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் ப்ளீஸ் டைரக்டர் இந்த புலி மானிக்கம் கேரக்டர்ர கிளோஸ் பன்னிரு இல்ல காமிகாத அந்த பூதத்த என பதிவிட்டுள்ளார்.

மேலும் ஒரு ரசிகர் கத்துன உடனே எட்டிக் குதிக்கக் போறாரா ரோஜா இதுக்கு மேலயும் கத்தினாள் தொண்டை கட்டிவிடும் ரோஜா என பதிவிட்டுள்ளார். ஏம்மா நான் பக்கத்துல இருந்து கத்தினாலே என் வீட்டு யாரும் ஏன் கேக்கலை நீ என்னடானா ஜெயில் இருந்து கத்தினா என்ன அர்த்தம்

ரசிகர்களின் கருத்துக்கள் படி பார்க்கும்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் சீன் ஓவராக இருக்கு என்ற கருத்து நிலவினாலும், குடும்ப சென்டிமன்ட் ரசிகாகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இது வழக்கமாக கிடைக்கும் வரவேற்ப்புதான் என்றாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை தரக்குறைவாக நினைக்கும் ஜனார்த்தன் பிரச்சனைக்கு இவர்கள் உதவுவதால் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இதில் கோபியின் காமெடி புலம்பலுக்காக பாக்கியலட்சுமி சீரியல் எதிர்பார்ப்பக்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial rating update in tamil

Next Story
Vijay TV Serial: சந்தியாவுக்கு புருஷனை சமாதானப்படுத்த ஐடியா கொடுத்த மாமியார் சிவகாமி!vijay tv, tamil tv serial news, raja rani 2, raja rani 2 serial news, raja rani 2 serial today episode story, விஜய் டிவி, ராஜா ராணி 2, ராஜா ராணி 2 சீரியல், ஆல்யா மானசா, சிவகாமி, சரவணன், அர்ச்சனா, raja rani 2 serial today episode story update, raja rani 2 serial today episode news, alya manana, sandhya, saravanan, archana, sendhil
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express